Tuesday, September 27, 2011

Youtube கொஞ்சம் ரகசியங்கள் - பார்ட் 2


ஒரு படம் பயங்கர ஹிட் ஆனா பார்ட் 2 எடுப்பது போல ஹிட் ஆன பதிவுக்கு இது பார்ட் 2 . youtube என்ற கடலில் சில முத்துக்களை மட்டுமே நான் உங்களுக்கு கொடுத்தேன். இதோ இன்னும் சில.







1. என் முந்தைய பதிவில் எப்படி முழு ஸ்க்ரீன் வீடியோ உருவாக்குவது என்று சொல்லி இருப்பேன், இவ்வாறு செய்யும் போது உங்கள் வீடியோ size எந்த மாதிரி உள்ளதோ அதற்க்கு ஏற்பதான் aspect ratio (4:3 or 16:9)  செயல்படும். எனவே உங்கள் வீடியோ ஆனது 726x520(width:height) என்று இருந்தால் மிக அருமையான HD வீடியோ ஆக இருக்கும். 

ஒரு HD வீடியோ: http://www.youtube.com/watch?v=cRdxXPV9GNQ


2. வீடியோ ஆனது நிறைய format களில்உள்ளது. இப்போது youtube ஆனது தானாகவே சில வீடியோக்களை HD என்று எடுத்துக் கொள்கிறது. அவை 720x576 என்ற அளவில் இருக்கும். இன்னுமொரு முக்கியமான விஷயம் அவை பெரும்பாலும் .wmv format ஆக இருந்து upload செய்யப்பட்டு இருக்கும். எனவே நீங்களும் அப்படியே செய்யுங்கள்.    


3. உங்கள் வீடியோக்களுக்கு tag கொடுப்பது பற்றி கூறி இருந்தேன் அல்லவா (சென்ற youtube பதிவில்). இவ்வாறு tags கொடுக்கும் போது அது உங்கள் வீடியோக்களை தேடும்போது எளிதாக முகப்பில் வரவைக்கும். சில வீடியோக்கள் ஆரம்பத்தில் தேடும் போது முகப்பில் வராது. அதற்கு ஒன்று செய்யுங்கள். உங்கள் tag பகுதியில் உங்கள் youtube user name கொடுக்கவும்.             

நான் என்னுடைய  வீடியோ அனைத்துக்கும் baleprabu என்ற ஒரு கூடுதல் tag சேர்த்து உள்ளேன். இதனால் baleprabu என்று youtube இல் கொடுத்தால் எனது வீடியோ அனைத்தும் வரும், இதில் உங்களுக்கு தேவையான வீடியோ உடனே கிடைக்கும், URL நினைவில் இருக்க  வேண்டியது இல்லை, வீடியோ பெயர் கூட தேவை இல்லை.

இதற்கு user name தான் தரவேண்டும் என்ற அவசியம் இல்லை. எளிதில் முகப்புக்கு வரும் எதையும் கொடுக்கலாம். 


4. உங்கள் youtube வீடியோ ஆயிரம் முறைக்கு மேல் பார்க்கப்பட்டு இருந்தால், மற்றும் இன்னும் சில விதிகளை நிவர்த்தி செய்தால் google ads ஐ உங்கள் youtube வீடியோக்களில் தோன்ற செய்யலாம். இதற்கு adsense account வேண்டும்.      

Add Youtube Ads To Your Videos: http://www.youtube.com/partners 

5. உங்கள் வீடியோவை youtube இல் upload செய்த பின்னர் அதை எடிட் செய்ய விரும்பினாலும் முடியும். அதற்கு உங்கள் youtube account இல் "Video Editor" என்பதில் Audio edit, Transition, Video Trim, video Effect என பலவற்றை செய்யலாம்.     

6. உங்கள் வீடியோவுக்கு வேறு ஆடியோ சேர்க்க விரும்பினால் அதற்கும் Youtube வழி செய்கிறது. உங்கள் வீடியோ பகுதியில் "audio swap " என்பதை தெரிவு செய்து உங்களுக்கு விருப்பமான ஒன்றை தெரிவு செய்து கொள்ளவும். இதை நீங்கள் "video editor" பகுதியிலும் செய்யலாம். 

என்ன நண்பர்களே இனி youtube இல் வீடியோ upload செய்து கலக்குங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள்.  

Youtube கொஞ்சம் ரகசியங்கள் :)))


Youtube பற்றி தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இருந்தாலும் full Screen வீடியோ உருவாக்குவது, Tags பற்றி, youtube வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி என்றெல்லாம் சொல்கிறேன்.     




1. எப்படி முழு ஸ்க்ரீன் வீடியோ உருவாக்குவது?

youtube ஆனது ஆரம்பிக்கப்பட்ட போது  4:3 (Width:Height) என்ற அளவில் வீடியோக்களை பயன்படுத்தி வந்தது ஆனால் இப்போது 16:9 என்று உள்ளது. இதனால் உங்கள் வீடியோக்களை அந்த அளவுக்கு நீங்களும் கொடுக்க வேண்டும் அப்போதுதான் முழு ஸ்க்ரீன் வீடியோ வரும். சரி 16:9  இல்லை என்றால் என்ன செய்வது? ஒன்றும் இல்லை, Video upload செய்து முடித்த உடன் உங்கள் வீடியோ சிறியதாக இருந்தால் (Youtube இல் பார்க்கும் போது நிறைய கருப்பு ஏரியா இருக்கும் ) Edit என்ற பகுதியில் சென்று Tag என்பதில்  yt:Stretch=16:9 என்று கொடுக்கவும். இது கிட்டதட்ட முழு ஸ்க்ரீன் ஆக வீடியோவை கொடுக்கும். அதே வீடியோ பெரிதாக இருந்தால்  yt:crop=16:9.

ஏற்கனவே upload செய்தவற்றையும் நீங்களும் இப்படி கொடுப்பதன் மூலம் மாற்றி கொள்ளலாம்.


Watch Video:http://www.youtube.com/watch?v=MFPcAIM8fB0



2. Tag என்றால் என்ன? எப்படி பயன்படுத்துவது?

இந்த பகுதியில் உங்கள் வீடியோக்களை தேடும் போது காட்ட குறிப்புகள் தரலாம். (blogger இல் label போன்று ) இதில் ஒரு வார்த்தை என்றால், //உதாரணம் prabu// என்றால் அப்படியே கொடுக்கவும், ஒன்றுக்கு மேற்ப்பட்ட வார்த்தை தொடர் கொடுக்கும் போது //உதாரணம் "bale prabu"// இப்படி கொடுக்க வேண்டும்.
அதாவது இப்படி,


  //yt:stretch=16:9 prabu "bale prabu""bale prabu videos" "bale prabu video" "prabu videos" baleprabu.blogspot.com//

Tag களுக்கு இடையில் கமா(,) கொடுக்க கூடாது. ஒரு இடைவெளி மட்டும் விட வேண்டும். நீங்கள் எவ்வளவு tags வேண்டுமானாலும் தரலாம். அதே போல இங்கு small letters மட்டுமே பயன்படுத்த வேண்டும். capital லெட்டர்ஸ் கண்டிப்பாக கூடாது. 

3. Youtube Videoக்களை எப்படி டவுன்லோட் செய்வது?


முதலில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ URL ஐ copy செய்து கொள்ளவும் (Address Bar பகுதியில் உள்ளது). பின்னர் இந்த வெப்சைட் செல்லவும்   keepvid.com.அங்கு URL paste செய்ய ஒரு இடம் இருக்கும் அங்கு copy செய்த URL ஐ paste செய்யவும்  . இப்போது download கொடுத்தால், ஒரு application Run செய்யலாமா என்று ஒரு சிறிய விண்டோ வந்து கேட்கும். Run கொடுத்து விட்டால் உங்களுக்கு விருப்பமான  Format களில் வீடியோ டவுன்லோட் செய்து கொள்ளலாம். Mp3 ஆக கூட டவுன்லோட் செய்து கொள்ளலாம்.    

அல்லது Real player New Version டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டால் வீடியோ இருக்கும் பக்கத்திலே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Down Load  Real Player

உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்யலாம்


நாம இணையத்தில் நிறைய வீடியோ டுடோரியல் பார்த்து இருப்போம். நான் நினைத்தேன் இவங்க ஒரு கையாள கேமராவ புடிச்சுகிட்டு மறு கையாள இந்த டுடோரியல் எடுக்கறாங்கன்னு. ஆனா இப்போதான் மேட்டர் தெரிஞ்சுது அதுக்கு கேமரா எல்லாம் வேண்டாம்னு. என்னனு பார்ப்போமா?


இதற்கு  உங்களுக்கு தேவை கீழே உள்ள மென்பொருள்களில் ஏதேனும் ஒன்று. 


இந்த நான்கில் நான் பயன்படுத்துவது முதலாவது. (ஏன்னா அது ப்ரீ). நல்ல தரமான வீடியோவும் கிடைக்கிறது.இதை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

சரி எப்படி ரெகார்ட் செய்றதுன்னு கேக்குறீங்களா?

ரெகார்ட் செய்வதற்கு முன் ஒரு சிறு வேலை.

இந்த Software Open செய்து Option என்பதை கிளிக் செய்து உங்கள் வீடியோ Quality 100 என வைத்துக் கொள்ளவும். மற்றவை மாற்ற வேண்டியது இல்லை.



நீங்கள் எதை ரெகார்ட் செய்ய விரும்புகிறீர்களோ அதற்கு முன் இதை ஆரம்பித்து உங்கள் ரெகார்ட் வேலையை ஆரம்பிக்கவும். இதனால் சில நொடிகளுக்கு இந்த சாப்ட்வேர் உங்கள் முகப்பில் தோன்றும். ரெகார்ட் கொடுத்த உடன் ஸ்க்ரீன் அளவு செட் செய்ய ஒரு + போன்ற குறி வரும் அதனை முழு ஸ்க்ரீன்க்கும் சதுரம் போல அமைத்து இழுத்து விட்டால்  ரெகார்ட் ஆரம்பிக்கும்(உங்கள் சாப்ட்வேர் விண்டோ மட்டும் கூட நீங்கள் + மூலம் அளவுபடுத்தி ரெகார்ட் செய்யலாம்.). ரெகார்ட் செய்ய ஆரம்பித்த உடன் இதனை Minimize செய்து விடவும்.

நீங்கள் உங்கள் வேலை முடிந்த உடன் ஸ்டாப் பட்டன் கொடுத்து விட்டால் தானாகவே இது வீடியோ ஆக Save ஆகிவிடும். உங்கள் வீடியோவை இப்போது Youtube இல் Upload செய்து உங்கள் வாசகர்களுக்கு வீடியோ டுடோரியல் சொல்லிக் கொடுங்கள். வீடியோ  சைஸ் மிக அதிகமாக இருக்கும் (எனது இந்த ஒரு நிமிட வீடியோ 375MB )எனவே ஏதேனும் Video Converter பயன்படுத்தி வேறு Format மாற்றுவதன் மூலம் சைஸ் குறைக்க முடியும்.கவனிக்க வீடியோ Resolution 1280X720 என்று இருப்பது நலம். AVI வீடியோ ஆக Convert செய்வது நல்லது. (After Conversion 30MB)


வீடியோ பத்தி சொல்லிட்டு வீடியோ போடாம இருக்க முடியுமா? இதோ செய்முறை வீடியோ: (வீடியோவின் வலது கீழ் பகுதியில் உள்ள நான்கு அம்புக் குறியை சொடுக்கி முழு ஸ்கிரீனில் பார்க்கவும்)


இப்படி இந்த சாப்ட்வேர் உங்கள் டுடோரியல் வீடியோவில் வருவதை நீங்கள் விரும்பவில்ல்லை என்றால் ஏதேனும் Video Cut சாப்ட்வேர் பயன்படுத்தி அந்த சில நொடிகளை மட்டும் கட் செய்து விட்டு நீங்கள் Upload செய்யலாம்