ஆன்லைன் -ல் நமக்கு உதவ வித்தியாசமான கால்குலேட்டர் உள்ளது.
இதன் துணையுடன் நாம் கணக்கு மட்டுமல்ல கிராப் (Maths graph)-ம்
எளிதாக பார்க்கலாம் இதைத்தவிர கடினமான கணக்கிற்கும் எளிய
முறையில் தீர்வு அளிக்கும் சேவையையும் வழங்குகிறது ஒரு
இணையதளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
மொபைல் போனிலே கால்குலேட்டர் வந்துவிட்டது. கால்குலேட்டர்
இல்லாத கணினி கிடையாது இருந்தும் நாம் ஏன் ஆன்லைன் சென்று
இந்த கால்குலேட்டரை பயன்படுத்த வேண்டும் என்ற கேள்விக்கு
ஒரு முறை நாம் இந்ததளத்திற்கு சென்று ஒரு கணக்கு சமன்பாட்டை
கொடுத்து பார்த்தால் தெரிந்துவிடும். பயன்படுத்துவதிலும்
தோற்றத்திலும் எளிமை ஆனால் செய்யும் வேலை பலே என்று
சொல்லும் அளவுக்கு இந்ததளம் உள்ளது.
இணையதள முகவரி : http://web2.0calc.com
படம் 2
இந்ததளத்திற்கு சென்று நாம் கடினமான கணக்கு என்று சொல்லும்
அத்தனை கணக்கிற்கும் விடை எளிதாக கண்டுபிடிக்கலாம். Matrix
மேட்ரிக்ஸ் -ல் இருந்து log வரை நாம் அத்தனை வகையான
கணக்கிற்கும் எளிதாக விடை காணலாம். graph கூட எளிதாக
இந்ததளம் மூலம் போட்டு பார்த்துக்கொள்ளலாம். கணிதத்தில்
இருக்கும் அனைத்து சமன்பாடுகளையும் பயன்படுத்தும் வண்ணம்
வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் கணித ஆசிரியர்கள்
வரை அனைவருக்கும் பயன்தரும் தளமாக இது இருக்கும்.

No comments:
Post a Comment