நகரும் எழுத்துக்களை பல வலைத்தளங்களிலும்,ப்ளாக்கிலும் பார்த்து இருப்பீர்கள்.பலருக்கும் இது தெரிந்திருக்கலாம்.
தெரியாதவர்களுக்காக இப்பதிவு.
சாதாரண நகரும் எழுத்துக்களுக்கான கோட்கள்:
<marquee>தங்கள் வருகைக்கு நன்றி.!!!</marquee>
மேலே சிகப்பு நிறத்தில் இருக்கும் தங்கள் வருகைக்கு நன்றி என்ற இடத்தில்
நீங்கள் எழுத விரும்புவதை எழுதிக்கொள்ளுங்கள்.
மேலே உள்ள கோட்கள் அப்படியே கீழ் உள்ளபடி பிரதிபலிக்கும்.
நகரும் எழுத்துக்களின் திசைகளை மாற்ற:
<marquee direction="right">தங்கள் வருகைக்கு நன்றி</marquee>
மேலே சிகப்பு நிறத்தில் இருக்கும் Right என்பதற்கு பதிலாக நீங்கள் விரும்பும் திசையை போட்டுக்கொள்ளலாம்.அதாவது (UP,DOWN,LEFT,RIGHT)மேலும் தங்கள் வருகைக்கு நன்றி என்ற இடத்தில்
நீங்கள் எழுத விரும்புவதை எழுதிக்கொள்ளுங்கள்.
மேலே உள்ள கோட்கள் அப்படியே கீழ் உள்ளபடி பிரதிபலிக்கும்:
நகரும் எழுத்துக்களின் அகலம்,உயரம் ஆகியவற்றை விருப்பம்போல் அமைக்க:
<marquee direction="up" height="50px" width="250px">தங்கள் வருகைக்கு நன்றி மழையில் என்னுடன் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.</marquee>
மேல் உள்ள கோட்களில் சிகப்பு நிறத்தில் உள்ளவற்றை மாற்றிக்கொள்ளலாம். Direction=up க்கு பதிலாக down,left,right. Height="50px" க்கு பதிலாக நீங்கள் விரும்பும் உயரம் போட்டுக்கொள்ளலாம். தங்கள் வருகைக்கு நன்றி மழையில் என்னுடன் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்=க்கு பதிலாக நீங்கள் எழுத விரும்பும் வாக்கியம். மேலே உள்ள கோட்கள் அப்படியே கிழ் உள்ளவாறு பிரதிபலிக்கும்.
நகரும் எழுத்துக்களின் நிறம் மற்றும் பேக்கிரவுண்ட் ஆகியவற்றை மாற்றியமைக்க:
<marquee bgcolor="blue"><font color="red">உங்கள் எழுத்துக்கள் இங்கே</font></marquee>
மேல் உள்ள கோட்களில் bgcolor என்பது பேக்கிரவுண்ட் கலர் ஆகும்.blue என்று இருக்கும் அந்த இடத்தில் உங்களுக்கு தேவையான கலர் அதாவ்து red,green,yellow etc.. மேலும் font color=red என்று இருக்கும் அந்த இடத்தில் red க்கு பதிலாக உங்களின் விருப்பமான ஃபாண்ட் கலர் போட்டுக்கொள்ளுங்கள். மேல் உள்ள கோட்கள் கீழ் உள்ளபடி பிரதிபலிக்கும்:
நகரும் எழுத்துக்களை நிறுத்த:
இது மிக முக்கியமான ஒன்று. நகரும் எழுத்துக்களை நிறுத்தி படிக்க நினைக்கும்போது இது மிகவும் பயணளிக்கும்..உங்கள் மவுசை நகரும் எழுத்துக்களின் மேல் கொண்டு சென்றால் எழுத்துக்கள் நகராமல் நிற்கும்.மவுசை எடுத்தால் மீண்டும் நகரும்.
<marquee direction="right" height="50px" onmouseout="this.start()" onmouseover="this.stop()">தங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.</marquee>
மேல் உள்ள கோட்கள் கீழ் உள்ளவாறு பிரதிபலிக்கும்.நகரும் எழுத்துக்களின் வேகத்தை மாற்றியமைக்க:
<marquee direction="left" height="50px" onmouseout="this.start()" onmouseover="this.stop()" scrollamount="3">தங்கள் வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறேன்..பயணுள்ள பதிவுகளை ஊக்குவியுங்கள்.அப்போதுதான் தொடர்ந்து பயணுள்ள பதிவுகளை வழங்க ஆர்வம் ஏற்படும்.வருகைக்கு நன்றி.</marquee>
மேல் உள்ள கோட்களில் சிகப்பு நிறத்தில் உள்ள scrollamount="1" என்பதற்கு பதிலாக 2,3,4,5 என்று வேகத்தை கூட்டியோ,குறைத்தோ கொள்ளலாம். மேல் உள்ள கோட்கள் கீழ் உள்ளவாறு பிரதிபலிக்கும்.
No comments:
Post a Comment