Thursday, March 29, 2012

Corrupt ஆன Zip File-இல் இருந்து எப்படி Fileகளை Extract செய்வது?


சில நேரங்களில் நாம் வைத்து இருக்கும் Zip File-இல் ஏதேனும் பிரச்சினை என்றால் அதில் இருக்கும் ஒரு File-ஐ கூட நம்மால் Extract செய்ய இயலாது. ஏதேனும் ஒரு file Damage/corrupt ஆகி இருந்தாலும் நமக்கு இந்த பிரச்சினை வரும். ஆனால் அதனுள் இருக்கும் Damage ஆகாத File-களை மட்டும் நாம் பெற முடிந்தால்? எப்படி செய்வது?


1. முதலில் Zip2Fix என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

2. இதை இன்ஸ்டால் செய்யும் போது Custom Installation என்பதை தெரிவு செய்ய வேண்டும். இதன் மூலம் தேவையற்ற Add-On களை தவிர்க்க இயலும். (கீழே படத்தில் காண்க)



3. இப்போது இன்ஸ்டால் செய்யும் வேலை முடிந்து விடும். பின்னர் Damage/corrupt ஆன Zip file ஒன்றை Open option மூலம் தெரிவு செய்ய வேண்டும்.




4. உடனடியாக இந்த மென்பொருள் அதனை சோதனை செய்யும். எத்தனை File-கள் Extract செய்ய இயலும் என்பதை File Is Ok என்றும், தன்னால் முடியாததை File Is Corrupted என்றும் காட்டிவிடும்.

5. உடனடியாக நல்ல File-களை மட்டும் Filename_ZFX என்ற புதிய Zip File ஆக Source Folder இருந்த இடத்திலேயே உருவாக்கிவிடும்.


  எல்லா File-களையும் தராவிட்டாலும், தன்னால் முடிந்த அளவு பயன்படும் நிலையில் உள்ள அனைத்து File-களையும் Extract செய்யும் வசதியை தருவதால் மிக அருமையான ஒரு மென்பொருள் இது. இன்ஸ்டால் செய்யும் போது Step-2 வை மட்டும் சரியாக செய்யவும்.

மென்பொருள் நிறுவனத்தின் பக்கம்

http://leelusoft.blogspot.in/2011/06/zip2fix-10.html

Wednesday, March 28, 2012

Recent Item History-களை தானாக நீக்குவது எப்படி?



நம் தனிப்பட்ட தகவல்களை அடுத்தவர்கள் பார்த்தால் நமக்கு எப்படி இருக்கும்? கணினியில் அப்படி யாரேனும்  உங்களுக்கே தெரியாமல் உங்களை கவனித்தால்? நீங்கள் கணினியில் என்ன செய்கிறீர்கள் என்பதை அடுத்தவர் அறியா வண்ணம் செய்வது மிகவும் முக்கியம்.  இதற்கு முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டிய விஷயம் Recent Items History என்பதை நீக்க வேண்டும். எப்படி?

அதாவது Start Menu வை கிளிக் செய்தால் வரும் Recent Documets-ல் யார் வேண்டுமானாலும் நம்முடைய செயல் பாடுகளை கவனிக்க முடியும் . இதற்காக ஒவ்வொரு முறையும் நம்மால் Recent Item  History  என்பதை நீக்கி கொண்டிருக்க முடியாது. ஆனால் நம்முடைய தனிமையும் முக்கியம் . என்ன செய்யலாம் ?

Start Menu மீது Right Click செய்து Properties என்பதை தெரிவு செய்யவும். அதில் Customize என்பதை தெரிவு செய்தால் கீழே படத்தில் உள்ளபடி வரும். பின்னர் Windows 7 பயன்படுத்தும் நண்பர்கள் Customize Start Menu என்பதில் உள்ள Recent Items என்பதை Unclick செய்து விடவும், XP பயன்படுத்தும் நண்பர்கள் கீழே இரண்டாம் படத்தில் உள்ளபடி செய்து விடவும்.


For Windows 7



For XP


இதில் ஒரு பிரச்சினை என்ன என்றால் இது வெளியே காண்பிக்காவிட்டாலும் உங்கள் செயல்களை சேகரித்துக் கொண்டே இருக்கும்.அதாவது இது மறைத்து மட்டும் வைக்கிறது இதை வேறு வழிகளில் அறிய முடியும்.

இந்த வம்பே வேண்டாம் தானாகவே எல்லாம் நீக்கப்பட வேண்டும் என்பவர்கள் இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவி கொண்டால் போதும் ,




எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை Recent item  history  ஐ நீக்க வேண்டும் என்று கொடுக்க வேண்டும் .அவ்வளவு தான் அதன் பின்பு தானாகவே history நீக்க பட்டு விடும் .

Tuesday, March 20, 2012

ஒரே Click. உங்கள் கணினிக்கு அத்தியாவசியமான அத்தனை மென்பொருளும் தயார்.


கணணியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இயங்குதளம் செயலிழந்து போகும் போது, மீண்டும் அனைத்து மென்பொருள்களையும் நிறுவ வேண்டிய நிலை ஏற்படும்.

இயங்குதளத்தை மீண்டும் நிறுவுவது கூட மிக சுலபம், ஆனால் அனைத்து மென்பொருள்களையும் மீண்டும் நிறுவுவது என்பது கடினமான ஒன்று.

இந்த வேலையை சுலபமாக்க ஒரு இணைய மென்பொருள் உள்ளது. ஒட்டு மொத்தமாக எந்தெந்த மென்பொருள்களை நிறுவ வேண்டுமோ அவற்றை தேர்ந்தெடுத்து கொண்டு, ஒரே நேரத்தில் கணணியில் நிறுவி விடலாம்.

நீங்கள் இயங்குதளத்தை புதிதாக நிறுவிய பிறகு இந்த Ninite தளத்திற்கு செல்லுங்கள். அங்கு நாம் அடிக்கடி உபயோகிக்கும் பெரும்பாலான மென்பொருள்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும்.

உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொண்டு, கீழே உள்ள Get Installer என்ற பட்டனை கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தரவிறக்கி கொள்ளுங்கள்.

தற்போது அந்த மென்பொருளை இயக்கினால் நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து மென்பொருள்களும் தானாக தரவிறக்கப்பட்டு, உங்களது கணணியில் நிறுவப்பட்டு விடும்.

http://ninite.com/

Friday, March 16, 2012

VLC மீடியா பிளேயரில் வீடியோவை கட் செய்யலாம்!


விஎல்சி மீடியா பிளேயர் ( Vlc Media Player) கணிணியில் அனைத்து வகையான வீடியோக்களையும் இயக்க முதன்மையான மென்பொருளாக இருக்கிறது. எளிமையான இந்த மென்பொருள் புதிய வசதிகளுடன் Version 2 வெளியிடப் பட்டிருக்கிறது. இப்போது இந்த மென்பொருளிலேயே நீங்கள் வீடியோவில் தேவையான பகுதிகளை விருப்பப்படி கட் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வீடியோ கட்டராகவும் இந்த மென்பொருள் பயன்படும்.

இதற்கு கணிணியில் புதிய பதிப்பான VLC 2.0 நிறுவியிருக்க வேண்டும். இல்லாதவர்கள் கீழுள்ள சுட்டியில் சென்று தரவிறக்கி நிறுவிக் கொள்ளவும்.

VLC மென்பொருளைத் திறந்து View மெனுவில் Advanced Controls என்பதனை கிளிக் செய்தால் மென்பொருளின் கீழ்புறத்தில் புதிய வசதிகளுடைய ஐகான்கள் தோன்றும். அதில் முதல் பட்டன் சிவப்பு நிறத்தில் Record என்றிருக்கும். தேவையான பகுதி ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு முறை அந்த பட்டனில் கிளிக் செய்யவும். பிறகு வீடியோ எதுவரை வேண்டுமோ அதுவரை வீடியோவை ஓடவிடவும். மறுபடியும் அதே Record பட்டனைக் கிளிக் செய்தால் தேவையான வீடியோவின் பகுதி கட் செய்யப்பட்டு விடும்.
வெட்டப்பட்ட வீடியோ Mp4 பார்மேட்டில் My Documents->My Videos போல்டரில் சேமிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதில் உள்ள குறை என்று பார்த்தால் தேவையான பகுதி வீடியோவை ஓட விட்டால் மட்டுமே கட் செய்ய முடியும். இருப்பினும் வேகமாக எளிமையான முறையில் கட் செய்து விடVLC மீடியா பிளேயரைப் பயன்படுத்தலாம்.

இந்திய தொலைக்காட்சி சீரியல்களை யூடியுபில் காண [19000+ Episodes]

இந்தியர்கள் பெரும்பாலும் சினிமா மற்றும் தொலைக்காட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். குறிப்பாக வீட்டினில் இருக்கும் பெண்கள் தொலைக்காட்சி சீரியல்களுக்கு அடிமையாகி விட்டனர். சீரியல் எல்லாமே நடிப்பு என்பதை மறந்து அதனுடன் ஒன்றிப்போய் துக்க காட்சிகளுக்கு வருத்தப்படுவதும், சந்தோச காட்சிகளுக்கு சந்தோசப்படும் அளவுக்கு சீரியல்கள் இவர்களை அடிமையாக்கி உள்ளது.  வீடியோக்களின் தகவல் களஞ்சியமான யூடியுப் தளத்தில் சுமார் 19,000 க்கும் அதிகமான இந்திய தொலைக்காட்சி சீரியல் வீடியோக்கள் கொட்டி கிடப்பதாக யூடியுப் தளம் அறிவித்து உள்ளது. மின்சார பிரச்சினையால் சீரியல்களை தவற விட்டாலோ அல்லது பழைய எபிசோட்களை பார்க்க விரும்பினாலோ இனி யூடியுப் தளத்தில் சென்று உங்களுக்கு விருப்பமான பகுதிகளை பார்த்து கொள்ளலாம்.


முடிந்து போன சீரியல்களின் முழு தொகுப்பும் இங்கு உள்ளது. இந்திய மொழிகளில் சுமார் 6 மொழிகளில் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் நிகழ்சிகளை கண்டு களிக்கலாம். 

அனைத்து மொழிகளிலும் காண - Indian Serials on Youtube

தமிழ் நிகழ்சிகளை காண - Tamil Serials on Youtube

தொடர்புடைய இடுகை

டிஸ்கி: தமிழில் பெரும்பாலான சீரியல்களின் ராதிகா போட்டோ தான் இருக்கு. ஒருவேளை இவுங்க தான் சின்னத்திரை சூப்பர் ஸ்டாரோ?

Friday, March 2, 2012

Nokia Phone இன் Life Timer இனை Zero ஆக்குவது எப்படி?


நம்முடைய Phone வாங்கி இன்றுவரை எத்தனை மணித்தியாலங்கள் மற்றும் நிமிடம் பாவித்து இருக்கிறது என்பதை அறிய Phone இல் *#92702689# இனை டைப் செய்தால் போதும், அதை பற்றிய விபரங்கள் அனைத்தையும் காட்டிவிடும்.இதை எப்படி Zero (0) ஆக்குவது என்று பார்ப்போம்.



தேவையானது

01.உங்களுடைய phone இன் Data Cable



04.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இல்லாதவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்








நீங்கள் டவுன்லோட் செய்த PM File இனை Open செய்து கொள்ளுங்கள்



அவ்வளவுதான்......உங்களுடைய Phone இனை Switch OFFஆக்கிவிட்டு, ON செய்து LifeTimer இனை (*#92702689#) பாருங்கள்.....0வில் இருக்கும்.