Wednesday, June 29, 2011

உங்கள் வார்த்தையை 20 மொழிகளில் நொடியில் மொழிபெயர்க்கலாம் ...


சில நொடிகளில் நாம் கொடுக்கும் வார்த்த்தையை ஒரே நேரத்தில் 20 மொழிகளில் அழகாக மொழி பெயர்த்து கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
பிறந்த நாள் வாழ்த்து மற்றும் நம் அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளை உலகின் முன்னனி மொழிகளில் தெரிவித்தால் எப்படி இருக்கும் , ஒரு முறை நாம் தட்டச்சு செய்ய்த வார்த்தையை ஒரே நேரத்தில் எளிதாக 20 மொழிகளில் மொழிபெயர்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.translation-telephone.com
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் Translate ( மொழி  மாற்றம் ) செய்ய வேண்டிய வார்த்தையை  கொடுத்து Go என்ற பொத்தானை  சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தட்டச்சு செய்த வார்த்தைகள் 20 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நமக்கு காட்டப்படும். கூகிள் துணையுடன்  இது வார்த்தைகளை மொழி பெயர்த்து நமக்கு காட்டுகிறது. ஒவ்வொரு மொழியின்  பெயரும் அந்த மொழில் மொழி பெயர்க்கப்பட்ட வார்த்தைகளும் நமக்கு காட்டப்படும். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் URL இணையதள முகவரியை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் மாற்றிய வார்த்தையை அவர்களும் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment