Tuesday, November 22, 2011

YOUTUBE தளத்தில் அதிக தடவை பார்க்கப்பட்ட வீடியோகளை பார்க்கும் வசதி




 




   மிக பிரபலமான வீடியோ தளமான  YOUTUBE  தளத்தில் பார்வையாளர்களால் அதிக தடவை பார்க்கப்பட்டு மிக பிரபலமான வீடியோ காட்சிகளை நீங்களும் கண்டு மகிழ YOUTUBE .COM /CHARTS  என்ற பக்கம் உதவுகிறது.


 

   இதன் மூலம் YOUTUBE தளத்தில் பகிரப்பட்ட வீடியோ காட்ச்சிகளில் இந்த நாள் ,இந்த வாரம், இந்த மாதம் , எல்லா நேரமும் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட வீடியோ காட்ச்சிகளை தேடி பார்க்க முடியும்.


அத்துடன் YOUTUBE தளத்தில் உள்ள வீடியோகளில் ஒவ்வொரு தனித்தனி பிரிவுகளிலும் பிரபலமான வீடியோ காட்சிகளை பார்க்க முடியும். இதற்கு முதலில் வீடியோவின் பிரிவினை தெரிவு செய்து பின்னர் எந்த காலப்பகுதியில் பிரபலமான வீடியோ தேவையோ அதனை தெரிவு செய்து பார்வையிட முடியும்.




YOUTUBE .COM /CHARTS எனும் பக்கம் மிக சுவாரசியமாக அமைகிறது . 

புகைப்படங்களை எளிதாக வீடியோவாக மாற்ற PhotoFilmStrip

நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்களை சிடி/டிவிடியில் அப்படியே புகைப்படமாக ஏற்றினால் டிவிடி பிளேயரில் தெரியும் வசதியிருக்கிறது. ஆனால் அவைகளை ஒவ்வொன்றாக கிளிக் செய்து பார்க்க வேண்டியிருக்கும். எல்லா ஒளிப்படங்களும் சீரான இடைவெளியில் பிண்ணணி ஒலியுடன் ஒவ்வொன்றாக காட்டப்பட்டால் நன்றாக இருக்கும். இதனை SlideShow என்பார்கள். அதே நேரத்தில் ஒளிப்படங்கள் வரிசையாகவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எபெக்ட்டுடன் வந்தால் சிறப்பாக இருக்கும். மேலிருந்து படம் வருவது, கட்டம் கட்டமாய் வருவது போன்ற மாதிரி வருவதை Transition Effect என்று சொல்வார்கள். 

பல்வேறு புகைப்படங்களை வைத்து அவற்றை வீடியோவாக மாற்ற உதவும் இலவச மென்பொருள் ஒன்று தான் PhotoFilmStrip. எளிமையாகவும் பல்வேறு வடிவங்களில் வீடியோவினை இதில் உருவாக்க முடியும். முதலில் இதனைத் தரவிறக்கி நிறுவிக் கொள்ளவும். New Project மெனுவில் சென்று உங்களுக்குத் தேவையான புகைப்படங்களைச் சேர்க்கவும். இதில் ஒளிப்படங்களை அது இருக்கும் இடத்திலிருந்தே இழுத்து விட்டால் கூட போதுமானது. (Drag and Drop)

சேர்க்கப்பட்ட ஒவ்வொரு ஒளிப்படங்களும் வரிசையாக கீழ்புறத்தில் தோன்றும். அதைக் கிளிக்கினால் பெரிதாக மேலே தோன்றும். படத்தில் தேவையில்லாத பகுதிகளை வெட்டிக் கொள்ள முடியும். (Crop Pictures) . ஒவ்வொரு ஒளிப்படமும் எந்த எபெக்டில் தோன்ற வேண்டும் என்று அமைத்துக் கொள்ளலாம். பிண்ணணியில் எதாவது பாடல் ஓட வேண்டுமெனில் சேர்க்கலாம். Subtitle என்பதில் அந்த ஒளிப்படத்தைப் பற்றிய குறிப்பைக் கொடுத்தால் வீடியோவின் அடியில் தோன்றும். உருவாக்கப்படும் வீடியோ எவ்வளவு நேரம் ஒடும் என்பதை மென்பொருளின் Status Bar இல் தெரியும்.

இறுதியில் வீடியோ வகைகளான FLV, Mp4, Avi போன்றவற்றில் தேர்வு செய்யலாம். மேலும் Full HD , VCD, Pal, NTSC போன்ற டிவிடி கோடக் (Codecs) வசதியின் மூலம் வீடியோ தரத்தை அமைக்கலாம். உங்கள் புகைப்படங்களின் அளவு, கணிணியின் வேகம் போன்றவற்றைப் பொறுத்து சில நிமிடங்களில் வீடியோ உருவாக்கப்படும்.

தரவிறக்கச்சுட்டி : Download PhotoFimStrip

Wednesday, November 16, 2011

20GB அளவுள்ள பெரிய வீடியோ பைல்களை Youtube ல் நேரடியாக அப்லோட் செய்ய


கூகுள் வழங்கு சிறந்த சேவைகளில் ஒன்று யூடியுப் தளம். இணையத்தில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்களை அனைவரும் பார்த்து ரசிக்க கூடிய தளமாகும். இந்த தளத்தில் நம்முடைய வீடியோக்களையும் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. சாதாரணமாக யூடியுப் தளத்தில் சுமார் 15 நிமிட வீடியோவை தான் அப்லோட் செய்யும் வசதி உள்ளது. இதனால் பெரிய வீடியோ பைல்களை அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. ஆனால் யூடியுப் தளத்தில் 20GB அளவுள்ள 12 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ பைல்களையும் அப்லோட் செய்யும் வசதி மறைந்து உள்ளது. அதனை எப்படி ஆக்டிவேட் செய்வது என கீழே பார்ப்போம்.

இந்த முறையை ஆக்டிவேட் செய்ய நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை  யூடியுப் கணக்கில் கொடுத்து இந்த வசதியை ஆக்டிவேட் செய்ய வேண்டும். 
  • முதலில் யூடியுப் தளத்திற்கு செல்லுங்கள். 
  • யூடியுப் தளத்தில் மேல் பகுதியில் Browse, Movies, Upload என்ற மூன்று லிங்க் இருக்கும். அதில்Upload என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • இதில் கீழ் பகுதியில் Upload HD videos in various formats in 15 minutes என்ற செய்தி இருக்கும். அதற்க்கு அருகில் Increase your limit என்ற ஒரு லிங்க் இருக்கும். அதில் கிளிக் செய்யவும்.
length video files upload on youtube
  • உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் நாட்டினை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள கட்டத்தில் உங்கள் மொபைல் எண்ணை கொடுக்கவும். 
  • மொபைல் நம்பரை கொடுத்தவுடன் கீழே உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும் நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணுக்கு ஒரு SMS வந்திருக்கும். அதில் Verification Code அனுப்பி இருப்பார்கள். 
  • Verify பட்டனை அழுத்தியவுடன் உங்களின் யூடியுப் கணக்கில் உங்களின் மொபைல் எண் சேர்க்கப்பட்டு விடும்.

இனி யூடியுபில் அப்லோட் பகுதிக்கு சென்றால் 15 நிமிட லிமிட் என்ற செய்தி மறைந்து இருப்பதை காணலாம். இனி நீங்கள் 20GB அளவுள்ள 12 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ பைல்களை நேரடியாக யூடியுபில் அப்லோட் செய்து கொண்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

கீழே உள்ள சமூக தளங்களில் (பேஸ்புக், ட்விட்டர், பிளஸ்) பகிர்ந்து மற்றவர்களுக்கும் இந்த தகவலை பகிரவும்.