Tuesday, March 20, 2012

ஒரே Click. உங்கள் கணினிக்கு அத்தியாவசியமான அத்தனை மென்பொருளும் தயார்.


கணணியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இயங்குதளம் செயலிழந்து போகும் போது, மீண்டும் அனைத்து மென்பொருள்களையும் நிறுவ வேண்டிய நிலை ஏற்படும்.

இயங்குதளத்தை மீண்டும் நிறுவுவது கூட மிக சுலபம், ஆனால் அனைத்து மென்பொருள்களையும் மீண்டும் நிறுவுவது என்பது கடினமான ஒன்று.

இந்த வேலையை சுலபமாக்க ஒரு இணைய மென்பொருள் உள்ளது. ஒட்டு மொத்தமாக எந்தெந்த மென்பொருள்களை நிறுவ வேண்டுமோ அவற்றை தேர்ந்தெடுத்து கொண்டு, ஒரே நேரத்தில் கணணியில் நிறுவி விடலாம்.

நீங்கள் இயங்குதளத்தை புதிதாக நிறுவிய பிறகு இந்த Ninite தளத்திற்கு செல்லுங்கள். அங்கு நாம் அடிக்கடி உபயோகிக்கும் பெரும்பாலான மென்பொருள்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும்.

உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொண்டு, கீழே உள்ள Get Installer என்ற பட்டனை கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தரவிறக்கி கொள்ளுங்கள்.

தற்போது அந்த மென்பொருளை இயக்கினால் நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து மென்பொருள்களும் தானாக தரவிறக்கப்பட்டு, உங்களது கணணியில் நிறுவப்பட்டு விடும்.

http://ninite.com/

No comments:

Post a Comment