இவ்வாறு அன்றி, நமது நெருப்புநரி (Firefox) உலாவியில், சைடு பாரில் Facebook ஐ லோடு செய்து, இணைய பக்கங்களிலும், Facebook இலும் ஒரே சமயத்தில் பணி புரிய என்ன செய்யலாம்? என்பதை பார்க்கலாம்.
நெருப்புநரி உலாவியை திறந்து கொள்ளுங்கள். மேலே உள்ள மெனுவில் Bookmarks menu ஐ க்ளிக் செய்து, Organize Bookmarks ஐ க்ளிக் செய்யுங்கள்.
இப்பொழுது திறக்கும் Library விண்டோவில், Organize menu ஐ க்ளிக் செய்து New Bookmark க்ளிக் செய்யுங்கள்.
இப்பொழுது திறக்கும் New Bookmark வசனப்பெட்டியில், Name க்கு நேராக Facebook Chat (அல்லது ஏதோ ஒன்று) கொடுக்கவும். Location க்கு நேராக உள்ள பெட்டியில் http://www.facebook.com/presence/popout.php என்ற URL ஐ கொடுத்து கீழே உள்ள Load this bookmark in the sidebar ஐ தேர்வு செய்து, ADD பொத்தானை அழுத்தவும்.
இனி நெருப்புநரி உலாவியில் View menu ஐ திறந்து, Sidebar மற்றும் Bookmarks ஐ க்ளிக் செய்யவும்.
இப்பொழுது இடது புற சைடுபாரில் Facebook chat எங்குள்ளது என கண்டு, அதனை க்ளிக் செய்யவும்.
அவ்வளவுதான். இனி இணையத்தில் பிற வலைப்பக்கங்களில் உலாவியபடியே, Facebook chat செய்து கொள்ளலாம்.
.
No comments:
Post a Comment