Tuesday, January 18, 2011

ஜோகோ கன்வெர்டர் மற்றும் ஜிமெயில் லேப் 


நிறுத்த மற்றும் நிறைய மென்பொருட்கள்

நண்பர்களே இணையம் இல்லாத வீடு கிடையாது என்று மாறி வருகிறது.  இது போல் இருக்கையில் இணைய மையம் ( Internet Browsing Centre) செல்வது குறைவே.   சில நேரங்களில் நம் இணைய மையம் செல்லும் பொழுது அங்கே இணையத்தில் உலாவும் பொழுது ஏற்கனவே முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். ஆனால் அது குறித்த பதிவு இல்லை.  இணைய மையங்களில் எப்பொழுது மைக்ரோசப்ட்  ஆபிஸ்  மட்டுமே நிறுவி இருப்பார்கள். 
உங்களுக்கு நண்பர் அல்லது அலுவலகத்தில் இருந்து ஒரு மின்னஞ்சல் வருகிறது.  அதை பார்க்கிறீர்கள்  அதில்  ஒபன் ஆபிஸில் உருவாக்கிய ஒரு வேர்ட் அல்லது பவர் பாயிண்ட் பிரசண்டேசன் அல்லது ஒரு எக்ஸல் கோப்பு வருகிறது.  odt, ods, odp என்ற எக்ஸ்டென்சனோடு தாங்கி வரும் அந்த கோப்பினை நநீங்கள் என்ன நினைப்பீர்கள். அது வைரஸாக இருக்குமோ என்று நினைப்பீர்கள்.  ஏன் என்றால் அனைவரும் மைக்ரோசாப்ட் வேர்ட் உபயோகப்படுத்துவதால் doc, xls, ppt  என்ற எக்ஸ்டென்சன்கள் மட்டுமே தெரியும்.  சரி இதை எவ்வாறு தெரிந்து கொள்வது.   ஒவ்வொரு பொதுவான எக்ஸ்டென்சன்கள் குறித்த தகவல்கள் அனைத்தையும் இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம். சுட்டி



சரி இந்த மாதிரி கோப்பும் வந்து விட்டது.  அங்கு இணைய மையத்தில் வேர்ட் மட்டுமே வந்துள்ளதோ ஒபன் ஆபிஸில் உருவாக்கிய கோப்பு எவ்வறு பார்ப்பது.  அந்த இணைய மையத்தில் மென்பொருட்கள் நிறுவ தடை செய்திருப்பார்கள் அப்படி செய்யாமல் இருந்தால் இந்த ஒபன் ஆபிஸ் பிளக் இன் நிறுவலாம்.  சுட்டி  சரி அப்படி அவர்கள் தடை செய்திருந்தால் என்ன செய்வது அதற்கு இணையத்தினையே நாட வேண்டும். 

Zoho என்ற நிறுவனம் குறித்து கேள்விபட்டிருப்பிர்கள்  இந்த நிறுவனத்தினர் ஆன்லைன் மூலம் அனைத்து விதமான மென்பொருள்களை நிறுவமால இணையம் மூலம் இயக்க இலவசமாக வழங்குகின்றனர்.  இதை இலவசமாகவும் பணம் செலுத்தியும் பெறலாம்.   மின்னஞ்சல், உடனடி உரையாடல் ( Instant Messenger),  விக்கிபீடியா போன்ற விக்கி இது போன்ற ஏராளமன வசதிகள் அளிக்கிறது.
 
இந்த நிறுவனம் நம்மிடம் உள்ள ஒபன் ஆபிஸ் கோப்பினை மைக்ரோசாப்ட் வேர்டு கோப்பாகவும்.  அல்லது நேரடியாக பார்க்கவும் அதன் வழியாக எடிட் செய்து தரவிறக்கவும் வழி வகை செய்துள்ளனர்.  Zoho நிறுவனத்தின் வலைத்தள சுட்டி  
கோப்புகளை பார்க்க மற்றும் வேறு வகை கோப்புகளாக மாற்ற கன்வெர்டர் வலைத்தள சுட்டி

No comments:

Post a Comment