Wednesday, November 23, 2011

யூடியுபின் புதிய அழகான தோற்றத்தை ஆக்டிவேட் செய்ய - Youtube New Look


எப்பொழுதும் கூகுள் நிறுவனம் அதனுடைய இணைய தளங்களின் தோற்றத்தை அடிக்கடி மாற்றி கொண்டே இருக்கும். Blogger, Search, Gmail, Adsense இப்படி சொல்லி கொண்டே போகலாம் அந்த வரிசையில் தற்பொழுது யூடியுப்  இணையத்தில் வீடியோ பகிரும் தளமான யூடியுப் தளத்தையும் இப்பொழுது மாற்றி அமைத்துள்ளது. வழக்கம் போல் இந்த புதிய மாற்றத்தை தற்பொழுது Developer பயனர்களுக்கு மட்டும் அளித்துள்ளது. அந்த வசதியை எப்படி அனைவரும் ஆக்டிவேட் செய்வது என இங்கு பார்ப்போம்.

Step:1
முதலில் Youtube தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது கீழே உள்ள Shortcut Keys கொடுத்து Developer Tools பகுதியை ஓபன் செய்து கொள்ளுங்கள். 

குரோமில் Ctrl + Shift + J என்பதை அழுத்தவும். 
பயர்பாக்சில் Ctrl + Shift + K என்பதை அழுத்தவும். 

(நீங்கள் இந்த shortcut key அழுதும் பொழுது நீங்கள் youtube விண்டோவில் இருக்க வேண்டும்)

Step:2
பிறகு கீகளை அழுத்தியவுடன் உங்களுக்கு ஒரு popup விண்டோ ஓபன் ஆகும் அதில் Console என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு ஒரு காலி விண்டோ ஓபன் ஆகும் அதில் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
document.cookie="VISITOR_INFO1_LIVE=ST1Ti53r4fU";
  • கோடிங்கை பேஸ்ட் செய்தவுடன் கீபோர்டில் ENTER கீயை அழுத்தவும். உங்களுக்கு விண்டோ கீழே இருப்பதை போல இருக்க வேண்டும். 

  • மேலே இருப்பதை போல உங்களின் விண்டோ இருந்தால் நீங்கள் புதிய தோற்றத்திற்கு மாறிவிட்டீர்கள். 
  • அந்த Developer Tools விண்டோவை மூடிவிட்டு Youtube தளத்தை Reload செய்து பாருங்கள் உங்களுக்கு யூடியுப் தளத்தின் புதிய தோற்றம் வந்திருக்கும். 


புதிய தோற்றம் வந்தவுடன் அதற்க்கான அறிவிப்பும் காட்டும் அதில் Next கிளிக் செய்தே சென்றால் என்னென புதிய வசதிகள் வந்துள்ளன என்று காட்டும். 

டிஸ்கி: இந்த புதிய தோற்றம் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் பொது சேவைக்கு வர இருக்கிறது.

உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க


சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.

  • இதற்க்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட அக்கௌன்ட்டை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். 
  • பிறகு இந்த லிங்கில் கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • வரும் விண்டோவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். 
  • அந்த விண்டோவில் உங்கள் அக்கௌன்ட்டை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).
  • ஈமெயில் ஐடியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள். 
  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நீங்கள் கொடுத்த ஈமெயில் ஐடியில் உள்ள பேஸ்புக் கணக்கை காட்டும். 
  • உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த பாஸ்வேர்டை அந்த இடத்தில் கொடுக்கவும். 
  • பாஸ்வேர்டை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும்.
  • அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.
  • உங்களுக்கு இன்னொரு Pop-up விண்டோ ஓபன் ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இப்பொழுது புதிய பாஸ்வேர்டை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் அக்கௌன்ட் திரும்ப பெறப்படும். 
இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட்டை எப்பொழுது போல உபயோகிக்கலாம்.

இந்த தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அனைவரையும் சென்றடைய உதவுங்கள். 

கூகிள் பிளஸில் Chatting வசதி அறிமுகம்

கூகிளின் சமூக வலைத்தளமான கூகிள் பிளஸ் புதிய வசதிகளை அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. கூகிள் பிளஸ் பட்டன், பக்கங்கள் உருவாக்குதல், பக்கங்களுக்கான பேட்ஜ் போன்றவைகள் உருவாக்கப்பட்டு மற்றொரு தளமான பேஸ்புக்கிற்கு நிகராக போட்டிகளைக் கொடுத்து வருகிறது. தற்போது வரை நமது கூகிள் மின்னஞ்சல் முகவரி தெரிந்திருந்தால் மட்டுமே கூகிள் பிளசிலும் பேசிக் கொள்ள முடியும். இப்போது நமது வட்டத்திற்குள் இருக்கும் நண்பர்களுக்குள் பேசிக் கொள்ளும் வசதியினை (Chatting) கொண்டு வந்திருக்கிறது. 

இதைப்பற்றி இரண்டு நாள்களுக்கு முன் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். இந்தியாவில் கூகிளின் ஆர்குட் (Orkut) சமூக வலைத்தளத்திற்கு இருந்த வரவேற்பையும் அதில் நண்பர்களானால் பேசிக் கொள்ளும் வசதியும் இருந்ததையும் கூகிள் பிளஸில் இது வரவில்லையே என்று நினைத்திருந்தேன். Chatting வசதியின்றி சமூக வலைத்தளங்கள் பிரபலமாவதில்லை தானே. இப்போது இதனையும் கூகிள் பிளஸ் எற்படுத்தியிருக்கிறது.


கூகிள் பிளஸில் நமது வட்டத்திற்குள் இருப்பவர்கள், அவர்களின் வட்டத்திற்குள்ளும் நம்மைச் சேர்த்திருப்பார்கள் என்றால் அவர்களிடம் நாம் எளிதாக சாட்டிங் செய்யலாம். கூகிள் பிளஸ் மூலம் சேர்ந்து நண்பர்களானவர்களிடம் நாம் வேறு இடைமுகங்களான GMail, iGoogle, Google Talk போன்ற இடங்களிலும் சாட்டிங் செய்து கொள்ள முடியும்.

கூகிள் பிளசில் யாரென்று தெரியாத பல நண்பர்கள் நம் வட்டத்திற்குள் இருக்கலாம். அதனால் பல குழப்பங்கள் ஏற்படாதபடி கூகிள் பிளஸ் அடிக்கடி பேசுபவர்களின் பெயரை மட்டும் சாட்டிங் வரிசையில் தற்போது காண்பிக்கும். இருப்பினும் அவர்களது பெயரை Chat Box இல் தட்டச்சிட்டுத் தேடி சாட்டிங் செய்து கொள்ள முடியும்.

மேலும் நமது வட்டத்திற்குள்ளேயே Family, Friends, Relatives என்று பல வட்டங்கள் பிரித்திருப்போம். குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே பேசிக் கொள்ள நினைத்தால் Chatஎன்பதற்கு நேராக உள்ள சின்ன வட்டத்தைக் கிளிக் செய்து Privacy Settings என்பதில் செல்லவும். அதில் Your Circles மற்றும் Custom என்று இருக்கும்.

Your Circles – இதில் உங்கள் வட்டத்திலிருக்கும் எல்லோரிடமும் பேச அப்படியே விட்டு விடுங்கள்
Custom – இந்த வசதியினைத் தேர்வு செய்தால் குறிப்பிட்ட வட்டத்தில் அடங்கியிருக்கும் நண்பர்களிடம் மட்டுமே பேசிக் கொள்ள முடியும்.
(எ.கா) Friends, Relatives, Office, School,College.

முக்கிய வசதி: கூகிள் பிளசில் சாட்டிங் வசதி தொந்தரவாக இருப்பின் அதை மட்டும் Sign Out செய்து கொண்டு தளத்தில் தொடரலாம். வேண்டுமெனில் Sign In செய்து சாட்டிங் வசதியில் இருக்கலாம்.

இனி கூகிள் பிளஸ் நண்பர்களிடமும் தடையின்றி பேசுங்கள்.

Tuesday, November 22, 2011

YOUTUBE தளத்தில் அதிக தடவை பார்க்கப்பட்ட வீடியோகளை பார்க்கும் வசதி




 




   மிக பிரபலமான வீடியோ தளமான  YOUTUBE  தளத்தில் பார்வையாளர்களால் அதிக தடவை பார்க்கப்பட்டு மிக பிரபலமான வீடியோ காட்சிகளை நீங்களும் கண்டு மகிழ YOUTUBE .COM /CHARTS  என்ற பக்கம் உதவுகிறது.


 

   இதன் மூலம் YOUTUBE தளத்தில் பகிரப்பட்ட வீடியோ காட்ச்சிகளில் இந்த நாள் ,இந்த வாரம், இந்த மாதம் , எல்லா நேரமும் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட வீடியோ காட்ச்சிகளை தேடி பார்க்க முடியும்.


அத்துடன் YOUTUBE தளத்தில் உள்ள வீடியோகளில் ஒவ்வொரு தனித்தனி பிரிவுகளிலும் பிரபலமான வீடியோ காட்சிகளை பார்க்க முடியும். இதற்கு முதலில் வீடியோவின் பிரிவினை தெரிவு செய்து பின்னர் எந்த காலப்பகுதியில் பிரபலமான வீடியோ தேவையோ அதனை தெரிவு செய்து பார்வையிட முடியும்.




YOUTUBE .COM /CHARTS எனும் பக்கம் மிக சுவாரசியமாக அமைகிறது . 

புகைப்படங்களை எளிதாக வீடியோவாக மாற்ற PhotoFilmStrip

நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்களை சிடி/டிவிடியில் அப்படியே புகைப்படமாக ஏற்றினால் டிவிடி பிளேயரில் தெரியும் வசதியிருக்கிறது. ஆனால் அவைகளை ஒவ்வொன்றாக கிளிக் செய்து பார்க்க வேண்டியிருக்கும். எல்லா ஒளிப்படங்களும் சீரான இடைவெளியில் பிண்ணணி ஒலியுடன் ஒவ்வொன்றாக காட்டப்பட்டால் நன்றாக இருக்கும். இதனை SlideShow என்பார்கள். அதே நேரத்தில் ஒளிப்படங்கள் வரிசையாகவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எபெக்ட்டுடன் வந்தால் சிறப்பாக இருக்கும். மேலிருந்து படம் வருவது, கட்டம் கட்டமாய் வருவது போன்ற மாதிரி வருவதை Transition Effect என்று சொல்வார்கள். 

பல்வேறு புகைப்படங்களை வைத்து அவற்றை வீடியோவாக மாற்ற உதவும் இலவச மென்பொருள் ஒன்று தான் PhotoFilmStrip. எளிமையாகவும் பல்வேறு வடிவங்களில் வீடியோவினை இதில் உருவாக்க முடியும். முதலில் இதனைத் தரவிறக்கி நிறுவிக் கொள்ளவும். New Project மெனுவில் சென்று உங்களுக்குத் தேவையான புகைப்படங்களைச் சேர்க்கவும். இதில் ஒளிப்படங்களை அது இருக்கும் இடத்திலிருந்தே இழுத்து விட்டால் கூட போதுமானது. (Drag and Drop)

சேர்க்கப்பட்ட ஒவ்வொரு ஒளிப்படங்களும் வரிசையாக கீழ்புறத்தில் தோன்றும். அதைக் கிளிக்கினால் பெரிதாக மேலே தோன்றும். படத்தில் தேவையில்லாத பகுதிகளை வெட்டிக் கொள்ள முடியும். (Crop Pictures) . ஒவ்வொரு ஒளிப்படமும் எந்த எபெக்டில் தோன்ற வேண்டும் என்று அமைத்துக் கொள்ளலாம். பிண்ணணியில் எதாவது பாடல் ஓட வேண்டுமெனில் சேர்க்கலாம். Subtitle என்பதில் அந்த ஒளிப்படத்தைப் பற்றிய குறிப்பைக் கொடுத்தால் வீடியோவின் அடியில் தோன்றும். உருவாக்கப்படும் வீடியோ எவ்வளவு நேரம் ஒடும் என்பதை மென்பொருளின் Status Bar இல் தெரியும்.

இறுதியில் வீடியோ வகைகளான FLV, Mp4, Avi போன்றவற்றில் தேர்வு செய்யலாம். மேலும் Full HD , VCD, Pal, NTSC போன்ற டிவிடி கோடக் (Codecs) வசதியின் மூலம் வீடியோ தரத்தை அமைக்கலாம். உங்கள் புகைப்படங்களின் அளவு, கணிணியின் வேகம் போன்றவற்றைப் பொறுத்து சில நிமிடங்களில் வீடியோ உருவாக்கப்படும்.

தரவிறக்கச்சுட்டி : Download PhotoFimStrip

Wednesday, November 16, 2011

20GB அளவுள்ள பெரிய வீடியோ பைல்களை Youtube ல் நேரடியாக அப்லோட் செய்ய


கூகுள் வழங்கு சிறந்த சேவைகளில் ஒன்று யூடியுப் தளம். இணையத்தில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்களை அனைவரும் பார்த்து ரசிக்க கூடிய தளமாகும். இந்த தளத்தில் நம்முடைய வீடியோக்களையும் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. சாதாரணமாக யூடியுப் தளத்தில் சுமார் 15 நிமிட வீடியோவை தான் அப்லோட் செய்யும் வசதி உள்ளது. இதனால் பெரிய வீடியோ பைல்களை அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. ஆனால் யூடியுப் தளத்தில் 20GB அளவுள்ள 12 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ பைல்களையும் அப்லோட் செய்யும் வசதி மறைந்து உள்ளது. அதனை எப்படி ஆக்டிவேட் செய்வது என கீழே பார்ப்போம்.

இந்த முறையை ஆக்டிவேட் செய்ய நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை  யூடியுப் கணக்கில் கொடுத்து இந்த வசதியை ஆக்டிவேட் செய்ய வேண்டும். 
  • முதலில் யூடியுப் தளத்திற்கு செல்லுங்கள். 
  • யூடியுப் தளத்தில் மேல் பகுதியில் Browse, Movies, Upload என்ற மூன்று லிங்க் இருக்கும். அதில்Upload என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • இதில் கீழ் பகுதியில் Upload HD videos in various formats in 15 minutes என்ற செய்தி இருக்கும். அதற்க்கு அருகில் Increase your limit என்ற ஒரு லிங்க் இருக்கும். அதில் கிளிக் செய்யவும்.
length video files upload on youtube
  • உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் நாட்டினை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள கட்டத்தில் உங்கள் மொபைல் எண்ணை கொடுக்கவும். 
  • மொபைல் நம்பரை கொடுத்தவுடன் கீழே உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும் நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணுக்கு ஒரு SMS வந்திருக்கும். அதில் Verification Code அனுப்பி இருப்பார்கள். 
  • Verify பட்டனை அழுத்தியவுடன் உங்களின் யூடியுப் கணக்கில் உங்களின் மொபைல் எண் சேர்க்கப்பட்டு விடும்.

இனி யூடியுபில் அப்லோட் பகுதிக்கு சென்றால் 15 நிமிட லிமிட் என்ற செய்தி மறைந்து இருப்பதை காணலாம். இனி நீங்கள் 20GB அளவுள்ள 12 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ பைல்களை நேரடியாக யூடியுபில் அப்லோட் செய்து கொண்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

கீழே உள்ள சமூக தளங்களில் (பேஸ்புக், ட்விட்டர், பிளஸ்) பகிர்ந்து மற்றவர்களுக்கும் இந்த தகவலை பகிரவும்.