Thursday, June 30, 2011

மென்பொருட்களின் சீரியல் எண்ணை இலவசமாக பெற




இன்று உலகில் கம்ப்யூட்டர் இல்லாத துறையே இல்லை எனலாம். அந்த அளவிற்கு கணினி நம்மிடம் வளர்ச்சி அடைந்துள்ளது. இப்பொழுது கம்ப்யூட்டர் ரூபாய் 10000 அளவிற்கு கூட கிடைகின்றது. ஆனால் 10000 கொடுத்து வாங்கினாலும் உடனே அதில் வேலை செய்ய முடியவில்லை . அதில் இயங்குதளங்களை பதிந்தால் மட்டுமே நாம் அனைவரும் உபயோகிக்க முடியும். மற்றும் நமக்கு பிடித்த மென்பொருட்களை இணையத்தில் இருந்து இலவசமாக தரவிறக்கி கொள்கிறோம். ஆனாலும் அப்படி தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களை விட விலை கொடுத்து வாங்கும் மென்பொருட்கள் மிகுந்த வசதிஉடனும் பாதுகாப்புடனும் இருக்கும். ஆனால் நம்மால் விலை கொடுத்தும் வாங்க முடியாது. இந்த நிலையில் நமக்கு உதவி செய்கிறது இந்த இணையதளம். இணையத்தில் அனைத்து மென்பொருட்களும் (traial versions) இலவசமாக கிடைக்கும். அதை தரவிறக்கி நம் கம்ப்யூட்டர்யில் சேமித்து கொள்ளவும். அதை install செய்வதற்கு முன்னால் இந்த இணயத்தளம் செல்லவும் http://www.youserials.com

இதில் அனைத்து வகையான மென்பொருட்களின் சீரியல் எண்களும் கொடுத்து உள்ளார்கள். உங்களுக்கு எந்த மென்பொருட்களின் சீரியல் எண் வேண்டுமோ அந்த மென்பொருட்களின் பெயரை அதில் டைப் செய்து என்ட்டர் கொடுக்கவும் . இப்பொழுது கிடைக்கும் எண்ணை copy செய்து நீங்கள் இன்ஸ்டால் செய்யும் போது கொடுக்கவும்

உங்கள் Wi-Fi மோடத்தை இப்போது பயன்படுத்துபவர்கள் யார் ?


நம் வீட்டில் வயர்லெஸ் மோடம் வைத்து நாம் அடுத்த ரூமில் இருந்து கொண்டு லேப்டாப்பில் இணையத்தில் உலா வருவோம். முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலா வந்தோம். ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ் மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம்.
ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உள்ளது.அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலா வந்தால் என்ன ஆகும்.


நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போச்சு என்று கொள்ள வேண்டியதுதான். இது போல நடந்தால் கண்டுபிடிக்க நம் கணினி தவிர வேற எந்த கணினிகள் நம் வயர்லெஸ் மோடம் வழியாக இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள Who is on my Wifi என்ற மென்பொருள் உதவுகிறது. மென்பொருள் தரவிறக்க சுட்டி.

நாம் தேடும் அரட்டை மென்பொருள்


நண்பர்களின் கணினியிலேயோ இல்லை ப்ரெளசிங் சென்டரிலேயோ இணைய அரட்டையில் ஈடுபட வேண்டுமெனில் அதற்கு நாம் தேடும் இணைய அரட்டை மென்பொருள் வேண்டும். ஒரு சில கணினியில் Limit பயனர் கணக்கில் பனியாற்றுவோம் அந்த சூழ்நிலையில் நம்மால் மென்பொருளை நிறுவிக்கொள்ள முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க ஒருதளம் உதவி செய்கிறது.

இணையத்தில் அடி எடுத்து வைத்தவுடனே முதலில் இணைய பயனாளர்கள் கற்றுக்கொள்வது என்னவெனில் சாட்டிங் செய்ய மட்டுமே ஆகும். பெரும்பாலான இணைய பயனாளர்கள் நண்பர்களிடம் அரட்டை அடிக்கவே இணையத்தை பெரிதும் நாடிச் செல்கிறனர். முக்கியமான தருணங்களில் அரட்டைகளில் ஈடுபடுவது சாதரண செயல் ஆகும். ஆனால் எந்த நேரமும் ஒரு சில இணைய பயனாளர்கள் அரட்டையில் ஈடுபடுவார்கள். அவர்கள் சாப்பிடாமல் வேண்டுமானாலும் இருப்பார்கள் ஆனால் அரட்டையில் ஈடுபடாமல் மட்டும் இருக்க மாட்டார்கள். 

அவர்கள் இணையத்திற்கு தினமும் செல்வார்கள் ஆனால் அவர்கள் செய்யக்கூடிய ஒரே செயல் அரட்டை அடிக்கும் செயல் மட்டுமே ஆகும். இதனால் பணம் மட்டுமே செலவாகும். இதுபோன்ற பயனாளர்கள் பல்வேறு இணைய அரட்டைகளில் ஈடுபடுவார்கள் உதாரணாமாக யாகூ, ஸ்கைப், எம்.எஸ்.என், ஜிடால்க் மற்றும் பல இணைய அரட்டைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவார்கள் இதுபோன்ற பயனார்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனி மென்பொருளை நாடிச்செல்ல வேண்டும். 

தளத்திற்கான சுட்டி

நோக்கியா மொபைல் - சில முக்கியமான தகவல்கள்

நீங்கள் நோக்கியா செல்போன் பயன்படுத்துபவரா ? தொடர்ந்து படியுங்கள் , இந்த பதிவு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

நோக்கியா செல்போன் பற்றி சில அடிப்படை தகவல்கள் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால் நம்முடைய அலைபேசியை வாங்கும்போதோ, விற்கும்போதோ இந்த தகவல்கள் பயன் உள்ளதாக இருக்கும்.



உங்கள் செல்போனில் இருந்து *#06# – டயல் செய்தால் உங்கள் செல்போன் IMEI (International Mobile Equipment Identity) எண்ணை தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் IMEI எண் தெரிந்தவுடன் கீழே இருக்கும் லிங்க் சென்று உங்களின் IMEI எண் தந்து உங்களின் IMEI எண் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

பின்பு இந்த தளம் சென்று உங்கள் செல்போன் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள். 



1). Information you get from the IMEI-

XXXXXX XX XXXXXX X

TAC FAC SNR SP

TAC = Type approval code

FAC = Final assembly code

SNR = Serial number

SP = Spare

மேலும் உங்கள் செல்போனில் இருந்து,

2.) *#0000# - Software Revision பற்றி தெரிந்து கொள்ளலாம்.

1ST Line = Software revision

2ND Line = The date of the software release

3RD Line = Phone type

3.) *#7780# - Factory settings Restore செய்ய.

4.) *#92702689# or [*#war0anty#] -டயல் செய்து கீழே உள்ளவற்றைதெரிந்துகொள்ளலாம்.

Serial number (IMEI)

Production date (MM/YY)

Purchase date (MM/YY) You can only enter the date once.

Date of last repair (0000=No repair)

Transfer user data to another Nokia phone via Infra-Red

5.) Default security code is 12345

6.) *#2820# Bluetooth device address.

படங்களின் அளவை மாற்றியமைக்க - AnyPic Image Resizer


இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் தனித்தனி பார்மெட்டில் இருக்கும். அந்த போட்டோக்கள் அனைத்தும் ஒரே அளவாகவும் (SIZE) இருக்காது. இவ்வாறு உள்ள போட்டோக்களின் அளவை மாற்றவும், பார்மெட்டை மாற்றவும். நாம் எதாவது ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருளின் உதவியை மட்டுமே நாட வேண்டும். போட்டோக்களை எடிட் செய்ய வேண்டுமென்றால் அனைவரும் கூறுவது போட்டோசாப் மென்பொருளை மட்டுமே. ஒரு போட்டோவாக இருந்தால் எளிமையாக எடிட் செய்துவிட முடியும். ஆனால் அதிகமான போட்டோக்கள் இருப்பின் அந்த போட்டோக்களை  எடிட் செய்வது சற்று சிரமமான விஜயம் ஆகும். அவ்வாறு அதிகமாக உள்ள படங்களின் அளவையும், பார்மெட்டையும் ஒரே நேரத்தில்  மாற்றியமைக்க உதவும் மென்பொருள்தான் AnyPic Image Resizer ஆகும். இந்த மென்பொருளின் உதவியுடன் படத்தின் அளவையும், பார்மெட்டையும் எளிமையாக மாற்றியமைக்க முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் AnyPic Image Resizer அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். Add என்னும் சுட்டியை அழுத்தி படங்களை தேர்வு செய்து கொள்ளவும். பின் எந்த பைல் பார்மெட்டில் படங்கள் வேண்டும் என்பதை தேர்வு செய்து கொண்டு, படத்தின் அளவை குறிப்பிடவும்.



எது மாதிரியான பார்மெட்டில் படம் வேண்டுமோ அதனை குறிப்பிட்டு கொள்ளவும். பின் கன்வெர்ட் பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் படமானது சேமிக்கப்பட்டுவிடும். ஆன்ராய்ட் மொபைல் சாதனத்துக்கு ஏற்ற மாதிரியாகவும், ஈ-மெயிலுக்கு ஏற்றது போலவும்.  பேஸ்புக் மற்றும் ஐபேட்,ஐபோன் சாதனங்களுக்கு  ஏற்ற மாதிரியாகவும், படத்தினை மாற்றிக்கொள்ள முடியும். BMP, JPG(JPEG), PNG, TGA, TIFF, PSD, GIF போன்ற பைல் பார்மெட்களில் படத்தினை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்

Wednesday, June 29, 2011

ஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளைப் பயன்படுத்த Multi Skype Launcher

ஸ்கைப் சேவையை உலகெங்கும் பலர் இண்டர்நெட் வழியாக பேசுவதற்கும் வீடியோ காலிங் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை Voive Over IP என்ற தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இதன் மூலம் ஸ்கைப் பயனர்கள் மற்ற ஸ்கைப் பயனர்களுக்கு இலவசமாகப் பேச முடியும். தொலைபேசி மற்றும் வேறு அழைப்புகளுக்கு கணக்கிலிருந்து பிடித்துக் கொள்வார்கள். தற்போது இந்த சேவையை மைக்ரோசாப்ட் 8.5 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தற்போது 663 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். 

ஆனால் இந்த சேவையில் ஒரு நேரத்தில் ஒரு பயனர் கணக்கைத் தான் பயன்படுத்த முடியும். உங்களுக்கு ஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளில் நுழைய வேண்டும் என ஆசைப்பட்டால் ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது. அதன் பெயர் Multi Skype Launcher. இந்த மென்பொருள் மூலம் ஒரே கணிணியில் பல ஸ்கைப் கணக்குகளில் நுழைந்து பல நண்பர்களிடம் பேச முடியும்.

இந்த மென்பொருளைத் தரவிறக்கியதும் நிறுவி விட்டு தங்களது கணக்கில் முதலில் நுழையவும். பின்னர் ADD என்பதைக் கிளிக் செய்து தங்களின் பல கணக்குகளைச் சேர்த்துக் கொண்டு பயன்படுத்தலாம். வெறும் 1.7 Mb அளவே உடைய இலவச மென்பொருளாகும்.

தரவிறக்கச்சுட்டி: http://multi-skype-launcher.com/

MAGIC தந்திரோபாயங்களை கற்றுகொள்ள ஓர் தளம்


MAGIC அனைவரையும் கவரும் ஒருவகை விளையாட்டு . சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த MAGIC விளையாட்டுக்களை ரசிப்பவர்களாக தான் இருக்கிறார்கள் . ஒரு சிலர் செய்துகாட்டும் போது அதன் தந்திரோபயங்களை மற்றவர்களுக்கு சொல்லிகொடுப்பதில்லை . எனவே ஒருசிலர் செய்ய மற்றவர்கள் அதிசயமாக பார்த்து ரசிக்கிறார்கள் . 

இந்த MAGIC தந்திரோபாய ரகசியங்களை வீடியோ மூலம் கற்று கொள்ள 
உதவுகிறது YUDOMAGIC.COM என்ற வீடியோ தளம் 




இந்த தளத்தில் முழுவதும் வீடியோ மூலம் செய்து காட்டப்படுவதால் கற்றுகொள்வது இலகுவாக அமைகிறது .  இந்ததளத்தில் பல்வேறுபட்ட மொழிகளில்,பல்வேறுபட்ட வகைப்படுத்தலில் MAGIC தந்திரோபாயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன . மேலும் இந்ததளத்தில் உங்களை பதிவு செய்வதன் மூலம் உங்களிடம் உள்ள MAGIC தொடர்பானவீடியோ களை இந்ததளத்தில் பகிரவும் முடியும் . 

தளமுகவரி YUDOMAGIC.COM 

ஆங்கிலம் தமிழ் டிக்ஸ்னரியும், ஆங்கிலம் வழி தமிழ் தேடலும்

இந்த பதிவின் வழியாக நாம் இரண்டு விஷயங்களை பார்க்கலாம் ஒன்று தமிழ் அகராதி(டிக்ஸ்னரி) மற்றொன்று இனையத்தில் எல்லோருக்கும் தமிழில் எழுத தெரியாது ஆனால் தமிழில் இருக்கும் ஒரு விஷயத்தை தான் தேட வேண்டியிருக்கிறது என்றால் என்ன செய்வது அதற்கு தான் இந்த பதிவு இதன் வழியே நாம் puriYaatha kiRukkalkaL என்பதாக கொடுத்து தேடினால் புரியாத கிறுக்கல்கள் சம்பந்தபட்ட பதிவுகளை வெளிக்கொண்டு வரலாம்.

இனி முதலாவதாக ஐரோப்பியன் டிக்ஸ்னரி குறித்து பார்க்கலாம் இவர்கள் 31 மொழிகளுக்கு அர்த்தம் கொடுக்கிறார்கள் குறிபிட்டு சொல்வதனால் தமிழுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேறு இந்திய மொழிகளுக்கு இல்லை என்பதை உணரமுடிகிறது இனி இதன் தேடலின் பதில் எப்படியாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு உதாரணமாக Aggregate என்பதை தேடினால் அது எந்தவிதமான இடத்தில் பயன்படுத்த படுகிறது வேறு எந்த இடத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்த முடியும் என்பதையும் நமக்கு தெரிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக தருகிறார்கள் மேலும் தமிழ் வார்த்தைக்கான ஆங்கில சொற்றொடரும் தெரிந்துகொள்ளலாம். ஆனால் என்ன ஒரு குறை இனையத்தில் மட்டுமே பயன்படுத்தும் வசதி கொண்டது.

ஐரோப்பியன் டிக்ஸ்னரி பயன்படுத்தி பார்க்க நினைப்பவர்களுக்கும் மேலும் புக்மார்க் செய்து கொள்ள விரும்புவர்களுக்கும் ஐரோப்பியன் டிக்ஸ்னரி EUROPEAN DICTIONARY



இரண்டாவதாக தமிழை தேடுவதற்கு தமிங்கிலீஸ் அதாவது நான் மேலே சொன்ன மாதிரி puriYaatha kiRukkalkaL என்பதாக கொடுத்து தேடினால் புரியாத கிறுக்கல்கள் சம்பந்தபட்ட இனைய தகவல்களை காணலாம் தேவைப்படுபவர்கள் தங்கள் தளத்திலேயே இனைத்துக்கொள்ளலாம்.

உங்கள் வார்த்தையை 20 மொழிகளில் நொடியில் மொழிபெயர்க்கலாம் ...


சில நொடிகளில் நாம் கொடுக்கும் வார்த்த்தையை ஒரே நேரத்தில் 20 மொழிகளில் அழகாக மொழி பெயர்த்து கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
பிறந்த நாள் வாழ்த்து மற்றும் நம் அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளை உலகின் முன்னனி மொழிகளில் தெரிவித்தால் எப்படி இருக்கும் , ஒரு முறை நாம் தட்டச்சு செய்ய்த வார்த்தையை ஒரே நேரத்தில் எளிதாக 20 மொழிகளில் மொழிபெயர்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.translation-telephone.com
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் Translate ( மொழி  மாற்றம் ) செய்ய வேண்டிய வார்த்தையை  கொடுத்து Go என்ற பொத்தானை  சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தட்டச்சு செய்த வார்த்தைகள் 20 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நமக்கு காட்டப்படும். கூகிள் துணையுடன்  இது வார்த்தைகளை மொழி பெயர்த்து நமக்கு காட்டுகிறது. ஒவ்வொரு மொழியின்  பெயரும் அந்த மொழில் மொழி பெயர்க்கப்பட்ட வார்த்தைகளும் நமக்கு காட்டப்படும். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் URL இணையதள முகவரியை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் மாற்றிய வார்த்தையை அவர்களும் தெரிந்து கொள்ளலாம்.

ஆண் குரலை பெண் குரலாகவும் , பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்றும் இலவச மென்பொருள்.


ஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல் போல் மாற்ற உதவும் இலவச மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஆண்கள் பேசும் குரலும் பெண்கள் பேசும் குரலும் தனியாக தெரியும் ஆனால் மொபைல் போன்களில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே பெண்கள் பேசுவது போல் மாற்ற ஏற்கனவே பல மென்பொருட்கள் உள்ளன, ஆனால் கணினியில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே நேரடியாக பெண்கள் பேசுவது போல் மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது.
தறவிரக்க முகவரி :http://www.screamingbee.com/product/MorphVOXJunior.aspx
மேலே கொடுத்திருக்கும் முகவரியை சொடுக்கி இந்த மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவலாம். மென்பொருளை இயக்கி யாருடைய குரலில் கேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து நாம் பேசினால் போதும், உதாரணமாக ஒரு ஆண் பேசும் போது பெண் குரலை தேர்ந்தெடுத்துவிட்டு பேச ஆரம்பித்தால் அது பெண் பேசுவது போல் இருக்கும். Man , Tiny Folks , Woman என்ற மூன்று விதமான ஆப்சன் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் இதில் Tiny Folks என்பது கார்டூன் கேரக்டர் பேசுவது போல் இருக்கும். பல சமயங்களில் சாட்டிங்கில் பேசுவது பெண் தான் என்று நினைத்திருப்போம் உண்மையிலே அவர் இது  போன்று இருக்கும் மென்பொருளை பயன்படுத்தி தான் பேசிக்கொண்டிருப்பார். வேடிக்கைக்காக ஆண் குரலை பெண் குரலாகவும் பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.