Tuesday, January 18, 2011

கூகுள் குரோம் உலாவியை( Google Chrome Speed Increase ) வேகப்படுத்துவதற்கான வழிமுறை.


கூகுள் நிறுவனத்தின் உலாவியான கூகுள் குரோம் உலாவியின்
வேகத்தை அதிகரிப்பது எப்படி ( How to increase Google Chrome Speed )
என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

படம் 2
எளிமையான உலாவி , வேகமான உலாவி என்றெல்லாம் பெயர்
வாங்கிய கூகுள் குரோம் உலாவியில் வேகத்தை அதன் Settings -ல்
சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம். நாம் குரோம்
உலாவியில் இணையதள முகவரி கொடுத்து சில நொடிகள் ஆனபின்
தான் செயல்பட ஆரம்பிக்கும் அதே போல் பல இணையதளங்கள்
தெரிவதற்கு அதிகநேரம் எடுத்துக்கொள்ளும். இந்தப்பிரச்சினையை
எந்த மென்பொருள் மற்றும் Addons உதவியும் இல்லாம் எளிதாக
நாமே குரோம் உலாவியின் இணைய வேகத்தை அதிகப்படுத்தலாம்.


படம் 3
முதலில் குரோம் உலாவியை திறந்து கொண்டு படம் 1-ல் காட்டியபடி
அதன் வலது பக்கம் இருக்கும் Customize and Control  என்ற ஐகானை
சொடுக்கவும் வரும் திரையில் படம் 2-ல் உள்ளது போல் Options
என்பதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து வரும் திரை படம் 3-ல்
காட்டப்பட்டுள்ளது. இதில் Under the Hood என்ற Tab -ல் இருக்கும்
Use DNS pre-fetching to improve page load performance என்பது
டிக் செய்யப்படு இருக்கும். இதில் இருக்கும் டிக் மார்க்கை நீக்கிவிட்டு
Close என்ற பொத்தானை அழுத்தியபின் உலாவியை Close செய்துவிட்டு
மீண்டும் Open செய்யவும். இப்போது உங்கள் குரோம் உலாவியின்
வேகம் முன் இருந்ததை விட அதிகமாகி இருப்பதை நாம் கண்கூடாக
உணரலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு குரோம் உலாவி பயன்படுத்தும்
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment