இணையத்தை பயன் படுத்துபவர்களில் அனைவருக்கும் தெரிந்திருக்கும் கூகுள் வழங்கும் இலவச மெயில் சேவையான ஜிமெயில் பற்றி. இந்த ஜிமெயிலில் பிரபலமான வசதி நண்பர்களுடன் பேசி மகிழ ஜிமெயில் சாட்டிங் வசதி இந்த வசதி மூலம் நம் நண்பர்களுடன் எவ்வளவு நேரம் என்றாலும் இலவசமாக அரட்டை அடிக்கிறோம். ஜிமெயில் வழங்கும் இலவச சாட்டிங் வசதியின் மூலமாக நண்பர்களுடன் போட்டோக்களை பகிரும் வசதி இதுவரை இல்லை. ஆனால் இந்த குறையை போக்க ஒரு சூப்பர் வசதி வந்துள்ளது. நம் கணினியில் உள்ள போட்டோவையோ அல்லது இணையத்தில் உள்ள போட்டோவையோ எப்படி சுலபமாக ஜிமெயில் சாட்டிங்கில் எப்படி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது என பார்ப்போம்.
- இந்த வசதியை பெற நீங்கள் குரோம் உலவி உபயோகிப்பது அவசியமாகிறது. இந்த லிங்கில் கிளிக் செய்து GChat Pix என்ற நீட்சியை உங்கள் கணினியில் இணைத்து கொள்ளுங்கள்.
- மேலே படத்தில் காட்டியுள்ள வழிமுறையில் நீட்சியை இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
- நீட்சி உங்கள் உலவியில் இணைந்த உடன் அறிவிப்பு செய்தி வரும் அடுத்து ஜிமெயிலை ஓபன் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே திறந்து வைத்து இருந்தால் Reload செய்யுங்கள். அவ்வளவு தான் நீட்சி வெற்றிகரமாக இணைக்கப்பட்டு விட்டது.
உபயோகிக்கும் முறை:
- ஜிமெயிலை ஓபன் செய்து யாரோ ஒரு நண்பருடன் சாட்டிங் செய்யும் பொழுது ஏதேனும் ஒரு போட்டோவை பகிர வேண்டுமென்றால் உங்கள் கணினியிலோ அல்லது இணையத்திலோ உள்ள புகைப்படத்தை இழுத்து(Drag) கொண்டு வந்து chat விண்டோவில் விடவும்
- இப்பொழுது உங்களுடைய போட்டோ அப்லோட் ஆகி ஒரு URL வந்திருக்கும் அதை எண்டர் கொடுத்தால் போட்டோ பகிரப்படும்.
- இதில் நேரடியாக போட்டோ URL கொடுத்ததும் போட்டோவை பகிரலாம்.
- இனி நண்பர்களுக்கு வாழ்த்துக்களும் இது போல போட்டோவை அனுப்பி சொல்லலாம்.
No comments:
Post a Comment