நண்பர்களின் கணினியிலேயோ இல்லை ப்ரெளசிங் சென்டரிலேயோ இணைய அரட்டையில் ஈடுபட வேண்டுமெனில் அதற்கு நாம் தேடும் இணைய அரட்டை மென்பொருள் வேண்டும். ஒரு சில கணினியில் Limit பயனர் கணக்கில் பனியாற்றுவோம் அந்த சூழ்நிலையில் நம்மால் மென்பொருளை நிறுவிக்கொள்ள முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க ஒருதளம் உதவி செய்கிறது.
இணையத்தில் அடி எடுத்து வைத்தவுடனே முதலில் இணைய பயனாளர்கள் கற்றுக்கொள்வது என்னவெனில் சாட்டிங் செய்ய மட்டுமே ஆகும். பெரும்பாலான இணைய பயனாளர்கள் நண்பர்களிடம் அரட்டை அடிக்கவே இணையத்தை பெரிதும் நாடிச் செல்கிறனர். முக்கியமான தருணங்களில் அரட்டைகளில் ஈடுபடுவது சாதரண செயல் ஆகும். ஆனால் எந்த நேரமும் ஒரு சில இணைய பயனாளர்கள் அரட்டையில் ஈடுபடுவார்கள். அவர்கள் சாப்பிடாமல் வேண்டுமானாலும் இருப்பார்கள் ஆனால் அரட்டையில் ஈடுபடாமல் மட்டும் இருக்க மாட்டார்கள்.
அவர்கள் இணையத்திற்கு தினமும் செல்வார்கள் ஆனால் அவர்கள் செய்யக்கூடிய ஒரே செயல் அரட்டை அடிக்கும் செயல் மட்டுமே ஆகும். இதனால் பணம் மட்டுமே செலவாகும். இதுபோன்ற பயனாளர்கள் பல்வேறு இணைய அரட்டைகளில் ஈடுபடுவார்கள் உதாரணாமாக யாகூ, ஸ்கைப், எம்.எஸ்.என், ஜிடால்க் மற்றும் பல இணைய அரட்டைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவார்கள் இதுபோன்ற பயனார்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனி மென்பொருளை நாடிச்செல்ல வேண்டும்.
தளத்திற்கான சுட்டி
No comments:
Post a Comment