கணினி உலகில் மிகப்பெரிய இரு ஜாம்பவான்கள் பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ். உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் இயங்கு தளமான விண்டோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ். ஒரு கணினியின் செயல் பாட்டினை முழுவதும் ஒரு கையடக்க மொபைல் போனில் புகுத்தி கணினி துறையில் மிகப்பெரிய புரட்சிகளை ஏற்ப்படுத்திய ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் CEO ஸ்டீவ் ஜாப்ஸ் (இவர் சமீபத்தில் புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார்). இவர்கள் இருவருமே கணினி துறை இவ்வவளவு வேகமாக வளர்ச்சி அடைய முக்கிய காரணமானவர்கள்.
பிரபல சோனி நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க போகிறதாம். இவர்கள் இருவருக்கும் கணினி உலகம் கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆகவேண்டும்.
No comments:
Post a Comment