Monday, February 28, 2011

வைரஸ் தாக்கிய கணினியில் டாஸ்க்மேனேஜரைத் திறக்க .

வைரஸ்,ஸ்பைவேர் தாக்குதலுக்குட்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி கணினியில் (சரிசெய்ய முயற்சி செய்கையில் எந்தவொரு வைரஸ் எதிர்ப்பு மென்பொருளையும் இன்ஸ்டால் செய்வதோ அல்லது ஆன்லைன் வைரஸ் ஸ்கேன் செய்யும் முயற்சியிலோ தோல்வி ஏற்படும் பொழுது) வைரஸ் வகை விபரங்களைத் தெரிந்து கொள்ள Ctrl+Alt+Del காமாண்ட் கொடுத்து டாஸ்க் மேனேஜரைத் (Task Manager) திறந்து பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மென்பொருள்கள் குறித்த விபரத்தை அறிந்து வைரஸ் வகை சார்ந்ததாக இருந்தால் இயக்கத்தை தடை செய்து பிறகு கணினியை மீட்க முயற்சிப்போம். ஆனால் டாஸ்க் மேனேஜரின் விண்டோவையும் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது.
அதற்கு சிறிய அளவிலான மென்பொருள்கள் சில இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால் அதற்குப் பதிலாக டாஸ்க் மேனேஜரைச் செயல்படுத்தும் வகையில் விபி ஸ்கிரிப்ட் கொண்ட எச்சல் சீட்டைத் தயாரித்துள்ளனர். இதனைப் பயன்படுத்தி எளிதாக உங்கள் கணினியில் இயங்கும் மென்பொருளை சஸ்பெண்ட், டெர்மினேட், ரெஸ்யூம்(terminate, suspend or resume processes) ஆகிய பணிகளைச் செய்யமுடியும்.

 http://blog.didierstevens.com/2011/02/03/taskmanager-xls/
இந்த லிங்க்கிலிருந்து எக்சல் ஃபைலை டவுன்லோட் செய்து அதனை திறந்து கொள்ளவும்.


அதில் இரண்டு பட்டன்கள் இருக்கும். ஒன்று லிஸ்ட் பிராசஸ் என்பது, மற்றொன்று எக்ஸ்கியூட் கமாண்ட் . முதலில் லிஸ்ட் பிராசஸ் பட்டனைக் கிளிக் செய்யவும். உடனே பயன்பாட்டில் இருக்கும் மென்பொருள்களின் பட்டியல் கிடைக்கும். அதில் எது தேவையற்றதோ அதற்கு நேராக முன்புறம் உள்ள கமாண்ட் கட்டத்தில் சஸ்பெண்ட் செய்ய s என்றோ, டெர்மினேட் செய்ய t என்றோ கொடுக்கலாம். டெர்மினேட் செய்ததை மீண்டும் இயக்க ரெஸ்யூம் பிராசஸ் என்பதற்கான r என்ற எழுத்தை கொடுத்த பிறகு எக்ஸ்கியூட் கமாண்ட் பட்டனைக் கிளிக் செய்யவும்.
இந்த எக்சல் ஃபைல் அளவு 50 கேபிக்கும் குறைவுதான். கணினியில் வைத்திருந்தால் எப்போதாவது அவசரத்திற்கு உதவக்கூடும்.

குறிப்பு: எஸ்சல் ஃபைல் ஓப்பன் ஆபிஸ் 3.3 மென்பொருளில் செயல்படாது. எக்சல் மென்பொருளில் மேக்ரோ (Macro) க்கள் Disable செய்திருந்தால் அதனை Enable செய்துவிட்டுப் பயன்படுத்தவும்

எந்த வகை வீடியோவையும் எந்த வகைக்கும் எளிதாக மாற்றலாம்....


வீடியோக்கள் பல வகையில்  இணையத்தில் கிடக்கின்றன இதில் நமக்கு தேவையான வீடியோக்களை நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கி கொள்கிறோம். ஒரு சிலவகையான வீடியோக்கள் நம் கணினியில் இயங்காத பார்மட்டில் இருக்கும் மற்றும் இந்த வீடியோக்களை நம் மொபைல் போனுக்கு காப்பி செய்ய நினைத்தாலோ இந்த வகை வீடியோக்களை நாம் வேறு பார்மட்டில் மாற்ற நினைப்போம்.
இதை வசதியை தர இணையத்தில் நிறைய மென்பொருட்கள் இருந்தாலும் Hamster Free Vedio Convertor என்ற மென்பொருள் சிறப்பாக உள்ளது.
மென்பொருளின் பயன்கள்:
  • இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
  • இதில் எந்த வீடியோவையும் ipod,ipad, Iphone, PS3, PSP, Black Berry, Xbox, zune, Apple TV, iRiver இப்படி 200 வகையான சாதனங்களில் உபயோகிக்கும் படி மாற்றி கொள்ளலாம்.
  • எந்த வீடியோவையும் 3GP, MP3, MP4, AVI, DVD, WMV, DIVIX, MPEG, FLV, M2TS இப்படி எந்த வகை பார்மட்களிலும் எளிதாக மாற்றி கொள்ளலாம்.
  • வீடியோவில் வுள்ள பாடலையோ அல்லது வேறு ஏதேனும் ஆடியோவையோ தனியாக பிரித்து கொள்ளலாம்.
  • உபயோகிப்பதற்கு மிகவும் சுலபம்.
  • WINDOWS7/ VISTA / XP - க்கு உகந்தது.
  • இந்த மென்பொருளை உங்கள் விருப்பம் போல் தீம் மாற்றி அழகாக்கி கொள்ளலாம்.
  • 40 வகையான மொழிகளுக்கு உகந்தது.
உபயோக்கிக்கும் முறை: 
  • கீழே உள்ள DOWNLOAD பட்டனை அழுத்தி இந்த  மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு வரும் ZIP பைலை EXTRACT செய்து உங்கள் கணினியில் Hamster vedio convertor மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் முதல் படியில் உள்ள Add file என்பதில் நீங்கள் கன்வெர்ட் செய்ய வேண்டிய வீடியோ பைலை ட்ராக் செய்தோ அல்லது அந்த கட்டத்தில் க்ளிக் செய்தோ தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • அடுத்து  Edit க்ளிக் செய்து கொண்டு அங்கு நீங்கள் மாற்ற வேண்டிய பார்மட்டை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • இந்த படியில் நீங்கள் உங்கள் வீடியோவின் height width மற்றும் quality போன்றவைகளை உங்கள் விருப்பம் போல் மாற்றி கொள்ளலாம்.
  • முடிவில் நீங்கள் க்ளிக் செய்ய வேண்டியது Convert பட்டனை. இந்த பட்டனை அழுத்தியவுடன் உங்கள் வீடியோவின் அளவை பொருத்து உங்கள் வீடியோ கான்வர்ட் ஆகி வரும்.  
  • இது போன்று உங்களுக்கு தேவையான வீடியோக்களை தேவையான வடிவில் மாற்றி கொள்ளலாம். 
  • இதில் உள்ள செட்டிங்க்ஸ் க்ளிக் செய்து உங்கள் மொழி மற்றும் மென்பொருளின் நிறத்தை மாற்றி கொள்ளலாம்.

இந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள பட்டனை அழுத்துங்கள்.


Saturday, February 19, 2011

டிரைவர்களை நிறுவ,அப்டேட் செய்ய இலவச மென்பொருள்..

உங்கள் கணிணியில் ஒலி வரவில்லையா ,சில கேம்களை விளையாட முடியவில்லையா இவைகளுக்கு காரணம் தேவையான கணிணி டிரைவர்கள்(Drivers) உங்கள் கணிணியில் இல்லாமல் இருக்கலாம் அல்லது பழுதடைந்து போயிருக்கலாம்.புதிதாக விண்டோஸ் நிறுவிய பின்னர் சில நேரங்களில் டிரைவர்கள் இல்லாமல் போகலாம். இவற்றை உங்கள் கணிணிக்கு ஏற்ற டிரைவர்களை கண்டு பிடித்து நிறுவுவது கடினம். slimdriver என்ற இந்த மென்பொருள் இந்த வேலையை எளிதாக்குகிறது.

எனது கணிணியில் ஒரு கேம் விளையாட முடியவில்லை பல நாளாக ஏதோ display டிரைவர் இல்லை என வந்தது.எந்த டிரைவர் என அறிய முடியவில்லை.மேலும் கணிணியில் ஒலி வந்தது ஆனால் யாருடனாவது head phone இல் chatல் பேசும் போது அதில் ஒலி வரவில்லை ஆனால் speakerல் வந்தது.இந்த இரு பிரச்சனைகளையும் இந்த slimdriver மூலம் எளிதாக தீர்க்க முடிந்தது. இந்த மென்பொருளின் இலவச பதிப்பே போதுமானது.




இந்த மென்பொருளை நிறுவிய பின் start scan என்பதை கிளிக் செய்தால் உங்கள் கணிணியில் இல்லாத அல்லது அப்டேட் செய்ய வேண்டிய டிரைவர்களை காட்டும்.அதில் உங்களுக்கு தேவையான டிரைவர்களை download update என்பதை கிளிக் செய்து நிறுவி கொள்ளவும்.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்க
DriverUpdate.net -Update Drivers for Windows 7, XP, and Vista