Thursday, October 20, 2011

ஆன்லைனில் மூக்கு கண்ணாடி வாங்கலாம்!


மூக்கு கண்ணாடி வாங்க வேண்டும் என்றால் ஆப்டிகல்சை தேடி தான் போக வேண்டுமா என்ன? இப்போது வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் பொருத்தமாக கண்ணாடியை தேர்வு செய்து வாங்கி கொள்ளலாம் தெரியுமா?
குளோபல் ஐ கிளாசஸ் இணையதளம் தான் இப்படி ஆன்லைனிலேயே மூக்கு கண்ணாடிகளை வாங்கி கொள்ள வழி செய்கிறது.
இது இணைய ஷாப்பிங்கின் காலம் என்றாலும் மூக்கு கண்ணாடியை இணையம் வழியே வாங்குவது என்பது கொஞ்சம் ஆச்சர்யமான விஷயம் தான்.அதோடு உள்ளூர் எல்லையை தாண்டி உலகலாவிய அளவில் மூக்கு கண்ணாடியை தருவிக்க முடியும் என்பது வியப்பானது தான்.
புத்தகத்தையோ சிடியையோ ஆர்டர் செய்வது போலவா,மூக்கு கண்ணாடியை வாங்குவது?அழகுக்காக இல்லாமல் பார்வை தேவைக்காக மூக்கு கண்ணாடி அணிய வேண்டும் என்றால் டாக்டர் சீட்டின் அடிப்படையில் லென்சின் திறனை தேர்வு செய்ய வேண்டும்.மூக்கு கண்ணாடியின் அளவு கச்சிதமாக பொர்ருந்த வேண்டும்.அதன் வடிவமைப்பு பிடித்திருக்க வேண்டும்.விலையும் ஏற்றதாக இருக்க வேண்டும்.
இந்த சந்தேகத்தை எல்லாம் மீறி இணையம் மூலம் மூக்கு கண்ணாடி வாங்குவதை சுலபமாக்கி இருப்பதோடு ஆன்லைன் ஷாப்பிங் அனுபவம் எத்தனை செழுமையானதாக இருக்ககூடும் என்பதையும் உணர்த்துகிற‌து.
ஆன்லைன் ஷாப்பிங் தளம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாக கூட இந்த தளத்தை சொல்லலாம்.
முதல் விஷயம் ஆப்டிக்ல்சில் கூட இத்தனை கண்ணாடி ரகங்களை பார்க்க முடியாது.ஆனால் இந்த தளத்தில் வரிசையாக மூக்கு கண்ணாடி மாதிரிகளை பார்த்து கொண்டே இருக்கலாம்.முகப்பு பக்கத்திலேயே மூக்கு கண்ணாடிகளின் மாதிரிகள் வரிசையாக பட்டியலிட்டப்பட்டுள்ளன.ஒவ்வொன்றாக கிளிக் செய்து விலை உள்ளிட்ட விவரங்களை பார்த்து கொள்ளலாம்.மனதுக்கேற்ற கண்ணாடியை காணும் வரை வரிசையாக எத்தனை கண்ணாடிகளை வேண்டுமானாலும் பார்த்து கொண்டே இருக்கலாம்.
முதலில் பார்த்ததையே வாங்கினாலும் கூட எல்லா மாதிரிகளையும் பார்த்து விடும் பழக்கம் கொண்டவர்களுக்கு இப்படி பார்த்து கொண்டே இருக்கலாம்.மாறாக பொருத்தமான கண்ணாடி வேண்டும் என்று மட்டும் நினைப்பவர்கள் தாங்கள் எதிர்பார்க்கும் அம்சங்களை குறிப்பிட்டு தேடிக்கொள்ளும் வசதியும் இடது பக்கத்திலேயே இருக்கிறது.
விலை ,கண்ணாடியின் வடிவமைப்பு உள்ளிட்ட அம்சங்களை குறிப்பிட்டு அழகாக தேடலாம்.பெண்களுக்கானது,ஆண்களுக்கானது,வடிவமைப்பு,வண்ணம்,பிரேம் அளவு என வித‌விதமான அம்சங்களை குறிப்பிட்டு விரிவாக தேடலாம்.
எல்லாம் சரி,அழகுக்கு கண்ணாடி வாங்குவதானால் பிரச்ச‌னை இல்லை.டாக்டர் சீட்டு அடிப்படையில் வாங்கும் போது இது சரியாக வருமா என்று கேட்கலாம்.அந்த சந்தேகமே வேண்டாம்.காரணம் டாக்டர் சீட்டையே அன்லைனில் சமர்பித்து அதில் குறுப்பிட்டுள்ள படி மூக்கு கண்ணாடியை ஆர்டர் செய்து கொள்ளலாம்.
டாக்டர் சீட்டு படி வாங்குவது சரி,ஆனால் கண்ணாடி முகத்திற்கு பொருத்தமாக இருக்கிறதா என்று அணிந்து பார்த்தால் தானே தெரியும்,அதெப்படி ஆன்லைனில் சாத்தியம் என்று அடுத்ததாக கேட்கலாம்?
இப்போது உடைகளையே அன்லைனில் அணிந்து அழகு பார்க்கும் வசதி வந்து விட்டது,கண்ணாடிக்கு அந்த வசதி இல்லாமலா போகும்?இந்த தளத்திலேயே கண்ணாடியை அணிந்து பார்க்கலாம்.
இரண்டு விதமாக இந்த வசதியை பயன்படுத்தி கொளளலாம். ஒன்று கண்ணாடியை கிளிக் செய்து விட்டு நம்முடைய புகைப்படத்தை சமர்பித்து நமது முகத்தில் கண்ணாடியின் தோற்றம் எப்படி இருக்கிறது என்று பார்த்து கொள்ளல்லாம்.
இல்லை என்றால் வர்ச்சுவல் மிரர் என்னும் இணைய கண்ணாடி முன் நின்று கண்ணாடியை அணிந்து பார்க்கலாம்.இதற்கு வெப்கேமை பயன்படுத்த வேண்டும்.வெப்கேமை ஆன் செய்துவிட்டு காத்திருந்தால் கண்ணாடி முன் நிற்பது போலவே மூக்கு கண்ணாடியை அணிந்து பார்க்கலாம்.
இதை தவிர மூக்கு கண்ணாடி வாங்குவது தொடர்பான ஆலோசனை சொல்லும் குறிப்புகளும் கட்டுரைகளாக கொடுக்கப்பட்டுள்ளன.ஏசி வசதியை உணர முடியாதே தவிர ஒரு பெரிய கண்ணாடிய வளாகத்தில் சுற்றிப்பார்த்த பிரம்மிப்பை இந்த தளம் தருகிற‌து.
உலகம் முழுவதிலும் இருந்து ஆர்டர் செய்து கொள்ளலாம்.ஒரே ஷிப்பிங் கட்டணம் தான் என்கிறது தளம்.
ஒரு முறை தாராளமாக விஜயம் செய்து பார்க்கலாம்.மூக்கு கண்ணாடிகள் பற்றி பல விஷய‌ங்களை தெரிந்து கொள்ளலாம்.
இணையதள முக‌வரி;http://www.globaleyeglasses.com/
(இந்த தளத்தின் தோற்றம் மர்றும் உள்ளடக்கம் பற்றி மட்டுமே இந்த பதிவு.மற்றப‌டி இதில் ஆர்டர் செயது வாங்குவது அவரவர் விருப்பம் .அவரவர் பொறுப்பு)

No comments:

Post a Comment