Monday, October 3, 2011

கணக்குத் திருடும் Hackers இடம் இருந்து தப்புவதற்கு எனக்குத் தெரிந்த இலகு வழி

 
        அண்மைய நாட்களில் பதிவுலகக் கணக்குத் திருட்டு என்பது சாதாரணமாகி விட்டது.
       பலர் பாதிக்கப்பட்டு வரிசையில் நிற்கிறோம் அதிஸ்டம் உள்ளவருக்குக் கிடைக்கிறது அதிஸ்டம் இல்லாதவருக்கு காற்றோடு போய்விடுகிறது.
முன்னரும் ஒரு பதிவில் இதைப்பற்றி இட்டிருந்தேன். அவர்களுக்கு சாதகமாக அமைவது எமது மின்னஞ்சல் கணக்காகும். அதை மறைப்பதற்காக பலர் கருத்திடுவதற்காக புதிய மெயில் ஐடி திறந்து வைத்திருப்போம். அதன் பின் பதிவிடுவதானால் புளக்கர் மெயிலுக்குள் ஓடுவோம்.


       சில வேளைகளில் சிலரது கருத்திடும் புறோபைலுக்குள்ளால் வந்து பார்த்தால் அவர்கள் புளொக் இருக்காது. அதனால் கருத்திடுபவரது வலைத்தள முகவரி தெரியாமல் போய்விடும்.
அது மட்டுமல்ல எமது புறொபைலுக்கென்று குறிப்பிட்ட பார்வையாளர் இருக்கும். நாம் புதிதாய் தொடங்கினால் பூஜ்ஜியத்தில் இருந்து தான் ஆரம்பிக்கும்.
      இதை விட பலருக்கிருக்கும் பிரச்சனை தமது கணக்கை இன்னொரு மெயில் ஐடிக்கு மாற்றத் தெரியாது.
தீர்வு
    என்னைப் பொறுத்தவரை தப்பிப்பதற்காக எனக்குத் தெரிந்த தற்காலிகத் தீர்வு இது தான். இன்னுமொரு மெயில் திறந்த எமது புளொக்கிற்கு அக்கணக்கை admin ஆக்குங்கள். அதன் பின் எமது வழமையான கணக்கை admin பொறுப்பிலிருந்து விலக்கிக் கொள்ளுங்கள். அதன் பின் நீங்கள் உங்கள் புளொக்கில் ஒரு அழைக்கப்பட்ட விருந்தாளியாக இருந்து எழுதலாம்.
    இதனால் எமது கணக்குத் திருடப்பட்டாலும் அவர் சுதாகரிப்பதற்குள்ளாக நாம் முந்திக் கொள்ளலாம். அதை விட முக்கியம் இப்போது பதிவுலகத்தில் நடைபெறும் கணக்கை முடக்கல் எந்த விதத்திலும் பாதிக்காது.
அத்துடன் எமது புளொக்கிற்கான admin கணக்கை எந்த ஒரு தேவைக்கும் பாவிக்காமல் விட்டால் சரி.
இனி மாற்றுவது எப்படி என பார்ப்போம்
முதலில் உங்கள் blogger ன் dashboard >>> setting >>> permission என்ற ஒழுங்கில் போங்கள்.
அங்கே add authors என்பதை சொடுக்கவும்
invite என்று இருக்கும் பெட்டியினுள் மெயில் ஐடியை இட்டு invite என்பதை சொடுக்கவும். அதன் பின் அழைக்கப்பட்டவரது மெயிலுக்கு அழைப்புச் சென்றிருக்கும். அந்த மெயிலை திறந்து. அழைப்பை ஏற்றுக் கொள்ளவும்.

அதன் பின் படத்தில் உள்ளது போல grant admin privileges என்பதை சொடுக்கி மற்றைய கணக்கை அட்மின் ஆக்கவும்.
அதன் பின் உங்களது வழமையான கணக்கில் உள்ள revoke admin privileges என்பதை சொடுக்கி அட்மின் பதவியை ராஜினாமப செய்யுங்கள்


அதன் பின் உங்களால் அட்மின் ஆக்கப்பட்ட கணக்கினுள் நுழைந்து Share my profile   
என்று இருக்குமிடத்தில் உள்ள சுட்டியை எடுத்து விட்டு சேமியுங்கள். காரியம் கச்சிதமாய் முடிந்திருக்கும்.

முக்கிய குறிப்பு - உங்கள் ரெம்ளெட் மாற்றத்தை வேறு எவரிடமாவது கொடுத்து செய்ய வேண்டியிருந்தால் கடவுச் சொல்லைக் கொடுக்காமல் இப்படியே செய்யலாம். கவனமான விடயம் அறிமுகமில்லாதவரிடம் கொடுக்க வேண்டாம்.

No comments:

Post a Comment