ஒரு படம் பயங்கர ஹிட் ஆனா பார்ட் 2 எடுப்பது போல ஹிட் ஆன பதிவுக்கு இது பார்ட் 2 . youtube என்ற கடலில் சில முத்துக்களை மட்டுமே நான் உங்களுக்கு கொடுத்தேன். இதோ இன்னும் சில.
1. என் முந்தைய பதிவில் எப்படி முழு ஸ்க்ரீன் வீடியோ உருவாக்குவது என்று சொல்லி இருப்பேன், இவ்வாறு செய்யும் போது உங்கள் வீடியோ size எந்த மாதிரி உள்ளதோ அதற்க்கு ஏற்பதான் aspect ratio (4:3 or 16:9) செயல்படும். எனவே உங்கள் வீடியோ ஆனது 726x520(width:height) என்று இருந்தால் மிக அருமையான HD வீடியோ ஆக இருக்கும்.
ஒரு HD வீடியோ: http://www.youtube.com/watch?v=cRdxXPV9GNQ
2. வீடியோ ஆனது நிறைய format களில்உள்ளது. இப்போது youtube ஆனது தானாகவே சில வீடியோக்களை HD என்று எடுத்துக் கொள்கிறது. அவை 720x576 என்ற அளவில் இருக்கும். இன்னுமொரு முக்கியமான விஷயம் அவை பெரும்பாலும் .wmv format ஆக இருந்து upload செய்யப்பட்டு இருக்கும். எனவே நீங்களும் அப்படியே செய்யுங்கள்.
3. உங்கள் வீடியோக்களுக்கு tag கொடுப்பது பற்றி கூறி இருந்தேன் அல்லவா (சென்ற youtube பதிவில்). இவ்வாறு tags கொடுக்கும் போது அது உங்கள் வீடியோக்களை தேடும்போது எளிதாக முகப்பில் வரவைக்கும். சில வீடியோக்கள் ஆரம்பத்தில் தேடும் போது முகப்பில் வராது. அதற்கு ஒன்று செய்யுங்கள். உங்கள் tag பகுதியில் உங்கள் youtube user name கொடுக்கவும்.
நான் என்னுடைய வீடியோ அனைத்துக்கும் baleprabu என்ற ஒரு கூடுதல் tag சேர்த்து உள்ளேன். இதனால் baleprabu என்று youtube இல் கொடுத்தால் எனது வீடியோ அனைத்தும் வரும், இதில் உங்களுக்கு தேவையான வீடியோ உடனே கிடைக்கும், URL நினைவில் இருக்க வேண்டியது இல்லை, வீடியோ பெயர் கூட தேவை இல்லை.
இதற்கு user name தான் தரவேண்டும் என்ற அவசியம் இல்லை. எளிதில் முகப்புக்கு வரும் எதையும் கொடுக்கலாம்.
இதற்கு user name தான் தரவேண்டும் என்ற அவசியம் இல்லை. எளிதில் முகப்புக்கு வரும் எதையும் கொடுக்கலாம்.
4. உங்கள் youtube வீடியோ ஆயிரம் முறைக்கு மேல் பார்க்கப்பட்டு இருந்தால், மற்றும் இன்னும் சில விதிகளை நிவர்த்தி செய்தால் google ads ஐ உங்கள் youtube வீடியோக்களில் தோன்ற செய்யலாம். இதற்கு adsense account வேண்டும்.
Add Youtube Ads To Your Videos: http://www.youtube.com/ partners
5. உங்கள் வீடியோவை youtube இல் upload செய்த பின்னர் அதை எடிட் செய்ய விரும்பினாலும் முடியும். அதற்கு உங்கள் youtube account இல் "Video Editor" என்பதில் Audio edit, Transition, Video Trim, video Effect என பலவற்றை செய்யலாம்.
6. உங்கள் வீடியோவுக்கு வேறு ஆடியோ சேர்க்க விரும்பினால் அதற்கும் Youtube வழி செய்கிறது. உங்கள் வீடியோ பகுதியில் "audio swap " என்பதை தெரிவு செய்து உங்களுக்கு விருப்பமான ஒன்றை தெரிவு செய்து கொள்ளவும். இதை நீங்கள் "video editor" பகுதியிலும் செய்யலாம்.
என்ன நண்பர்களே இனி youtube இல் வீடியோ upload செய்து கலக்குங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள்.
No comments:
Post a Comment