மிக எளிமையான முறையில் கூகிள் Translate கருவியை கொண்டு தேவையான மொழியில் மொழிபெயர்க்க முடியும்.இதை உபயோகப்படுத்தி வார்த்தைகள் மற்றும் இணைய பக்கங்களை மொழிபெயர்க்கலாம்.இந்த சேவை தமிழில் மட்டும் இல்லாமல் மேலும் 57 மொழிகளில் கூகிள் வழங்குகிறது.
மேலே படத்தில் உள்ளது போல் website என்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் வலைத்தளம் என்று மறுபக்கம் காண்பிக்கும்.நீங்கள் ஆவணத்தை மொழிபெயர்க்க விரும்பினால் ஆவணத்தில் என்ன உள்ளதோ அதை அப்படியே மொழிபெயர்க்க செய்யும். உதாரணத்திற்கு word,sentence என்று ஆங்கிலத்தில் டைப் செய்தால் வார்த்தைகள்,தண்டனை என்று வரும். அப்பொழுது எந்த சொல்லின் அர்த்தம் உங்களுக்கு மற்றப்பட வேண்டுமோ (sentence) அந்த சொல் மேல் cursor ஐ வைத்து கிளிக் செய்தால் அதனுடன் தொடர்புடைய வேறு அர்த்தங்களை காண்பிக்கும். அதிலிருந்து எடுத்து நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த சேவையை பயன்படுத்த இங்கே செல்லவும்
No comments:
Post a Comment