Thursday, October 6, 2011

பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?




நாம் பதிவு எழுதி அதை PUBLISH செய்து திரட்டிகளில் இனைப்பதற்கு முன் நாம் எழுதிய பதிவை சில திருட்டுபயலுவகளவாடிடுட்டு போயிரானுவ.களவாண்டதோட மட்டுமல்லாம தான் தான் எழுதின மாதிரியே ஒரு பந்தா வேற. இனி அந்த கவலை வேண்டாம்.ஓர் இலவச கண்காணிப்பு சேவை வந்துவிட்டது.

                             இந்த நல்ல சேவையை வழங்கும் தளம்             

                                                         http://id.tynt.com


கீழே உள்ள DEMO தளத்திற்க்கு சென்று நீங்கள் ஏதாவது 2 வரிகளை Copy செய்து விட்டு எங்கு வேண்டுமானாலும் Paste செய்து பாருங்கள்.உங்களுக்கே புரியும்.

ஆனால் இப்படி செய்வதனால் வரும் Back Link-ஐ சில திருடர்கள் அழிக்கவும் கூடும்.சிலர் கவனக்குறைவால் இதை விட்டுவிடவும் வாய்ப்புள்ளது.

தளத்தை உபயோகிக்கும் முறை:
  • இந்த தளத்தில் ஒரு கணக்கு தொடங்கி கொள்ளுங்கள்.
  • தொடங்கிய உடன் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அவர்கள் ஒரு Mail அனுப்புவார்கள்.
  • அடுத்து வரும் பக்கத்தில் உங்களுக்கான Javascript நிரல் இருக்கும்
அதை Copy செய்து வைத்து கொள்ளுங்கள்.

Javascript நிரலை உங்கள் தளத்தில் நிறுவும் முறை:
  • Blogger Dashboard => design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.
  • பிறகு பின்வரும் Code-ஐ தேடவும்.

                                                                              </body>

  • தேடிய Code-க்கு முன்னால் நீங்கள் Copy செய்து வைத்திருக்கும்HTML-நிரலை PASTE செய்யவும்.
  • SAVE TEMPLATE கொடுக்கவும் அவ்வளவு தான்
இவ்வாறு செயவதனால் ஏற்படும் நண்மைகள்:


1. உங்கள் பிளாகின் எந்த இடுகைகள் அதிகம் காபி செய்யபடுகின்றன என்பதை              கண்டறியலாம்
2. காப்பி செய்தவர் எந்த தளத்தில் உங்கள் படைப்புகளை உபயோகித்து வருகிறார்    என்பதை கண்டறியலாம்
3. காப்பி செய்த தளத்தில் / மெயிலில் / சாட்டில் இருந்து Backlink மூலம் உங்கள்       தளத்துக்கு டிராபிக் பெற வாய்ப்புள்ளது
4. அதிகம் காப்பி செய்யப்படும் பதிவுகளை அறிவதன் மூலம், பார்வையாளர்கள்      அதிகம் விரும்புவதை நம்மால் கணிக்க முடியும். இது அது போன்ற இடுகைகளை     மேலும் இட்டு தளத்தை முன்னேற்ற பாதையில் மேம்படுத்த முடியும்.
5. இப்படி கிடைக்கும் Backlink மூலம் தேடுபொறிகளில் (Search Engine) உங்கள் தளம் நல்ல ரேங்க் பெற்று தேடல்களில் முன்னணியில் , முகப்பு பக்கத்தில் வர முடியும்.

No comments:

Post a Comment