Friday, October 14, 2011

அறிமுகமானது ஐபோன் 4S , iOS 5 மற்றும் iCloud.


மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டிருந்த ஆப்பிள் நிறுவனத்தின்
அடுத்த ஐபோன் பதிப்பான ஐபோன் 4S  ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம். இதுவரை வெளிவந்த ஐபோன் பதிப்புக்களில் மிகச்சிறந்த பதிப்பாக விளங்குகிறது ஐபோன் 4S.

காரணம் Apple's dual-core A5 chip பொருத்தப்பட்டுள்ளது. திறன்கொண்ட கிராபிக்ஸ், முழு 1080 ஹெச் டி Resolution இல் வீடியோ ரெக்காடிங் வசதி ஆகியவையாகும். ஐபோனின் 5 வது பதிப்பே வெளிவரும் என அனைவரும் எதிர்ப்பார்த்த போதும் அவ்வாறில்லாமல் ஐபோன் 4S ஐ வெளியிட்டுள்ளது ஆப்பிள்.
ஐபோன் 4S ஐ அறிமுகப்படுத்திய சற்று நேரத்திலேயே ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான இணையத்தளம் www.apple.com பல மணி நேரமாக முடங்கியிருந்தது.

No comments:

Post a Comment