கணினி உபயோகிப்பவர்களில் பலருக்கும் இந்த அனுபவம் நிச்சியம் ஏற்ப்பட்டிருக்கும் அதாவது நாம் கணினி வேகம் குறைந்ததாக இருந்து நாம் கணினியில் தொடர்ச்சியாக கட்டளைகள் கொடுப்போமேயானால் நிச்சியம் கணினி ஸ்தம்பித்துவிடும் அந்த நேரத்தில் அதை சரி செய்வதற்காக நாம் திறக்க நினைக்கும் பைல்கலை மீண்டும் மூட நினைத்தாலும் முடிவதில்லை சில நேரங்களில் எல்லா பைல்களும் காணமல் போய் வெறும் டெஸ்க்டாப் மட்டுமே தெரியும் அந்த மாதிரியான நேரத்தில் உங்களால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்வதை தவிர வேறு வழியிருக்காது. ஒரு வேளை உங்கள் கணினியில் ரீ ஸ்டார்ட் பட்டன் இல்லை அதாவது கணினியில் அந்த பட்டன் இயங்காத நிலை என்று நினைத்துக்கொள்ளுங்களேன் இந்த நேரத்தில் நீங்கள் பவர் பட்டனை அழுத்தி பிடித்தாலும் சில நேரஙகளில் கணினியை அணைக்க முடிவதில்லை அதற்கு ஓரே வழி மொத்தமாக பவரை அனைப்பது தான். நாம் பதிவில் பார்க்க போவது இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் எப்படி நாம் திறந்திருக்கும் பைல்களை சேமிப்பது அல்லது மூடுவது என்பதை பற்றித்தான்.
கீழிருக்கும் படத்தை பாருங்கள் இப்படியாகத்தான் இருக்கும் அதில் கவணித்தீர்களா டாஸ்க் பார் காணாமல் போயிருக்கும்.
இனி இதற்கான தீர்வை பார்க்கலாம் உங்கள் கீபோர்டில் Ctrl+Alt+Del அல்லது Crtl+Shift+Esc அழுத்தினால் இப்போது டாஸ்க் மேனேஜர் திறந்திருக்கும் அதில் Applications டேப் திறந்து பாருங்கள் தற்போது உங்கள் கணினியில் இயக்கி கொண்டிருக்கும் பைல்களை காணலாம் அதில் நீங்க்ள் எலியல் வலது கிளிக்கினால் வரும் மெனுவில் Bring to front என்பதை தெரிவு செய்தால் அந்த பைலை கணினியின் முகப்புக்கு கொண்டு வந்துவிடலாம் இல்லை நீங்கள் திறந்திருக்கும் அந்த பைலை மூடி விட நினைத்தால் End Task என்பதை கிளிக்குவதன் மூலம் இயங்கிகொண்டிருக்கும் பைல்களின் இயக்கத்தை நிறுத்திவிட முடியும். அல்லது கணினியை நீங்கள் ரீ ஸ்டார்ட் செய்ய விரும்பினால் மேலிருக்கும் Shut Down என்பதை திறப்பதன் மூலம் Restart செய்துவிட முடியும்.
கணினியில் டாஸ்க் மேனேஜர் என்பது நமக்கு ஒரு வரப்பிரசாதம் இதன் வழியாகவே ஓரளவிற்கு கணினியில் உள்ள பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடியும் நம் கணினியில் ஏதாவது பிழைச்செய்திகள் அல்லது வைரஸ் இருப்பது போல உணர்ந்தாலும் இந்த டாஸ்க் மேனேஜர் வழியாக கண்டுபிடிக்க முடியும் . நம் கணினியில் இயக்கி கொண்டிருக்கும் நேரம் ஏதாவது ஹைடன் இயங்கினால் அதையும் காணமுடியும் இதன் வழியாகவே பைல்களை திறக்க முடியும் இப்படி இன்னும் நிறைய வசதிகள் இருக்கிறது எல்லாமே உங்கள் கணினியில் உள்ள விஷயம் தான் மெதுவாக பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment