Tuesday, August 2, 2011

ஃபேஸ்புக்கில் குறையா? பிடிங்க 500 டாலர்!



பொதுவாக ஒரு இணைய நிறுவனம் பயனாளர்களுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தும் முன், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பல்வேறு தொழில்நுட்ப பொறியாளர்களைக் கொண்டு பரிசோதித்துவிட்டு, பிறகு தான் வெளியிடும். ஆனாலும் அதனையும் மீறி சில பாதுகாப்பு குறைப்பாடுகள் (Security Bugs) இருக்கத் தான் செய்யும். அதனை பயனாளர்கள் பயன்படுத்தும் போது காணப்படலாம்.


அப்படி வரும் பாதுகாப்பு குறைபாடுகளை பயனாளர்கள் அந்த நிறுவனத்திற்கு தெரிவிக்க ஊக்கப்படுத்தும் வகையில் வெகுமதிகள் அளிப்பதுண்டு. இதனை கூகிள், மைக்ரோசாஃப்ட், மொஜில்லா (Mozilla) போன்று பல தளங்கள் செய்து வருகின்றன. அதன் வரிசையில் தற்போது ஃபேஸ்புக்கும் சேர்ந்துள்ளது.

பேஸ்புக்கில் ஏதாவது பாதுகாப்பு குறைபாடுகளை நீங்கள் கண்டுபிடித்து அவர்களுக்கு தெரிவித்தால் அதற்கு பரிசாக உங்களுக்கு ஐநூறு (500) டாலர் பரிசு கிடைக்கும்.

அதற்கான தகுதிகள்:

** ஏதாவது குறை ஒன்றை நீங்கள் கண்டுபிடித்தால் முதலில் பேஸ்புக் நிறுவனத்திடம் தான் தெரிவிக்க வேண்டும். அவர்கள் பதில் அளிக்கும் வரையில் பொதுவில் அதனை தெரிவிக்கக் கூடாது.

** அதிகமானோர்  ஒரே குறைபாடுகளை தெரிவித்தால், முதலில் தெரிவிப்பவருக்கு தான் வெகுமதி.

** குறைபாடுகள் பாதுகாப்பு தொடர்பாக இருக்க வேண்டும்.

நீங்கள்  தெரிவிக்கும் குறைபாடு பெரியதாக இருந்தால், அதற்கேற்றார் போல் வெகுமதியும் அதிகமாகும்.

கவனிக்க:

பேஸ்புக்கில் உள்ள விளையாட்டுக்கள் போன்ற மூன்றாம் தரப்பினரின் பயன்பாட்டில் (Third Party's Application) உள்ள குறைப்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாது.அது போல Spamதொடர்பான குறைபாடுகளையும் எடுத்துக் கொள்ளாது.

இது பற்றி மேலும் படிக்க: https://www.facebook.com/whitehat/bounty/

கூகிள் குறைபாடுகள் பற்றி படிக்க: http://googleonlinesecurity.blogspot.com/2010/11/rewarding-web-application-security.html

Mozilla குறைபாடுகள் பற்றி படிக்க: http://www.mozilla.org/security/bug-bounty.html

கணினியில் இன்ஸ்டால் செய்துள்ள மென்பொருட்களின் சீரியல் எண்களை காண


நாம் கணினியில் பல கட்டண மென்பொருட்களை நிறுவி இருப்போம். உதாரணமாக OS, மைக்ரோசாப்ட் ஆபிஸ்,போட்டோசாப் போன்ற மென்பொருட்களை நம்முடைய கணினியில் கட்டாயம் நிறுவி இருப்போம். அதை நிறுவும் பொழுது அதற்க்கான சீரியல் எண்களை கொடுத்து இன்ஸ்டால் செய்து இருப்போம். ஆனால் அந்த சீரியல் எண்களை இப்பொழுது நம்மால் பார்க்க முடியாது. ஒருவேளை அந்த சீரியல் எண்களை நாம் குறித்து வைக்காமல் இருந்தால் கணினியில் ஏதேனும் பழுது ஏற்ப்பட்டால் திரும்பவும் நிறுவ அந்த சீரியல் எண் மிகவும் அவசியம். இது போன்ற சூழ் நிலையில் நமக்கு உதவத்தான் இந்த சூப்பரான மென்பொருள் உள்ளது.
  • இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளவும் இதை இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாக இயக்கலாம்.  
  • அந்த மென்பொருளை Extract செய்து பின்னர் அதன் .exe பைலை ஓபன் செய்யுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • அடுத்து Search என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Time counter ஓடி கொண்டிருக்கும். முடிந்ததும் ok என்ற பட்டன் வரும் அதை க்ளிக் செய்யவும். 
  • அவ்வளவு தான் உங்களுடைய கணினி ஸ்கேன் ஆகும். ஸ்கேன் ஆகி முடிந்ததும் உங்கள் கணினியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள் தெரியும்.
  • இப்படி உங்களுக்கு கணியில் இன்ஸ்டால் செய்துள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள் வரும். 
  • உங்கள் கணினி மட்டுமல்லாது அலுவலகங்களில் உங்கள் கணினியோடு லோக்கல் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கணினியின் சீரியல் எண்களை பார்த்து கொள்ளலாம்.
  • அதற்க்கு local host என்ற இடத்தில க்ளிக் செய்தால் உங்கள் கணினியோடு இணைந்துள்ள மற்ற கணினியின் சீரியல் எண்களையும் அவர்களின் அனுமதியின்றி பார்த்து கொள்ளலாம்.
  • HKEY_LOCAL_MACHINE என்ற இடத்தில் மாற்றம் செய்தும் மற்ற கணினிகளின் சீரியல் எண்களை பார்த்து கொள்ளலாம். 
  • உங்களுடைய நண்பர்களின் கணினிகளில் நிறுவியும் அந்த சீரியல் எண்களை குறித்து வைத்தும் நீங்களும் பயன்படுத்தி கொள்ளலாம். 
  • இந்த அணைத்து வசதிகளையும் இலவசமாக நமக்கு வழங்குகிறது இந்த மென்பொருள்.
மென்பொருளை டவுன்லோட் செய்ய - Licence Crawler1.6.0.182




எவ்ளோ நேரம் தொங்கினாலும் இதுக்கு மேல வளர முடியலையே 

/************/

இஸ்லாம் நண்பர்களுக்கு கூகுளின் பரிசு


நண்பர்கள் அனைவருக்கும் ரமலான் மாத வாழ்த்துக்கள். 


முஸ்லிமாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த ரமலான் மாதம் மிகவும் புனிதமான நாட்களாகும். இந்த நாட்களில் அவர்கள் இறைவனுக்காக கடும் விரதம் மேற்கொண்டு இறைவனை வழிபடுவர்.  இஸ்லாம் நண்பர்கள் புனித தளமான மெக்காவில் உள்ள அல்-மஜீத்-அல்-ஹரம் மசூதியில் நடைபெறும் தொழுகைகளை நேரடியாக உலகம் முழுவதும் பார்க்கும் வசதியை யூடியுப் மூலம் கூகுள் வழங்கி உள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு கூகுள் கொடுத்துள்ள ரமலான் பரிசாகும். 

உலகிலேயே மிகப்பெரிய மசூதியான இந்த இடத்தில் இருந்து நேரடி லைவில் பார்ப்பது அனைத்து இஸ்லாம் நண்பர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமே.

இஸ்லாம் நண்பர்களுக்கு ரமலான் தின வாழ்த்துக்கள்.