Wednesday, June 29, 2011

ஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளைப் பயன்படுத்த Multi Skype Launcher

ஸ்கைப் சேவையை உலகெங்கும் பலர் இண்டர்நெட் வழியாக பேசுவதற்கும் வீடியோ காலிங் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை Voive Over IP என்ற தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இதன் மூலம் ஸ்கைப் பயனர்கள் மற்ற ஸ்கைப் பயனர்களுக்கு இலவசமாகப் பேச முடியும். தொலைபேசி மற்றும் வேறு அழைப்புகளுக்கு கணக்கிலிருந்து பிடித்துக் கொள்வார்கள். தற்போது இந்த சேவையை மைக்ரோசாப்ட் 8.5 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தற்போது 663 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். 

ஆனால் இந்த சேவையில் ஒரு நேரத்தில் ஒரு பயனர் கணக்கைத் தான் பயன்படுத்த முடியும். உங்களுக்கு ஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளில் நுழைய வேண்டும் என ஆசைப்பட்டால் ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது. அதன் பெயர் Multi Skype Launcher. இந்த மென்பொருள் மூலம் ஒரே கணிணியில் பல ஸ்கைப் கணக்குகளில் நுழைந்து பல நண்பர்களிடம் பேச முடியும்.

இந்த மென்பொருளைத் தரவிறக்கியதும் நிறுவி விட்டு தங்களது கணக்கில் முதலில் நுழையவும். பின்னர் ADD என்பதைக் கிளிக் செய்து தங்களின் பல கணக்குகளைச் சேர்த்துக் கொண்டு பயன்படுத்தலாம். வெறும் 1.7 Mb அளவே உடைய இலவச மென்பொருளாகும்.

தரவிறக்கச்சுட்டி: http://multi-skype-launcher.com/

MAGIC தந்திரோபாயங்களை கற்றுகொள்ள ஓர் தளம்


MAGIC அனைவரையும் கவரும் ஒருவகை விளையாட்டு . சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த MAGIC விளையாட்டுக்களை ரசிப்பவர்களாக தான் இருக்கிறார்கள் . ஒரு சிலர் செய்துகாட்டும் போது அதன் தந்திரோபயங்களை மற்றவர்களுக்கு சொல்லிகொடுப்பதில்லை . எனவே ஒருசிலர் செய்ய மற்றவர்கள் அதிசயமாக பார்த்து ரசிக்கிறார்கள் . 

இந்த MAGIC தந்திரோபாய ரகசியங்களை வீடியோ மூலம் கற்று கொள்ள 
உதவுகிறது YUDOMAGIC.COM என்ற வீடியோ தளம் 




இந்த தளத்தில் முழுவதும் வீடியோ மூலம் செய்து காட்டப்படுவதால் கற்றுகொள்வது இலகுவாக அமைகிறது .  இந்ததளத்தில் பல்வேறுபட்ட மொழிகளில்,பல்வேறுபட்ட வகைப்படுத்தலில் MAGIC தந்திரோபாயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன . மேலும் இந்ததளத்தில் உங்களை பதிவு செய்வதன் மூலம் உங்களிடம் உள்ள MAGIC தொடர்பானவீடியோ களை இந்ததளத்தில் பகிரவும் முடியும் . 

தளமுகவரி YUDOMAGIC.COM 

ஆங்கிலம் தமிழ் டிக்ஸ்னரியும், ஆங்கிலம் வழி தமிழ் தேடலும்

இந்த பதிவின் வழியாக நாம் இரண்டு விஷயங்களை பார்க்கலாம் ஒன்று தமிழ் அகராதி(டிக்ஸ்னரி) மற்றொன்று இனையத்தில் எல்லோருக்கும் தமிழில் எழுத தெரியாது ஆனால் தமிழில் இருக்கும் ஒரு விஷயத்தை தான் தேட வேண்டியிருக்கிறது என்றால் என்ன செய்வது அதற்கு தான் இந்த பதிவு இதன் வழியே நாம் puriYaatha kiRukkalkaL என்பதாக கொடுத்து தேடினால் புரியாத கிறுக்கல்கள் சம்பந்தபட்ட பதிவுகளை வெளிக்கொண்டு வரலாம்.

இனி முதலாவதாக ஐரோப்பியன் டிக்ஸ்னரி குறித்து பார்க்கலாம் இவர்கள் 31 மொழிகளுக்கு அர்த்தம் கொடுக்கிறார்கள் குறிபிட்டு சொல்வதனால் தமிழுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேறு இந்திய மொழிகளுக்கு இல்லை என்பதை உணரமுடிகிறது இனி இதன் தேடலின் பதில் எப்படியாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு உதாரணமாக Aggregate என்பதை தேடினால் அது எந்தவிதமான இடத்தில் பயன்படுத்த படுகிறது வேறு எந்த இடத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்த முடியும் என்பதையும் நமக்கு தெரிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக தருகிறார்கள் மேலும் தமிழ் வார்த்தைக்கான ஆங்கில சொற்றொடரும் தெரிந்துகொள்ளலாம். ஆனால் என்ன ஒரு குறை இனையத்தில் மட்டுமே பயன்படுத்தும் வசதி கொண்டது.

ஐரோப்பியன் டிக்ஸ்னரி பயன்படுத்தி பார்க்க நினைப்பவர்களுக்கும் மேலும் புக்மார்க் செய்து கொள்ள விரும்புவர்களுக்கும் ஐரோப்பியன் டிக்ஸ்னரி EUROPEAN DICTIONARY



இரண்டாவதாக தமிழை தேடுவதற்கு தமிங்கிலீஸ் அதாவது நான் மேலே சொன்ன மாதிரி puriYaatha kiRukkalkaL என்பதாக கொடுத்து தேடினால் புரியாத கிறுக்கல்கள் சம்பந்தபட்ட இனைய தகவல்களை காணலாம் தேவைப்படுபவர்கள் தங்கள் தளத்திலேயே இனைத்துக்கொள்ளலாம்.