இந்த பதிவு நம்மில் நிறைய நண்பர்களுக்கு உதவக்கூடும். இப்பொழுதுதான் எல்லா அலுவலகங்களிலும், மற்றும் பள்ளியிலும் எல்லோருக்கும் அடையாள அட்டையை கழுத்தில் கட்டி விடுகிறார்களே அதிலும் அதை கழட்டி வைப்பதில்லை என்கிற முடிவோடு இருப்பார்கள் போலத்தெரிகிறது. சரி நாம் பதிவிற்கு வருவோம் இந்த அடையாள அட்டை உருவாக்குவது சம்பந்தமாக ஐந்துவிதமான மென்பொருள் சேகரிப்பு இருக்கிறது அதில் இரண்டை மட்டும் இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலாவதாக நாம் பார்க்க போவது Easy card Creator. இந்த Easy Card Creator மென்பொருளை தரவிறக்கி கண்னியில் நிறுவி விடவும். இனி திறக்கும் போது கீழிருக்கும் விண்டோவில் உள்ளது போல வரும் அதில் நீங்கள் விரும்பும் ID Card, Business Card, Badges, Post Cards, Labels இதில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து படத்தில் வரிசைப்படுத்தி காண்பித்துள்ளபடி செய்து விடுங்கள்.
இப்போது உங்களுக்கு ஒரு வெற்று அடையாள அட்டை திறந்திருக்கும் அதில் கீழிருக்கும் படத்தில் காண்பித்துள்ள வரிசைப்படி படத்தை இனைத்து விடுங்கள் படம் தேவையில்லை என்றால் இந்த வழிமுறையே வேண்டியதில்லை.
இனி படம் இனைத்து விட்டால் நீங்கள் விரும்பும் அல்லது தேவையான அட்ரஸ் டெக்ஸ்ட்களை நிரப்பவும் அதிலேயே எழுத்துருவை மாற்றும் வசதியும் இருக்கிறது இப்படியாக எத்தனை விதமான டெக்ஸ்ட்களும் இனைக்கலாம்.
இந்த மென்பொருளை பொருத்தவரை சொல்லிக்கொடுப்பதை விட உங்கள் கிரியேட்டிவ் தான் இதற்கு சிறப்பாக இருக்கும்.
இனி இரண்டாவதாக நாம் பார்க்க போவது Business Card Creator இந்த Business Card Creator மென்பொருளை மேலுள்ள மென்பொருளோடு ஒப்பிட்டு பாருங்கள் புரியும் இதன் தனித்துவம் இந்த பொருளையும் வழக்கம் போலவே தறவிறக்கி கணினியில் நிறுவி விடவும்.
இனி இந்த மென்பொருளை இயக்க தொடங்கியதும் இப்படியாக விண்டோ திறக்கும் அதில் இருக்கும் டெம்ப்ளேட் மாதிரியை தெரிவு செய்யுங்கள் உங்களின் துறை எந்த மாதிரியோ அதற்கு தகுந்தாற்போல் தெரிவு செய்யவும் இதிலும் உங்களின் கிரியேட்டிவ் தான் சிறப்பாக அமைய உதவும்.
இனி நீங்கள் விரும்பும் அளவை தெரிவு செய்து ஓக்கே கொடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள்.
இனி உங்கள் அடையாள அட்டையில் வரவேண்டிய வார்த்தைகளை பூர்த்தி செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள் இதில் நீங்கள் கொடுக்க நினைக்கவும் படிவம் இல்லையா? ஒன்றும் கவலையில்லை நான் மேலே சொன்ன மாதிரி உங்களின் கிர்யேட்டிவ் தான் முக்கியம் நீங்கள் விரும்பும் வகையிலான ஒரு அடையாள அட்டையை உருவாக்கி விடலாம்.
இதை பாருங்கள் உங்களுக்கு மாதிரி காண்பிப்பதற்காக நான் எனது மகன் ஸ்ரீராம் நிழற்படத்தை வைத்து ஒரு மாதிரி உருவாக்கியிருக்கிறேன் இது பதிவிறாக அவசரத்தில் உருவாக்கியது ஆனால் உங்களால் சிறப்பாக உருவாக்க முடியும்.
இந்த இரண்டு மென்பொருளிலும் நிறைய வசதிகள் இருக்கிறது அதை ஒவ்வொன்றாக செய்து பார்த்தால் இதில் நீங்கள் நிறைய வழிகளை கற்றுக்கொள்ள முடியும். இன்னும் மூன்று மென்பொருள்கள் மீதமிருக்கின்றன ஒரு சிறிய இடைவெளி விட்டு அதையும் பதிகிறேன் ஒவ்வொன்றிற்குமான வித்யாசம் புரிந்து உங்களுக்கு சரியானதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment