இணையத்தில் போட்டோக்களை சட்டப்படி இலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 5 தளங்கள்
அனைத்தும் கொட்டி கிடக்கும் இணையத்தில் நாம் பல வித்தியாசமான படங்களை பார்த்து மகிழ்கிறோம். என்ன தான் இணையத்தில் படங்கள் கொட்டி கிடந்தாலும் அனைத்து தளங்களில் இருந்தும் போட்டோக்களை டவுன்லோட் செய்வது சட்டப்படி குற்றமாகும். குறிப்பிட்ட சில தளங்களில் மட்டுமே இதற்கான உரிமையை நமக்கு வழங்கி இருப்பார்கள். அப்படி உள்ள சில தளங்களில் சிறந்த 5 தளங்களை பற்றி கீழே காண்போம்.Flickr
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது Flickr தளமாகும். இதில் இல்லாத போட்டோக்களே இல்லை எனலாம். இந்த தளத்தில் போட்டோக்கள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இதில் உங்களுக்கு தேவையான போட்டோக்களை நீங்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு மாதத்தில் சுமார் 3 மில்லியன் போட்டோக்கள் அப்லோட் செய்யப்படும் ஒரே தளம். நான் பதிவிற்கு தேவையான் போட்டோக்களை இதில் இருந்தே டவுன்லோட் செய்கிறேன். http://www.flickr.com/
Morgue file
இந்த தளமும் ஏகப்பட்ட போட்டோக்களை உள்ளடக்கி கொண்டுள்ளது. இதில் நமக்கு தேவையான போட்டோக்களை நாமே பிரிவு வாரியாக சுலபமாக தேடிக்கொள்ளலாம். இதில் உள்ள விசேஷம் என்னவென்றால் இந்த தளத்திலேயே நாம் படங்களை தேவையான அளவிற்கு வெட்டிக்கொள்ளும் வசதியும் உள்ளது. மிகவும் சிறந்த தளமாக விளங்குகிறது. http://www.morguefile.com
Dreamstime

Free Range Stock
மூன்றாவதாக நாம் பார்க்கும் தளத்திலும் நமக்கு தேவையான படங்களை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். நீங்கள் புகைப்பட நிபுணராக இருந்தால் உங்கள் படங்களை இதில் அப்லோட் செய்து அதன் மூலம் விளம்பரங்களில் கணிசமான தொகை பெறலாம். ஆனால் உங்கள் புகைப்படத்தை மற்றவர்கள் ரசித்து டவுன்லோட் செய்தால் மட்டுமே. http://freerangestock.com

குரோம் நீட்சி- Highlight to Search (by Google)

No comments:
Post a Comment