Sunday, March 13, 2011

Microsoft Word இற்கு password கொடுத்து பாதுகாத்து வைக்க..


நீங்கள் Microsoft Word அல்லது  Excel  அல்லது Powerpoint போன்றவற்றில் தயார்செய்யும் சுயவிபரக்கோவை, பரீட்சை வினாத்தாள்கள் போன்ற ஆவணங்களை உங்கள் அனுமதியின்றி மற்றவர்கள் பார்க்கக்கூடாது அல்லது ஏதும் மாற்றங்கள் செய்யக்கூடாது என்ற தேவை ஏற்படும்போது; அதற்கான மென்பொருட்களைத் தேடி சிலர் நாடுவதுண்டு. இதன்போது மென்பொருள் சம்பந்தமாக சில பிரச்சனைகளையும் எதிர்கொள்ளவேண்டி ஏற்படலாம்.
நம்மில் பலர் Microsoft Office இல் இவ் வசதியை தந்தும்கூட “வெண்ணை இருக்க நெய்க்கு அலைவானேன்” என்பதுபோல வேறு மென்பொருட்கள் பக்கம் நாடுவதுண்டு.
இவ் வசதியை பயன்படுத்துவது மிகவும் இலகுவானதே.



நீங்கள் உங்கள் ஆவணங்கள் சேமிக்கும் வேளையில் கீழ்காட்டிய படிமுறைகளை பின்பற்றினால் போதுமானது.
Microsoft Office இல் இடது பக்க மேல் மூலையிலுள்ள Microsoft Office Button யைClick செய்து அங்கு  Save அல்லது Save As  option  ஐ Click செய்து தேவையானformat இல் சேமியுங்கள்.

இப்போ கீழ் உள்ளவாறான Save As  option  தோன்றும். இதிலே வட்டமிடப்பட்டுக் காட்டப்பட்ட Tools  என்பதை Click செய்து அதில்  General Options ... என்பதை தெரிவு செய்க.

இப்போ கீழ் உள்ளவாறு ஒரு விண்டோ தோன்றும். முதலாவது  Password To Open இதை வழங்கினால் நீங்கள் அந்த Document யை திறக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  password ஐ வழங்க வேண்டும்.
இரண்டாவது  Password To Modify இதை வழங்கினால் யாராவது அந்த Document யை மாற்றியமைக்க முற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  password ஐ வழங்க வேண்டும்.

இனியென்ன உங்கள் ஆவணம் பாதுகாப்பாக வைக்கப்படும்.

Tuesday, March 8, 2011

கூகுளில் நீங்கள் கேட்பதை உங்கள் மெயிலுக்கே அனுப்புவார்கள்


இணையம் என்பது பல எண்ணிலடங்கா தகவல்களை அடக்கியுள்ளது. இந்த இணையத்தில் கேட்டால் கிடைக்காத தகவல் எதுவுமே கிடையாது. இப்படி பறந்து விரிந்து உள்ள இணையத்தில் நாம் நமக்கு தேவையான தகவல்களை சுலபமாக பெற தேடியந்திரங்கள் உதவுகின்றன. இந்த தேடியந்திரங்களில் சிறப்பான சேவையை வழங்குவது கூகுள் இணையதளமாகும். இந்த கூகுளில் கேட்டால் கிடைக்காத ஒன்று இல்லவே இல்லை. இன்னும் ஒரு படி மேலே போய் நாம் கேட்பதை நமது மெயிலுக்கே கொண்டு வந்து சேர்க்கும் வசதியும் இந்த கூகுளில் உள்ளது. இதில் பதிவு செய்து விட்டால் புது புது தகவல்கள் நம்மை தேடி வரும்.
  • இதற்க்கு முதலில் இந்த தளத்திற்கு Google Alert  செல்லுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல பக்கம் வரும் அதில் உங்களுக்கு தேவையான தேர்வு செய்து கீழே உள்ள Google Alert என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  • அவ்வளவு தான் உங்களுடைய கோரிக்கை ஏற்க்கபட்டது . இனி நீங்கள் கொடுத்த தலைப்பிற்கு ஏற்ற பதிவுகள் வெளிவந்தவுடனே அந்த தகவல் உங்கள் மெயிலுக்கு நீங்கள் கொடுத்த கால இடைவெளிக்கு ஏற்ப உங்களை தேடி வரும். 

ஜிமெயிலை பேக்அப் எடுக்க - IMAPSize


ஈமெயில் சேவையில் முதலிடத்தில் இருக்கும் ஜிமெயில் நிறுவனம் சேமிப்பு பெட்டகமாக சுமார் ஏழு ஜிபி வரை (7557 MB) இலவசமாக வழங்குகிறது. ஜிமெயில் பயன்படுத்தாத இண்டர்நெட் பயனாளர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஜிமெயில் நிறுவனத்தின் ஈமெயில் சேவையை தற்போது அனைவரும் பயன்படுத்தி வருகிறனர். நாம் தினமும் பல ஈமெயில்களை அனுப்பவும், ஈமெயில்களை பெறவும் செய்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் ஜிமெயில் நிறுவனம் வழங்கிய முழு சேமிப்பு இடமும் சேமிக்கப்படும் போது, புதியதாக நினைவகத்தை விலை கொடுத்து கூகுள் நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும். இல்லையெனில் நம்முடைய ஈமெயில்களை நீக்கம் செய்ய வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும் போது ஈமெயிலகளை பேக்அப் செய்து மீண்டும் வேறொரு ஜிமெயிலில் அப்லோட் செய்து கொள்ள முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் Account > New என்பதை தேர்வு செய்து உங்களுடைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு பின் Sever என்ற இடத்தில் imap.gmail.com என்பதை உள்ளிட்டு ஒகே செய்யவும்.


இப்போது உங்களுடைய கணக்கானது பரிசோதிக்கப்படும். பின் Account-> Account Backup எனபதை தேர்வு செய்யவும். இப்போது உங்களுடைய ஈமெயில் அக்கவுண்ட் பட்டியலிடப்படும். அதில் உள்ள லேபிள்களை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.



பேக்அப் சேமிக்க வேண்டிய  இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். பின் Back up பொத்தானை அழுத்தி பேக்அப் செய்து கொள்ளவும். இந்த மென்பொருளின் சிறப்பம்சமே ஒரு ஜிமெயில் அக்கவுண்டில் பேக்அப் செய்து கொண்டு மற்றொரு அக்கவுண்டில் அப்லோட் செய்து கொள்ள முடியும். ஜிமெயில் நிறுவனம் ஆரம்பித்த போது பயனர் கணக்கு தொடங்கிய பலருக்கும் தற்போது முழு சேமிப்பு இடமும் நிறைந்திருக்கும். அவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையை தொடங்கிய வருடம் 2004 ஆகும். இண்டர்நெட் இணைப்பு அதிவேகமாக இருந்தால் மட்டுமே இவையணைத்தும் சாத்தியம் ஆகும். இல்லையெனில் வேலை தாமதப்படும்.