Monday, November 14, 2011

நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள தளம்.


கடலில் இருந்து கிடைக்கும் பல வகையான மீன்களை மனிதன் உணவாக உட்கொள்கிறான் இதில் சில வகை மீன்களால் நமக்கு  பாதிப்பு ஏற்படுகிறது இதனால் கடலில் இருந்து கிடைக்கும் மீன்களில் நல்லவை எவை,  கெட்டவை எவை என்று விரிவாக சொல்ல ஒரு தளம் உள்ளது  இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
மீன்களின் பலவகை கிடைத்தாலும் நிலையான தரமான மீன்கள் எவை  என்பதையும் அதனால் நமக்கு ஏற்படும் பயன்கள் என்னென்ன  என்பதையும்  அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் விரிவாக சொல்ல ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி :  http://goodfishbadfish.com.au
இத்தளத்திற்கு சென்று பல வகையான மீன்களைப் பற்றி தெரிந்து  கொள்ளலாம், Select a fish என்பதில் எந்த வகையான மீனைப் பற்றி
தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது Search என்ற கட்டத்திற்குள் மீனின் பெயரை தட்டச்சு செய்து  Search  என்ற பொத்தானை சொடுக்க வேண்டும், வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த மீன் பற்றிய முழுவிபரங்களும் நமக்கு  காட்டப்படும் இதில் அந்த மீனை எப்படி சமைக்க வேண்டும் என்பதில் தொடங்கி மற்றும் அந்த மீன் உலகின் எந்த பகுதியில் அதிகமாக கிடைக்கிறது. யார் எல்லாம் இந்த மீனை சாப்பிடலாம் என்பது பற்றிய முழு விபரங்களையும் படத்துடன் நமக்கு  காட்டுகிறது.இத்தளத்தின் மூலம் நல்ல மீன்கள் மற்றும் கெட்ட மீன்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம் 

No comments:

Post a Comment