நம் இணையதளத்திற்கு என்று பிரத்யேகமாக கவிதை உருவாக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு தளமாக தேடிச்சென்று நாம் கவிதை எழுத வேண்டாம் நம் தளத்திற்கு கவிதை எழுதிக்கொடுக்கவும் அதை ஆடியோ கோப்புடன் கொடுக்கவும் ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கவிதை எழுதுவது ஒரு தனி கலை தான் என்றாலும் இதற்காக சில மணி நேரங்களாவது செலவு செய்ய வேண்டும், தனிமையில் அமர வேண்டும் காதலித்திருக்க வேண்டும் அப்படி இப்படி என்ற எந்த நிபந்தனையும் இல்லாமல் நம் தளத்திற்கு நொடியில் கவிதை எழுதி கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://webermartin.net/poem.php
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டிபடி இருக்கும் கட்டத்திற்குள் நம் தளத்தின் முகவரியை கொடுத்து செய்யுள் வடிவில் எப்படி கவிதை வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்து Poemize this webpage என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நம் தளத்திற்கு என்று பிரத்யேகமாக ஒரு கவிதை உருவாக்கப்பட்டிருக்கும்.இத்துடன் ஒரு ஆடியோ கோப்பும் சேமிக்க கேட்கும் அதையும் சேமித்து நம் தளத்திற்காக உருவாக்கப்பட்ட கவிதையை ஆடியோ கோப்புடனும் கேட்டு ரசிக்கலாம். புதுமை விரும்பிகளுக்கும் கவிதை பிரியர்களுக்கும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment