Wednesday, September 28, 2011

உலகை திரும்பி பார்க்க வைக்கும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 (Windows 8 ) இலவசமாக தரவிரக்கலாம்.

கணினி உலகை பொருத்த வரை ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் என்றுமே சூப்பர்  ஸ்டார் மைக்ரோசாப்ட் தான், பயன்படுத்துவதில் எளிமை, புதுமை என அனைத்து சேவைகளையும் கொடுத்து உலக அளவில் பல வாசகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த மைக்ரோசாப்ட்-ன் அடுத்த வெளியீடான விண்டோஸ் 8 ( Windows 8 )இலவசமாக தறவிரக்கலாம்.
DOS வெர்சனில் தொடங்கி விண்டோஸ் 3.1 முதல் விண்டோஸ் 7 வரை தன் கால் தடங்களை அழுத்தமாக பதித்து வரும்  மைக்ரோசாப்ட் நிறுனத்தின் அடுத்த இமாலய படைப்பு தான் விண்டோஸ் 8. எத்தனை ஆப்ரேட்டிங் சிஸடம் வந்தாலும் விண்டோஸ்  ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு இருக்கும் மதிப்பு மரியாதை தனி தான், ஒவ்வொரு பதிப்பிலும் கூடுதல் சேவையை அளித்து வரும்  மைக்ரோசாப்ட்-ன் அடுத்த வெளியீடான விண்டோஸ் – 8 என்னவெல்லாம் சேவையை கொடுக்க இருக்கிறது என்று இனி பார்க்கலாம்.
விண்டோஸ் 7-ல் அளித்து வரும் சேவையுடன் ஒப்பிடுவதில் விண்டோஸ் 8 மின்சார சேமிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சுட்டிகளின் உள்ளீடு அதாவது (multi-touch and mouse/key board) செய்யலாம். Windows 8 works with both x86 and SoC architecture , மடிக்கணிகள் மட்டுமல்லாது Tablet pc களிலும் பயன்படுத்தலாம், அதிவேகமான Booting time , இன்னும் பல புதுமையான  சேவைகளை கொடுக்கிறது விண்டோஸ் எக்ஸ்பி மக்களிடத்தில் எப்படி இன்னும் பிரபலமாக  இருக்கிறதோ அதே போல் விண்டோஸ் 8 -ம் மக்கள் மனதில் இடம்  பிடிக்கும் என்பது  மைக்ரோசாப்ட்-ன் குரல். விண்டோஸ் -8 ன் Developer பதிப்பை இங்கு கொடுத்திருக்கும்  சுட்டியை சொடுக்கி இலவசமாக தறவிரக்கலாம்.
தறவிரக்க முகவரி : Download windows 8

திறமையான உலாவலை மேற்கொள்ளும் மோஸில்லா பயர் பாக்ஸ் புதிய பதிப்பு 7.0

மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் முன்பை விட திறமையான உலாவலை மேற்கொள்கிறது. இது விண்டோஸில் வேகமான உலாவியாக உள்ளது. ஃபயர்பாக்ஸ் பாப் அப் தடுப்பதை உள்ளடக்குகிறது. நீங்கள் ஒற்றை சாளர முறையில் பல பக்கங்கள் திறந்து வைக்கலாம்.

கூடுதல் அம்சங்களை உள்ளடக்குகின்றன:

• நேரடி புக் மார்க்குகள் - நீங்கள் சமீபத்திய செய்தி தலைப்பு படித்து உங்களுக்கு பிடித்த தளங்களின் புதுப்பிப்புகளை வாசிக்க முடியும்.
• நீட்டிப்புகள் - உங்கள் Mozilla திட்டம், புதிய செயல்பாடுகளை சேர்க்கலாம்
• தீம்கள் - உங்கள் Mozilla நிரல் புதிய கிராபிக்ஸ் மற்றும் வண்ணங்களை கொண்டு மாற்ற அனுமதிக்கிறது.
• தனியுரிமை மற்றும் பாதுகாப்பு - உங்கள் பாதுகாப்பு பில்ட், ஃபயர்பாக்ஸ் தீங்கு ActiveX கட்டுப்பாடுகள் ஏற்றப்படுவதின் மூலம் தீங்கிழைக்கும் ஸ்பைவேர்களிடம் இருந்து உங்கள் கணினியை பாதுகாப்பாக பராமரிக்கிறது.
• செருகுநிரல்கள் - வலைத்தளங்களில் உள்ளடக்கத்தை வழங்குவதற்கு உங்கள் உலாவி அனுமதிக்கும் நிரல்களை கொண்டுள்ளது.

ஃபயர்பாக்ஸ் ஒரு சக்திவாய்ந்த ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் CSS பிழை / எச்சரிக்கை பணியகம், மற்றும் உங்கள் பக்கங்கள் பற்றி விரிவான உட்பார்வையை கொடுக்கிறது.  ஒரு விருப்ப ஆவணம் கண்காணிப்பாளர் உட்பட டெவலப்பர் கருவிகள் ஒரு நிலையான தொகுப்புடன் வருகிறது.

இயங்குதளம்: விண்டோஸ் 2000 SP4 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7

Size:13.39MB

பலவிதமான நகரும் எழுத்துக்களை ப்ளாக்கில் அமைப்பது எப்படி?

marquee in tamil text animation
நகரும் எழுத்துக்களை பல வலைத்தளங்களிலும்,ப்ளாக்கிலும் பார்த்து இருப்பீர்கள்.பலருக்கும் இது தெரிந்திருக்கலாம்.
தெரியாதவர்களுக்காக இப்பதிவு.

சாதாரண நகரும் எழுத்துக்களுக்கான கோட்கள்:

<marquee>தங்கள் வருகைக்கு நன்றி.!!!</marquee>

மேலே சிகப்பு நிறத்தில் இருக்கும் தங்கள் வருகைக்கு நன்றி என்ற இடத்தில்
நீங்கள் எழுத விரும்புவதை எழுதிக்கொள்ளுங்கள்.
மேலே உள்ள கோட்கள் அப்படியே கீழ் உள்ளபடி பிரதிபலிக்கும்.

தங்கள் வருகைக்கு நன்றி.!!!நகரும் எழுத்துக்களின் திசைகளை மாற்ற:

<marquee direction="right">தங்கள் வருகைக்கு நன்றி</marquee>

மேலே சிகப்பு நிறத்தில் இருக்கும் Right என்பதற்கு பதிலாக நீங்கள் விரும்பும் திசையை போட்டுக்கொள்ளலாம்.அதாவது (UP,DOWN,LEFT,RIGHT)மேலும் தங்கள் வருகைக்கு நன்றி என்ற இடத்தில்
நீங்கள் எழுத விரும்புவதை எழுதிக்கொள்ளுங்கள்.
மேலே உள்ள கோட்கள் அப்படியே கீழ் உள்ளபடி பிரதிபலிக்கும்:
தங்கள் வருகைக்கு நன்றி

நகரும் எழுத்துக்களின் அகலம்,உயரம் ஆகியவற்றை விருப்பம்போல் அமைக்க:

<marquee direction="up" height="50px" width="250px">தங்கள் வருகைக்கு நன்றி மழையில் என்னுடன் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.</marquee>

மேல் உள்ள கோட்களில் சிகப்பு நிறத்தில் உள்ளவற்றை மாற்றிக்கொள்ளலாம். Direction=up க்கு பதிலாக down,left,right. Height="50px" க்கு பதிலாக நீங்கள் விரும்பும் உயரம் போட்டுக்கொள்ளலாம். தங்கள் வருகைக்கு நன்றி மழையில் என்னுடன் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்=க்கு பதிலாக நீங்கள் எழுத விரும்பும் வாக்கியம். மேலே உள்ள கோட்கள் அப்படியே கிழ் உள்ளவாறு பிரதிபலிக்கும்.

தங்கள் வருகைக்கு நன்றி மழையில் என்னுடன் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

நகரும் எழுத்துக்களின் நிறம் மற்றும் பேக்கிரவுண்ட் ஆகியவற்றை மாற்றியமைக்க:

<marquee bgcolor="blue">உங்கள் எழுத்துக்கள் இங்கே</marquee>

மேல் உள்ள கோட்களில் bgcolor என்பது பேக்கிரவுண்ட் கலர் ஆகும்.blue என்று இருக்கும் அந்த இடத்தில் உங்களுக்கு தேவையான கலர் அதாவ்து red,green,yellow etc.. மேலும் font color=red என்று இருக்கும் அந்த இடத்தில் red க்கு பதிலாக உங்களின் விருப்பமான ஃபாண்ட் கலர் போட்டுக்கொள்ளுங்கள். மேல் உள்ள கோட்கள் கீழ் உள்ளபடி பிரதிபலிக்கும்:
உங்கள் எழுத்துக்கள் இங்கே

நகரும் எழுத்துக்களை நிறுத்த:

இது மிக முக்கியமான ஒன்று. நகரும் எழுத்துக்களை நிறுத்தி படிக்க நினைக்கும்போது இது மிகவும் பயணளிக்கும்..உங்கள் மவுசை நகரும் எழுத்துக்களின் மேல் கொண்டு சென்றால் எழுத்துக்கள் நகராமல் நிற்கும்.மவுசை எடுத்தால் மீண்டும் நகரும்.

<marquee direction="right" height="50px" onmouseout="this.start()" onmouseover="this.stop()">தங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.</marquee>

மேல் உள்ள கோட்கள் கீழ் உள்ளவாறு பிரதிபலிக்கும்.தங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.நகரும் எழுத்துக்களின் வேகத்தை மாற்றியமைக்க:

<marquee direction="left" height="50px" onmouseout="this.start()" onmouseover="this.stop()" scrollamount="3">தங்கள் வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறேன்..பயணுள்ள பதிவுகளை ஊக்குவியுங்கள்.அப்போதுதான் தொடர்ந்து பயணுள்ள பதிவுகளை வழங்க ஆர்வம் ஏற்படும்.வருகைக்கு நன்றி.</marquee>

மேல் உள்ள கோட்களில் சிகப்பு நிறத்தில் உள்ள scrollamount="1" என்பதற்கு பதிலாக 2,3,4,5 என்று வேகத்தை கூட்டியோ,குறைத்தோ கொள்ளலாம். மேல் உள்ள கோட்கள் கீழ் உள்ளவாறு பிரதிபலிக்கும்.
தங்கள் வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறேன்..பயணுள்ள பதிவுகளை ஊக்குவியுங்கள்.அப்போதுதான் தொடர்ந்து பயணுள்ள பதிவுகளை வழங்க ஆர்வம் ஏற்படும்.வருகைக்கு நன்றி.

ப்ளாக்கரில் நகரும் படங்களை பதிவிடுவது எப்படி?-Marquee Scrolling Images

mazhai.net marquee scrolling images html codesஇது பதிவர்களுக்கு பயணுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.ஏனெனில் popular post  பலசமயங்களில் நாம் விரும்பும் பதிவுகளுக்கு கிடைப்பதில்லை.அந்த மாதிரியான சமயத்தில் நாம் விரும்பும் பதிவுகளை Thumbnail with text உடன் சேர்த்து நாமாகவே உருவாக்கி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கலாம்.

Scrolling Images Html Codes

1.சாதாரண நகரும் படங்கள்:
<marquee></marquee>
மேலே உள்ளகோட்கள் கீழுள்ளபடி பிரதிபலிக்கும்: 2. நகரும் படத்தின் திசையை மாற்ற
<marquee direction="right"></marquee>
மேலே உள்ளகோட்கள் கீழுள்ளபடி பிரதிபலிக்கும் :மேலே சிகப்பு நிறத்தில் உள்ள right என்பதற்கு பதிலாக up,down,left என போட்டுக்கொள்ளலாம்.மேலும் சிகப்பு நிறங்களில் உள்ள புகைப்படத்தின் முகவரியை நீங்கள் அப்லோட் செய்த முகவரியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

3. நகரும் புகைப்படத்தோடு எழுத்தை இணைத்து,மவுசை கொண்டு சென்றால் நிற்குமாறும்செய்து BLOGGER SIDEBAR ல் வைப்பது எப்படி?
<marquee direction="up" height="400px width="250px" onmouseout="this.start()" onmouseover="this.stop()" scrollamount="3">பதிவு 1:
நீங்கள் எழுத விரும்புவதை இங்கு எழுதிக்கொள்ளுங்கள்.
.பதிவு:2
நீங்கள் எழுத விரும்புவதை இங்கு எழுதிக்கொள்ளுங்கள்..
பதிவு:3
நீங்கள் எழுத விரும்புவதை இங்கு எழுதிக்கொள்ளுங்கள்..</marquee>

மேலே உள்ளகோட்கள் கீழுள்ளபடி பிரதிபலிக்கும்
பதிவு 1:
நீங்கள் எழுத விரும்புவதை இங்கு எழுதிக்கொள்ளுங்கள்.
.பதிவு:2
நீங்கள் எழுத விரும்புவதை இங்கு எழுதிக்கொள்ளுங்கள்..
பதிவு:3
நீங்கள் எழுத விரும்புவதை இங்கு எழுதிக்கொள்ளுங்கள்..
மேலும் சிகப்பு நிறத்தில் உள்ள பதிவு1,2,3 ஆகியவை நீங்கள் sidebar இல்வைக்க விரும்பும் பதிவுகளின் தலைப்பு,thumbnail படம் மற்றும் பதிவின் விளக்கம்..ஆகியவற்றை மாற்றிக்கொள்ளுங்கள். பதிவிற்கு இணைப்பு கொடுப்பது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன் தெரியாவிட்டால் தயங்காமல் கேளுங்கள்.

4.SIDEBAR ல் வைக்க:
SIGN IN TO BLOGGER ACCOUNT
LAYOUT
ADD GADGET
HTML/JAVASCRIPT
அதில் தலைப்பு கொடுக்க விரும்பினால் கொடுத்து மேலே உள்ள கோட்களை உங்கள் விருப்பம்போல் மாற்றியமைத்துக்கொள்ளுங்கள். நன்றி.

உலகம் முழுவதும் கடலுக்கு அடியில் செல்லும் Internet Cables வரைபடத்தை காண

இன்று ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை காண்போம்.இன்றைய உலகை ஆட்டி படைப்பது இணையம் என்ற ஒரு மந்திரச்சொல் தான். இந்த இணையத்தில் இல்லாத ஒன்று என எதுவுமே இல்லை. இந்த இணையம நாடு விட்டு நாட்டிற்கும், கண்டம் விட்டு கண்டத்திற்கும் கேபில்களாலும், செயற்கைக்கோள் உதவியுடனும் இணைக்கப்பட்டுள்ளது. உலகில் 75% நீரினால் சூழ்ந்துள்ளதால் இந்த கேபிள்களை கடலுக்கு அடியில் தான் பெரும்பாலும் கொண்டு செல்கிறார்கள். செயற்கைகோள்கள் 1 சதவீதம் தான் இணைய இணைப்பில் பங்கு பெற்றுள்ளது. மீதம் 99சதவீதம் இணையம் கேபிள்களை கொண்டே இணைக்கப்படுகிறது. இந்த இன்டர்நெட் கேபிள்கள் எப்படி கடலுக்கு அடியில் மற்ற நாடுகளுக்கு இணைக்க படுகிறது என்ற வரைப்படத்தை காணலாம்.

இந்த வரைப்படத்தை சுலபமாக காண நமக்கு ஒரு தளம் உதவி புரிகிறது. இந்த தளத்திற்கு சென்றால் உலகில் அனைத்து நாடுகளுக்கும் இணைய இணைப்பிற்கான வரைபடம் காணப்படுகிறது.

இதில் உங்களுக்கு தேவையான நாடுகளில் கிளிக் செய்தால் பெரியதாகி காட்டும். மற்றும் வலது பக்கத்தில் ஒவ்வொரு நாடுகள் வரிசையிலும், இணைய இணைப்பு நிறுவனங்களும் இருக்கும் அவைகளில் கிளிக் செய்து மேலும் சில தகவல்களை பெறலாம்.
இந்த தளத்திற்கு செல்ல- Under Sea Cable

கூகுளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்:
நேற்று வெற்றிகரமான தனது 13வது பிறந்த நாளை கொண்டாடிய கூகுள் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள். (நேற்று இணையம் பக்கம் வர முடியாததால் தாமதமான வாழ்த்துக்கள்.)

Tuesday, September 27, 2011

குறைந்த விலையில் விமான டிக்கெட்டுக்கள் பெற கூகுளின் புதிய வசதி -Google Flights

எப்படித்தான் யோசிக்கிராங்களோ இந்த கூகுள் காரங்க தினமும் ஏதாவது ஒரு புது புது வசதியை அறிமுக படுத்திகிட்டே இருக்காங்க. இவுங்க வெளியிட்டுள்ள வசதிகளை பட்டியல் போடணும்னா இந்த பதிவு பத்தாது. இதையெல்லாம் மீறி இப்பொழுது புதிய வசதியாக Google Flights என்ற புதிய சேவையை அறிமுக படுத்தி உள்ளனர். இந்த வசதியின் மூலம் விமான டிக்கெட்டுக்களின் விவரங்கள் விமானம் புறப்படும் நேரம், பயணிக்கும் கால அளவு நம் பட்ஜெட்டிற்கு ஏற்ற விலைப்பட்டியல் என அனைத்தையும் பார்த்து கொள்ளலாம்.

முதலில் இந்த தளம் Google Flights சென்று நீங்கள் கிளம்பும் இடத்தையும் சென்று சேரவேண்டிய இடத்தையும் தேர்வு செய்யுங்கள். இவைகளை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு அனைத்து விவரங்களும் காட்டும்.

இதில் உள்ள விவரங்கள் உங்களுக்கு தேவையான வகையில் மாற்றி கொடுத்து விமானங்களை தேர்வு செய்யலாம். நீங்கள் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகைக்கு ஏற்ப உள்ள விமானங்கள் உங்களுக்கு பட்டியலில் தெரியும்.

முக்கியமான விஷயம் இந்த சேவை தற்பொழுது அமெரிக்கா நகரங்களுக்கு மட்டும் தான் அளிக்கப்பட்டுள்ளது. இதன் வரவேற்ப்பை பொருத்து கூடிய விரைவில் அனைத்து நாடுகளுக்கும் இந்த சேவை வரலாம்.

இன்றைய நாளில் அன்று நடந்ததை சொல்லும் இணையம்

இன்றைய தினத்தில் கடந்த காலங்களில் உலகின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை ஆதரங்களுடன் பட்டியல் படுத்துகிறது NIKON நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் திஸ் டே எனப்படும் தளம்.

தளத்தினை சென்றதும் இன்றைய நாள் தொடங்கி ஒவ்வொரு வருடங்களாக பின்னோக்கி சென்று முக்கிய சம்பவம் இடம் பெற்ற காலத்தில் நிறுத்திகொள்ளும். இப்போது கீழே உள்ள GO என்பதை கிளிக் செய்தால் படங்களுடன் கடந்த காலங்களில் இடம் பெற்ற சம்பவங்களை தெளிவுபடுத்துகிறது இந்த தளம்.

இன்றைய நாளில் சம்பவங்களை படித்துக்கொண்டு இன்றைய நாளில் இருந்து பின்னோக்கி சென்று தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
இந்த தளம் நிகோன் நிறுவனத்தால் செயல்படுத்தபடுகிறது.

தளமுகவரி http://www.nikon.com/