
1. Lyrics for Firefox
யுடியூபில் பாடல்களை வீடியோவாகப் பார்க்கும் போதெ பக்கத்தில் பாடல் வரிகளும் தோன்றினால் நன்றாக இருக்கும் என நினைக்கலாம். இதற்கு உதவக்கூடியதாக பயர்பாக்ஸ் நீட்சி ஒன்று இருக்கிறது. இதன் பெயர் Lyrics. இது பாடலுக்கு ஏற்ற பாடல்வரிகளை இணையத்தில் தேடி எடுத்து அருகிலேயே காண்பித்து விடும். இதனால் நாம் பாடல்வரிகளைத் தேடும் வேலை மிச்சமாகிறது. ஆனால் தற்போது ஆங்கிலப் பாடல்களுக்கு மட்டுமே அதிமாக பாடல் வரிகள் வருகின்றன. சில தமிழ்ப் பாடல்களுக்கும் ஆங்கில வரிகள் கிடைக்கின்றன. இதை கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து நிறுவிய பின் ஒருமுறை பயர்பாக்சை ரீஸ்டார்ட் செய்து கொள்ளவும்.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/lyrics/

மின்னலே வசிகரா பாடல்- http://www.youtube.com/watch?v=e_TZaqqnyJg
2.Chrome - Music video lyrics for Youtube
நீங்கள் குரோம் உலவி பயன்படுத்தினால் அதற்கு தனியாக ஒரு நீட்சி இருக்கிறது. ஆனால் இது மேற்குறிப்பிட்ட பயர்பாக்ஸ் நீட்சி அளவுக்கு அதிகான வீடியோக்களுக்கு பாடல்வரிகளைக் காண்பிக்க வில்லை. இருந்தாலும் பயன்படுத்தலாம்.குரோம் உலவியில் இந்த சுட்டியைக் கிளிக் செய்து நீட்சியை Add to Chrome கொடுத்தால் நிறுவப்படும்.Download Music video lyrics for youtube


No comments:
Post a Comment