Wednesday, September 28, 2011

உலகை திரும்பி பார்க்க வைக்கும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 (Windows 8 ) இலவசமாக தரவிரக்கலாம்.


கணினி உலகை பொருத்த வரை ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் என்றுமே சூப்பர்  ஸ்டார் மைக்ரோசாப்ட் தான், பயன்படுத்துவதில் எளிமை, புதுமை என அனைத்து சேவைகளையும் கொடுத்து உலக அளவில் பல வாசகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த மைக்ரோசாப்ட்-ன் அடுத்த வெளியீடான விண்டோஸ் 8 ( Windows 8 )இலவசமாக தறவிரக்கலாம்.
DOS வெர்சனில் தொடங்கி விண்டோஸ் 3.1 முதல் விண்டோஸ் 7 வரை தன் கால் தடங்களை அழுத்தமாக பதித்து வரும்  மைக்ரோசாப்ட் நிறுனத்தின் அடுத்த இமாலய படைப்பு தான் விண்டோஸ் 8. எத்தனை ஆப்ரேட்டிங் சிஸடம் வந்தாலும் விண்டோஸ்  ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு இருக்கும் மதிப்பு மரியாதை தனி தான், ஒவ்வொரு பதிப்பிலும் கூடுதல் சேவையை அளித்து வரும்  மைக்ரோசாப்ட்-ன் அடுத்த வெளியீடான விண்டோஸ் – 8 என்னவெல்லாம் சேவையை கொடுக்க இருக்கிறது என்று இனி பார்க்கலாம்.
விண்டோஸ் 7-ல் அளித்து வரும் சேவையுடன் ஒப்பிடுவதில் விண்டோஸ் 8 மின்சார சேமிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சுட்டிகளின் உள்ளீடு அதாவது (multi-touch and mouse/key board) செய்யலாம். Windows 8 works with both x86 and SoC architecture , மடிக்கணிகள் மட்டுமல்லாது Tablet pc களிலும் பயன்படுத்தலாம், அதிவேகமான Booting time , இன்னும் பல புதுமையான  சேவைகளை கொடுக்கிறது விண்டோஸ் எக்ஸ்பி மக்களிடத்தில் எப்படி இன்னும் பிரபலமாக  இருக்கிறதோ அதே போல் விண்டோஸ் 8 -ம் மக்கள் மனதில் இடம்  பிடிக்கும் என்பது  மைக்ரோசாப்ட்-ன் குரல். விண்டோஸ் -8 ன் Developer பதிப்பை இங்கு கொடுத்திருக்கும்  சுட்டியை சொடுக்கி இலவசமாக தறவிரக்கலாம்.
தறவிரக்க முகவரி : Download windows 8

No comments:

Post a Comment