Monday, July 25, 2011

உங்கள் உடல் நலத்தை கண்காணிக்க உதவும் மென்பொருள்


எல்லோருமே நலமுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்பதே அனைவரதும் ஆசை என்னுடைய பிரார்த்தனையும் கூட.
நலமுடன் வாழ உங்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். நாளாந்தம் உங்கள் உடல் நலனை கண்காணித்து பதிவு செய்து உங்கள் உடல் நிலை முன்னேற்றத்தை அறிந்து கொள்ளவும்; வைத்திய தேவைகளுக்கு சமர்பிக்கவும் MY DAILY READING என்ற இலவச மென்பொருள் உதவுகிறது.





இந்த மென்பொருளின் மூலம் இரத்த அழுத்தம் , இரத்தத்தில் சக்கரையின் அளவு , உங்கள் நிறை என்பவற்றை கால அட்டவணைப்படி பதிவு செய்து ஓர் அறிக்கை வடிவிலோ அல்லது வரைபடம் மூலமாகவோ பிரிண்ட் செய்து கொள்ள முடியும் இதன் மூலம் மருத்துவரிடம் உங்கள் உடல் நிலை பற்றி அறிந்துகொள்ள உதவியாக அமைகிறது .

இந்த மென்பொருளில் பலபயனாளர்கள் பயன்படுத்த முடியும் . அத்துடன் ஒருநாளைக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

விண்டோஸ் இயங்கு தளங்களில் இந்த மென்பொருள் செயல்படும் .
தரவிறக்கம் செய்ய CLICK

Friday, July 22, 2011

நம் வலைப்பூ-க்கு அழகான பேக்ரவுண்ட் (Background ) சில நிமிடங்களில் வடிவமைக்கலாம்.


புதிதாக இணையதளம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் முதலில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது பேக்ரவுண்ட்-க்கு தான், காரணம் சில வகையான பேக்ரவுண்ட்கள் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும். பெரும்பாலும் இணையத்தைப் பொருத்தவரை ஒரே மாதிரியான பேக்ரவுண்ட்கள் தான் வலம் வருகிறது , ஆனால் இனி நம் விருப்பப்படி அழகான பேக்ரவுண்ட் வடிவமைக்கலாம் அதுவும் சில நிமிடங்களில் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


படம் 1
இணையதளம் ஆரம்பிப்பதும் வீடுகட்டுவதும் ஒன்று தான் வீடு கட்டும் போது ஒவ்வொரு அறையும் எப்படி இருக்கவேண்டும் என்பதில் தொடங்கி வீட்டிற்கு எந்த அழகான வண்ணம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதை தேர்ந்தெடுக்கவே நமக்கு காலம்  அதிகமாக செலவாகிறது இதே முறை தான் இணையத்திலும் நமக்கு விருப்பமான வண்ணம் அல்லது டிசைன் பேக்ரவுண்ட்-ல்  இருந்தால் நன்றாக இருக்கும் எண்ணுபவர்களுக்கு உதவுவுதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://bgmaker.ventdaval.com
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் நமக்கு விருப்பமான வண்ணத்தை கொடுத்து பார்க்கலாம் ஒவ்வொரு வண்ணமும் தேர்ந்தெடுத்து  மேல் இருக்கும் + மற்றும் – என்பதை சொடுக்கி ஒரு அழகான டிசைன் எளிதாக அதுவும் சில நிமிடங்களில் உருவாக்கலாம். இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா, உருவாக்கிய டிசைனை  உடனுக்கூடன் பேக்ரவுண்ட்-ல் பார்த்துக்கொள்ளலாம். மில்லியன் கணக்கில் டிசைன் இதில்  ஒளிந்திருக்கிறது, அழகான டிசைனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள்  சில மணி நேரம் செலவு செய்தால் தாங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அழகான  டிசைன் உருவாக்கலாம். டிசைன் உருவாக்கியபின் Save image என்பதை சொடுக்கி  இந்தப்படத்தை PNG கோப்பாக சேமிக்கலாம். பின் நம் தளத்தில் Background image- என்பதில்  நாம் உருவாக்கியப் படத்தை வைக்கலாம். இணையதள வடிவமைப்பு வாசிகளுக்கும் புதுமை
விரும்பிகளுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

rundll32.exe கோப்பின் வேலையும் பயன்பாடுகளும்


விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தில் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு கோப்பு தான் rundll32.exe. எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு பிழை செய்தி கிடைக்கிறது. இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த கோப்பு குறித்த சந்தேகங்கள் தெளிவாகும்.

rundll32.exe கோப்பு நம் கணணியில் டாஸ்க் மேனேஜரில் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். RAM நினைவகத்தில் இந்த கோப்பு தங்கி இருந்து மற்ற கோப்புக்கள் செயல்பட உதவிடும். ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால் இந்த கோப்பின் பெயர், பிரச்சினை குறித்த பிழை செய்தியில் அடிபடுவது இயற்கையே. கணணி இயங்க அடிப்படையான டி.எல்.எல் கோப்புக்கள் இந்த ரன் டி.எல்.எல் 32 கோப்பு வழியாக இயங்குகின்றன.

ஒரு டி.எல்.எல் கோப்பை நேரடியாக இயக்க முடியாது. இ.எக்ஸ்.இ அல்லது காம் கோப்புக்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல் கோப்புக்கள் இயங்காது. விண்டோஸ் சிஸ்டத்திற்கு இவற்றை இயக்க இன்னொரு கோப்பு தேவைப்படுகிறது. அதுதான் rundll32.exe கோப்பு. 32 பிட் டி.எல்.எல் கோப்புக்களை இது எடுத்து இயக்குவதால் இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.

இப்படி அடிப்படைச் செயல்பாட்டிற்கு இது அரிய பங்கினை அளிப்பதால் சில கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் கணணியில் rundll32.exe என்ற கோப்பு கெட்டுப் போய் விட்டதென்று செய்தி கொடுத்து சரியான rundll32.exe கோப்பு வேண்டும் என்றால் கிளிக் செய்திடவும் என ஒரு லிங்க் தரும். இதில் கிளிக் செய்தால் அந்த கோப்பானது தரவிறக்கம் செய்யப்படும். ஆனால் அது கெடுதலை விளைவிக்கும் புரோகிராமாக இருக்கும். எனவே இது குறித்து வரும் செய்திகளை பார்த்தால் சற்று கவனமாகச் செயல்பட வேண்டும்.