Wednesday, June 29, 2011

உங்கள் வார்த்தையை 20 மொழிகளில் நொடியில் மொழிபெயர்க்கலாம் ...


சில நொடிகளில் நாம் கொடுக்கும் வார்த்த்தையை ஒரே நேரத்தில் 20 மொழிகளில் அழகாக மொழி பெயர்த்து கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
பிறந்த நாள் வாழ்த்து மற்றும் நம் அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளை உலகின் முன்னனி மொழிகளில் தெரிவித்தால் எப்படி இருக்கும் , ஒரு முறை நாம் தட்டச்சு செய்ய்த வார்த்தையை ஒரே நேரத்தில் எளிதாக 20 மொழிகளில் மொழிபெயர்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.translation-telephone.com
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் Translate ( மொழி  மாற்றம் ) செய்ய வேண்டிய வார்த்தையை  கொடுத்து Go என்ற பொத்தானை  சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தட்டச்சு செய்த வார்த்தைகள் 20 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நமக்கு காட்டப்படும். கூகிள் துணையுடன்  இது வார்த்தைகளை மொழி பெயர்த்து நமக்கு காட்டுகிறது. ஒவ்வொரு மொழியின்  பெயரும் அந்த மொழில் மொழி பெயர்க்கப்பட்ட வார்த்தைகளும் நமக்கு காட்டப்படும். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் URL இணையதள முகவரியை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் மாற்றிய வார்த்தையை அவர்களும் தெரிந்து கொள்ளலாம்.

ஆண் குரலை பெண் குரலாகவும் , பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்றும் இலவச மென்பொருள்.


ஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல் போல் மாற்ற உதவும் இலவச மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஆண்கள் பேசும் குரலும் பெண்கள் பேசும் குரலும் தனியாக தெரியும் ஆனால் மொபைல் போன்களில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே பெண்கள் பேசுவது போல் மாற்ற ஏற்கனவே பல மென்பொருட்கள் உள்ளன, ஆனால் கணினியில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே நேரடியாக பெண்கள் பேசுவது போல் மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது.
தறவிரக்க முகவரி :http://www.screamingbee.com/product/MorphVOXJunior.aspx
மேலே கொடுத்திருக்கும் முகவரியை சொடுக்கி இந்த மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவலாம். மென்பொருளை இயக்கி யாருடைய குரலில் கேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து நாம் பேசினால் போதும், உதாரணமாக ஒரு ஆண் பேசும் போது பெண் குரலை தேர்ந்தெடுத்துவிட்டு பேச ஆரம்பித்தால் அது பெண் பேசுவது போல் இருக்கும். Man , Tiny Folks , Woman என்ற மூன்று விதமான ஆப்சன் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் இதில் Tiny Folks என்பது கார்டூன் கேரக்டர் பேசுவது போல் இருக்கும். பல சமயங்களில் சாட்டிங்கில் பேசுவது பெண் தான் என்று நினைத்திருப்போம் உண்மையிலே அவர் இது  போன்று இருக்கும் மென்பொருளை பயன்படுத்தி தான் பேசிக்கொண்டிருப்பார். வேடிக்கைக்காக ஆண் குரலை பெண் குரலாகவும் பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Friday, May 6, 2011


USB DRIVEஇல் உள்ள FILEகளை யாருக்கும் தெரியாமல் திருட !

உங்கள் நண்பர்களின் usb drive இல் உள்ள file களையோ அல்லது உங்களுக்கு தெரியாதவர்களின் usb drive இலுள்ள file களையோ அவர்கள் அறியாமலே திருடுவதற்கு Hidden file Copire என்ற இந்த மென்பொருள் உதவுகிறது.
அவர்கள் உங்கள் கணினியில் தங்கள் usb drive ஐ பயன்படுத்தும் போது அவர்களது usb drive இல் உள்ள file கள் அனைத்தும் அவர்களுக்கு தெரியாமலே உங்களது கணினியில் copy செய்யப்பட்டுவிடும். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இருக்காது. இந்த மென்பொரு மூலம் copy செய்யப்படும் File கள் C:\WINDOWS\sysbackup என்ற இடத்தில் save செய்யப்படும்.
மென்பொருள் தரவிறக்கம் செய்ய

http://www.mediafire.com/?i25zp596mhukuuj