சாதரணமாக இது பலருக்கும் தெரிந்திருக்கும் அப்படி தெரியாமல் இருக்கும் நண்பர்களுக்காக தான் இந்த பதிவு. உங்களிடம் இருக்கும் ஏதாவது கோப்புகளை உங்கள் நண்பர்களுக்கோ அல்லது வேறு யாரிடமோ பகிர்ந்துகொள்ள ஏதாவது ஷேர்டு தளங்களில் அப்லோட் செய்து அந்த உரலை நமக்கு வேண்டியவர்களிடம் பகிர்ந்துகொள்வோம் அல்லது மின்னஞ்சல் செய்வோம் இப்படியாக நாம் செய்யும் போது நமக்கு காலவிரயம் இருக்கும் அதற்கு பதிலாக உங்கள் கணினியில் இருக்கும் கோப்புகளை எந்த தளத்திலும் அப்லோட் செய்யாமல் நேரடியாக நீங்கள் உங்கள் நண்பர்களை கோப்புகளை எடுக்க அனுமதிக்கலாம் அதற்கான வழிமுறைகளை இந்த பதிவின் வழியாக பார்க்கலாம்.
இதன் வழியாக உங்கள் கணினியில் இருக்கும் எந்த கோப்பையும் நீங்கள் எங்கிருந்து வேண்டுமானலும் எடுக்கமுடியும் யாரையும் எடுக்க அனுமதிக்கலாம் ஆனால் என்ன இனைய வழியாய் உங்கள் கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது கொஞ்சம் நேரம் அதிகமாகிறது அதாவது பத்து எம்பி அளவுள்ள கோப்பு தரவிறங்க 1 நிமிடம் ஆகிறது என்றால் இந்த வழியாய் நீங்கள் தரவிறக்கும் போது 1 ½ நிமிடம் வரை ஆகலாம் இது சரியான கணக்கீடு இல்லை ஒரு உதாரணமாகத்தான் சொல்லியிருக்கிறேன்.
இனி Todino மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவுங்கள் அளவு 14எம்பி இருக்கிறது உங்கள் கணினியில் நிறுவி முடித்ததும் கீழிருக்கும் விண்டோ திறக்கும் அதை சரியாக பூரிப்பித்து விடுங்கள் இன்ஸ்டால் செய்து முடித்ததும் டாஸ்க் பாரின் இடது பக்கம் பாருங்கள் மஞ்சல் நிறத்தில் ஒரு ஐகான் இருக்கிறதே அது இதற்குறியதுதான் இதில் என்ன ஒரு விஷேசம் இருக்கிறதென்றால் எவ்வளவு கோப்புகளை வேண்டுமானாலும் எளிதாக பகிர்ந்துகொள்ள முடியும்.
இனி கீழிருக்கும் படத்தில் உள்ளது போல Webshare என்பதை கிளிக்கினால் ஒரு பாப் அப் திறக்கும் அதில் நீங்கள் பகிர்ந்துகொள்ள நினைக்கும் போல்டரை அல்லது கோப்பை பிரவுஸ் செய்து Add என்பதை கிளிக்கினால் போதும் அவ்வளவுதான்.
நாம் இனைத்த கோப்பிற்கு உரல் URL வந்துவிடும் அதை நண்பர்களோடு அல்லது வலைத்தளத்தில் நீங்கள் இனைத்திருக்கும் தகவலை நேரடியாக உபயோகபடுத்த முடியும் உங்கள் நண்பர்கள் உங்கள் கணினியில் இருந்தே நேரடியாக கோப்புகளை எடுத்துக்கொள்வார்கள்.
இப்படியாக இருக்கும் நீங்கள் உள் நுழைவதற்கான முகப்பு.
இதில் இருந்து வெளிவர படத்திலிருப்பது போல Logout செய்துவிடுங்கள்.
இதை முழுவதுமாக பயன்படுத்தினால் உங்களுக்கு புரிந்துவிடும் நான் ஒரு சிறு கோடு தான் போட்டுக்காட்டியிருக்கிறேன் அதை நேர்த்தி மிகுந்த சாலையாக மாற்றிக்கொள்வதில் உங்கள் பங்கும் இருக்கிறது. மேலும் நீங்கள் பகிர்ந்துள்ள கோப்புகள் எத்தனை முறை தரவிறக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இதன் வழியாகவே அறியும் வசதி இருக்கிறது.
இனி இந்த தகவலை பகிர்ந்துகொண்ட் தம்பி பிரபு அவர்களுக்கு நன்றியை தெரிவிப்பதோடு விஷயத்திற்குள் செல்லலாம். இதுவும் மேலே பார்த்தது போலதான் ஆனால் அளவை நிர்ணயம் செய்திருக்கிறார்கள் ஆனால் பயன்படுத்துவதற்கு எளிமையாய் தந்திருக்கிறார்கள்.
இனி இந்த Dropbox மென்பொருளை கணினியில் தரவிறக்கி நிறுவுங்கள் எல்லாம் வழக்கமான முறைதான் ஆனால் நிறுவும் போதே உங்களை ரிஜிஸ்டர் செய்ய சொல்லும், நிறுவி முடித்ததும் கணினியின் டாஸ்க்பாரில் பாருங்கள் ஒரு அட்டைப்பெட்டியை திறந்து வைத்தது போல இருக்கும் இது தான் இதற்கான ஐகான் அப்படியே உள்ளே பாருங்கள் புதிதாக MY Dropbox என ஒரு போல்டர் வந்திருக்கும் இதன் வழியாக தான் இனி உங்கள் கோப்புகளை பகிர்ந்துகொள்ள போகிறீர்கள்.
இதில் உள்ள மொத்த கோப்புகளை வேண்டுமானலும் பகிர்ந்துகொள்ளலாம் இல்லை ஏதாவது ஒரு கோப்பை மட்டும் நான் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன் என்றால் படத்தில் உள்ளது போல அந்த லிங்க் மட்டும் காப்பி எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி விடுங்கள்.
உங்கள் கணினியை விட்டு வெளியில் இருந்தால் Dropbox தளம் சென்று உங்கள் பயணர் பெயரையும் கடவுச்சொல்லையும் கொடுத்தால் போதும் உங்கள் கணினியில் உள்ள கோப்புகள் உங்கள் கைகளுக்கு வந்துவிடும்.
மன்னிக்கவும் நண்பர்களே பதிவை குறித்தான விபரங்களை விரிவாக எழுதமுடியவில்லை நேரமின்மையே காரணம் இருந்தாலும் இதில் விரிவாக எழுதுவதற்கு ஒன்றுமில்லை உங்களுக்கு பார்த்தவுடனேயே நிச்சியம் புரிந்துவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment