உங்களுக்கு விதவிதமாக சமைப்பதற்கு விருப்பமா? எப்படி சமைப்பது என்று தெரியவில்லையா? கவலையை விடுங்கள். உங்களுக்காக கூகிள் தேடுபொறி உதவுகிறது, Get Recipes என்னும் வசதி.
இவ்வசதி மூலம், கூகிளில் சமையல் பற்றி ஏதாவது தேடினால் சமையல் குறிப்புகளை காட்டும். மேலும் பக்கப்பட்டியில் (Sidebar) மூன்று தேர்வுகளை காட்டும்.
Ingredients - நாம் தேடும் சமையல் குறிப்பில் ஏதாவது சில பொருட்கள் வேண்டாம் என நினைத்தாலோ, அல்லது வேண்டும் என நினைத்தாலோ, அதனை இங்கு தேர்வு செய்யலாம்.
Cook Time - நாம் தேடும் சமையல் குறிப்பு எத்தனை மணி நேரத்தில் செய்யக் கூடியவையாக இருக்க வேண்டும்? என்று இங்கு தேர்வு செய்யலாம்.
Calories - நாம் தேடும் சமையல் குறிப்பில் கலோரியின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்? என்பதை இங்கு தேர்வு செய்யலாம்.
சாக்லேட்டுடன் கூடிய, நூறு கலோரிகளுக்குள்ளான, வெண்ணெய் குக்கிகளை (Butter Cookies) ஒரு மணிநேரத்தில் சமைப்பது எப்படி? என்று தேடினால் பின்வருமாறு காட்டும்.
இதில் வருத்தமான செய்தி என்னவென்றால், ஆங்கிலத்தில் மட்டும் தான் இதனை தேட முடியும்.
No comments:
Post a Comment