இன்றைய கால கட்டத்தில் இணையம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இணையம் இருப்பதால் எந்த ஒரு வேலையையும் எளிதாக செய்ய முடிகிறது. கணிப்பொறி துறையில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் Programmers. இவர்கள் தான் மென்பொருட்கள், இணையதள வடிவமைப்பு இப்படி பல செயல்களுக்கு கோடிங் எழுதி உருவாக்குபவர்கள். ஆனால் இந்த கால கட்டத்தில் யாரும் முழு கோடிங்கையும் சொந்தமாக எழுதுவது இல்லை அப்படி எழுதினாலும் வெகு நேரம் எடுக்கும் போன்ற சில காரணங்களால் இணையத்தில் இருந்து தான் கோடிங்கை எடுக்கின்றனர். அதில் அவர்களுக்கு தேவையான சில மாற்றங்கள் செய்து கோடிங்கை வடிவமைத்து கொள்கின்றனர்.
இது போன்ற Programmers மற்றும் மென்பொருள் துறை மாணவர்களுக்கு என்று கூகுள் வழங்கும் வசதி தான் இந்த Google Code Search. இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான கோடிங்கை தேடி கொள்ளலாம்.
இந்த தளத்திற்கு சென்று தேவையான விவரங்களை கொடுத்து சரியான கோடிங்கை சுலபமாக தேடி பயன்படுத்தி கொள்ளுங்கள். மற்றும் உங்களுக்கு சிறிய வகை கோடிங் தேவைப்பட்டால்searchco இந்த தளத்தில் சென்று தேவையான குறிச்சொல்லை கொடுத்தால் அடுத்த வினாடி அதற்க்கான கோடிங் உங்களுக்கு வந்து விடும். உதாரணமாக javaScript Key code என கொடுத்தால் அடுத்த நொடி அதற்க்கான பட்டியல் உங்கள் கண்முன்னே இருக்கும்.
இந்த இரண்டு தளங்களின் உதவியுடன் நீங்கள் உங்களுக்கு தேவையான கோடிங்கை சுலபமாக கண்டறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment