Friday, February 11, 2011

நோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ள இலவச மென்பொருள்.



சில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும்
பல முயற்சி  செய்தும்  Unlock எடுக்க முடியாமல் அருகில்
இருக்கும் மொபைல் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு  சென்று சரிசெய்து
வருவோம். இனி இந்தப்பிரச்சினைக்கு எளிதான தீர்வை கொடுக்க
ஒரு இலவச மென்பொருள் உள்ளது. Nokia mobile phone முதல்
Samsung வரை அனைத்து மொபைல்போன்களின் Unlock Code -ம்
Calculate செய்து நொடியில் நமக்கு கொடுக்க இந்த மென்பொருள்
உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
சில வகை மொபைல்கள் Unlock ஆகிவிட்டால் Unlock எடுப்பதற்கு
கண்டிப்பாக சர்வீஸ் சென்டர் போய் தான் ஆக வேண்டும் என்ற
கட்டாயம் இன்றும் இருக்கிறது எதற்காக என்றால் சாதாரன code
மட்டும் கொடுக்க வேண்டும் என்றால் எளிதாக Unlock செய்யலாம்
ஆனால் IMEI எண் கொடுக்க வேண்டும், சிலருக்கு IMEI எப்படி
நம் அலைபேசியில் கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரியாது,
இந்த IMEI எண் வைத்துக்கொண்டு மட்டும் Unlock செய்து
விட முடியாது, Unlock செய்ய நமக்கு உதவுவதற்காக ஒரு
மென்பொருள் உள்ளது.
தறவிரக்க முகவரி : Download
இந்த இலவச மென்பொருளை தரவிரக்கி நம் கணினியில்
நிறுவிக்கொள்ளவும். அடுத்து இந்த மென்பொருளை இயக்கி
நமக்கு எந்த மொபைல் Unlcok செய்ய வேண்டுமோ அதன்
நிறுவனத்தையும் மாடல்-ஐயும் தேர்ந்தெடுக்கொள்ள வேண்டும்,
அடுத்து IMEI எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்றால் என்று
நம் மொபைலில்  *#06#  என்று கொடுத்ததும் நம் IMEI
எண் காட்டப்படும் இதை அப்படியே மென்பொருளில் IMEI
என்று கேட்கப்படும் கட்டத்திற்குள் கொடுத்து விட்டு Calculate
என்ற பொத்தானை சொடுக்கினால் எப்படி இந்த மொபைலை
Unlock செய்ய வேண்டும் என்ற தகவல் நமக்கு கிடைக்கும்
இதன்படி எளிதாக நம் மொபைலை Unlock செய்யலாம்.
மொபைல் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து வைத்துக்
கொள்ள வேண்டிய மென்பொருள். கண்டிப்பாக இந்தப்பதிவு
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது புதிதாக
வந்திருக்கும் மொபைல் போனுக்கான Unlock code இந்த
மென்பொருளில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் கணனியில் (Folder) ஒன்றுக்கு (Password) கொடுத்து மற்றவர்கள் அதனைத் திறக்க முடியாமல் பாதுகாக்க

Windows XP தொகுப்பிலேயே கோப்புறை(Folder) ஒன்றைப் கடவுச்சொல்(password) கொடுத்துப் பாதுகாக்க இரண்டு வழிகள் தரப்பட்டுள்ளன. Windows operating System க்கு என சில இலவசமாக தரவிறக்கம்(Download) செய்து பயன் படுத்தும் நிரல்களும் உள்ளன.

1. உங்கள் அலுவலகக் கணனியில் உங்களுக்கென பயனர் கணக்குடன் (user Account) கடவுச்சொல் உள்ளதாக இருந்தால் . அதன் File System என்.டி.எப்.எஸ். (NTFS) ஆக இருக்கும்.


2. இனி எந்த கோப்புறைக்கு கடவுச்சொல் கொடுக்க வேண்டுமோ அதன் மீது Right Click செய்திடவும். பின் "Properties" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது Alt அழுத்தியவாறே Double Click செய்திடவும்.



3. கிடைக்கும் விண்டோவில் Sharing என்று உள்ள Tab ஐத் தேர்ந்தெடுக்கவும். அதில் Make this Folder Private என்று உள்ளதை தேர்ந்தெடுக்கவும்.



4. பின் Apply என்பதில் சொடுக்கவும். உங்களுடைய கணக்குக்கு கடவுச்சொல் இல்லை என்றால், ஒரு சிறிய பெட்டிச் செய்தி வரும். கடவுச்சொல் ஒன்றை தரப்போகிறீர்களா? என்று கேட்கப்படும். உங்கள் கோப்புறையை நீங்கள் Private ஆக மாற்ற வேண்டும் என்றால் இந்த கடவுச்சொல்லினைக் கட்டாயம் கொடுத்தே ஆகவேண்டும். இவ்வாறு கொடுத்துவிட்டால் பின் கணனியில் உங்கள் கணக்கில் நுழைகையிலும் அதே கடவுச்சொல்லினை கொடுக்க வேண்டியதிருக்கும்.



5. கடவுச்சொல் ஒன்றைக் கொடுத்துப் பின் அதனை உறுதிப்படுத்தவும். பின் Create Password என்பதை அழுத்தி கடவுச்சொல் விண்டோவினை மூடவும்.



6. பின் Properties எனும் Dialog Box இல் OK என அழுத்தவும்.



7. இனி உங்கள் கடவுச்சொல் இல்லாமல் இந்த போல்டரை யாரும் திறக்க முடியாது. இரண்டாவதாக ஒரு வழி: இந்த கோப்புறை Zip செய்யப்பட்டிருந்தால் அதற்கு தனியாக கடவுச்சொல் ஒன்றினைக் கொடுக்க முடியாது. இதற்கு Zip செய்யப்பட்ட கோப்புறை மீது இருமுறை அழுத்திடவும். மேலாக உள்ள பட்டியலில் (menu) File தேர்ந்தெடுத்து, பின் ‘Add a Password’ என்பதில் சொடுக்கவும். கடவுச்சொல் பெட்டியில் கடவுச்சொல் ஒன்றை கொடுக்கவும். மீண்டும் Confirm Password பெட்டியிலும் இதனை கொடுக்கவும். இனி இந்த கோப்புறையை நீங்கள் மட்டுமே கடவுச்சொல் பயன்படுத்திப் பார்க்க முடியும்

உங்களது MOBILE PHONE ல் இருந்து உங்களுக்கே CALL செய்வது எப்படி ?




NOTE : THIS IS ONLY FOR EDUCATIONAL PURPOSES |                          இந்த பதிவை தவறாக பயன்படுத்தினால் 
அல்லது இதால் ஏற்படும் விளைவுகளுக்கு
 நான் பொறுப்பல்ல


இதை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம்.

1.முதலில் http://www.mobivox.com/register/

2.உங்களுக்கு என ஒரு account -ஐ உருவாக்கவும்.

3.Account - ஐ உருவாக்கும் பொழுது யாருடைய Number - ல் இருந்து CALL வர வேண்டும் என்பதை Your number -ல் கொடுக்கவும். (Ex- உங்க number 98765 73210 எனில்,Your number -ல் 98765 73210 எனக் கொடுக்கவும்)

4.பின்பு,உங்கள் E - Mail ID - க்கு சென்று Confirm செய்யவும்.

5.பிறகு,உங்கள் account - ல் Direct Web Call என்பதை CLICK செய்யவும்.

6.நீங்கள் யாருக்கு CALL செய்ய வேண்டுமோ,அந்த NUMBER - ஐ கொடுத்து CALL NOW
button ஐ click செய்யவும்.!

அவ்வளவு தான் ! உங்கள் நம்பரில் இருந்து உங்களுகே CALL வருவதை கண்டு ஆச்சர்யப்படுவீர்கள்!