பேஸ்புக் மூலம் கடந்த கால நம் பேச்சு மற்றும் சுவையான பல உரையாடல்களை எளிதாக மீட்டெடுத்து அன்றைய தினம் இமெயில் மூலம் தெரிவிக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
சென்ற ஆண்டு இதே நாள் நான் பேஸ்புக்-ல் யாருக்கெல்லாம் செய்தி அனுப்பினேன் அல்லது எனக்கு யார் எல்லாம் செய்தி அனுப்பினார்கள் என்ற விபரங்களை நமக்கு இமெயில் மூலம் தெரிவிக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://pastposts.com
படம் 2
இத்தளத்திற்கு சென்று Connect with Facebook என்ற பொத்தனை சொடுக்கி நம் பேஸ்புக் கணக்கை கொடுத்து உள் நுழையலாம். அடுத்து வரும் திரை படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது இதில் Allow என்பதை சொடுக்கு உள்நுழையலாம். இனி நாம் கடந்த ஆண்டு என்னவெல்லாம் பேசினோம் என்பதை தினமும் நமக்கு இமெயில் மூலம் தெரிவித்து கொண்டே இருக்கும் இந்ததளம். சில நேரங்களில் நம் பழைய நிகழ்வுகளை அசைபோட ஒரு சந்தர்ப்பமாகவும் இது இருக்கும். புதுமை விரும்பிகளுக்கும் பேஸ்புக் நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment