Monday, February 28, 2011

வைரஸ் தாக்கிய கணினியில் டாஸ்க்மேனேஜரைத் திறக்க .

வைரஸ்,ஸ்பைவேர் தாக்குதலுக்குட்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி கணினியில் (சரிசெய்ய முயற்சி செய்கையில் எந்தவொரு வைரஸ் எதிர்ப்பு மென்பொருளையும் இன்ஸ்டால் செய்வதோ அல்லது ஆன்லைன் வைரஸ் ஸ்கேன் செய்யும் முயற்சியிலோ தோல்வி ஏற்படும் பொழுது) வைரஸ் வகை விபரங்களைத் தெரிந்து கொள்ள Ctrl+Alt+Del காமாண்ட் கொடுத்து டாஸ்க் மேனேஜரைத் (Task Manager) திறந்து பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மென்பொருள்கள் குறித்த விபரத்தை அறிந்து வைரஸ் வகை சார்ந்ததாக இருந்தால் இயக்கத்தை தடை செய்து பிறகு கணினியை மீட்க முயற்சிப்போம். ஆனால் டாஸ்க் மேனேஜரின் விண்டோவையும் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது.
அதற்கு சிறிய அளவிலான மென்பொருள்கள் சில இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால் அதற்குப் பதிலாக டாஸ்க் மேனேஜரைச் செயல்படுத்தும் வகையில் விபி ஸ்கிரிப்ட் கொண்ட எச்சல் சீட்டைத் தயாரித்துள்ளனர். இதனைப் பயன்படுத்தி எளிதாக உங்கள் கணினியில் இயங்கும் மென்பொருளை சஸ்பெண்ட், டெர்மினேட், ரெஸ்யூம்(terminate, suspend or resume processes) ஆகிய பணிகளைச் செய்யமுடியும்.

 http://blog.didierstevens.com/2011/02/03/taskmanager-xls/
இந்த லிங்க்கிலிருந்து எக்சல் ஃபைலை டவுன்லோட் செய்து அதனை திறந்து கொள்ளவும்.


அதில் இரண்டு பட்டன்கள் இருக்கும். ஒன்று லிஸ்ட் பிராசஸ் என்பது, மற்றொன்று எக்ஸ்கியூட் கமாண்ட் . முதலில் லிஸ்ட் பிராசஸ் பட்டனைக் கிளிக் செய்யவும். உடனே பயன்பாட்டில் இருக்கும் மென்பொருள்களின் பட்டியல் கிடைக்கும். அதில் எது தேவையற்றதோ அதற்கு நேராக முன்புறம் உள்ள கமாண்ட் கட்டத்தில் சஸ்பெண்ட் செய்ய s என்றோ, டெர்மினேட் செய்ய t என்றோ கொடுக்கலாம். டெர்மினேட் செய்ததை மீண்டும் இயக்க ரெஸ்யூம் பிராசஸ் என்பதற்கான r என்ற எழுத்தை கொடுத்த பிறகு எக்ஸ்கியூட் கமாண்ட் பட்டனைக் கிளிக் செய்யவும்.
இந்த எக்சல் ஃபைல் அளவு 50 கேபிக்கும் குறைவுதான். கணினியில் வைத்திருந்தால் எப்போதாவது அவசரத்திற்கு உதவக்கூடும்.

குறிப்பு: எஸ்சல் ஃபைல் ஓப்பன் ஆபிஸ் 3.3 மென்பொருளில் செயல்படாது. எக்சல் மென்பொருளில் மேக்ரோ (Macro) க்கள் Disable செய்திருந்தால் அதனை Enable செய்துவிட்டுப் பயன்படுத்தவும்

எந்த வகை வீடியோவையும் எந்த வகைக்கும் எளிதாக மாற்றலாம்....


வீடியோக்கள் பல வகையில்  இணையத்தில் கிடக்கின்றன இதில் நமக்கு தேவையான வீடியோக்களை நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கி கொள்கிறோம். ஒரு சிலவகையான வீடியோக்கள் நம் கணினியில் இயங்காத பார்மட்டில் இருக்கும் மற்றும் இந்த வீடியோக்களை நம் மொபைல் போனுக்கு காப்பி செய்ய நினைத்தாலோ இந்த வகை வீடியோக்களை நாம் வேறு பார்மட்டில் மாற்ற நினைப்போம்.
இதை வசதியை தர இணையத்தில் நிறைய மென்பொருட்கள் இருந்தாலும் Hamster Free Vedio Convertor என்ற மென்பொருள் சிறப்பாக உள்ளது.
மென்பொருளின் பயன்கள்:
  • இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
  • இதில் எந்த வீடியோவையும் ipod,ipad, Iphone, PS3, PSP, Black Berry, Xbox, zune, Apple TV, iRiver இப்படி 200 வகையான சாதனங்களில் உபயோகிக்கும் படி மாற்றி கொள்ளலாம்.
  • எந்த வீடியோவையும் 3GP, MP3, MP4, AVI, DVD, WMV, DIVIX, MPEG, FLV, M2TS இப்படி எந்த வகை பார்மட்களிலும் எளிதாக மாற்றி கொள்ளலாம்.
  • வீடியோவில் வுள்ள பாடலையோ அல்லது வேறு ஏதேனும் ஆடியோவையோ தனியாக பிரித்து கொள்ளலாம்.
  • உபயோகிப்பதற்கு மிகவும் சுலபம்.
  • WINDOWS7/ VISTA / XP - க்கு உகந்தது.
  • இந்த மென்பொருளை உங்கள் விருப்பம் போல் தீம் மாற்றி அழகாக்கி கொள்ளலாம்.
  • 40 வகையான மொழிகளுக்கு உகந்தது.
உபயோக்கிக்கும் முறை: 
  • கீழே உள்ள DOWNLOAD பட்டனை அழுத்தி இந்த  மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு வரும் ZIP பைலை EXTRACT செய்து உங்கள் கணினியில் Hamster vedio convertor மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் முதல் படியில் உள்ள Add file என்பதில் நீங்கள் கன்வெர்ட் செய்ய வேண்டிய வீடியோ பைலை ட்ராக் செய்தோ அல்லது அந்த கட்டத்தில் க்ளிக் செய்தோ தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • அடுத்து  Edit க்ளிக் செய்து கொண்டு அங்கு நீங்கள் மாற்ற வேண்டிய பார்மட்டை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • இந்த படியில் நீங்கள் உங்கள் வீடியோவின் height width மற்றும் quality போன்றவைகளை உங்கள் விருப்பம் போல் மாற்றி கொள்ளலாம்.
  • முடிவில் நீங்கள் க்ளிக் செய்ய வேண்டியது Convert பட்டனை. இந்த பட்டனை அழுத்தியவுடன் உங்கள் வீடியோவின் அளவை பொருத்து உங்கள் வீடியோ கான்வர்ட் ஆகி வரும்.  
  • இது போன்று உங்களுக்கு தேவையான வீடியோக்களை தேவையான வடிவில் மாற்றி கொள்ளலாம். 
  • இதில் உள்ள செட்டிங்க்ஸ் க்ளிக் செய்து உங்கள் மொழி மற்றும் மென்பொருளின் நிறத்தை மாற்றி கொள்ளலாம்.

இந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள பட்டனை அழுத்துங்கள்.


Saturday, February 19, 2011

டிரைவர்களை நிறுவ,அப்டேட் செய்ய இலவச மென்பொருள்..

உங்கள் கணிணியில் ஒலி வரவில்லையா ,சில கேம்களை விளையாட முடியவில்லையா இவைகளுக்கு காரணம் தேவையான கணிணி டிரைவர்கள்(Drivers) உங்கள் கணிணியில் இல்லாமல் இருக்கலாம் அல்லது பழுதடைந்து போயிருக்கலாம்.புதிதாக விண்டோஸ் நிறுவிய பின்னர் சில நேரங்களில் டிரைவர்கள் இல்லாமல் போகலாம். இவற்றை உங்கள் கணிணிக்கு ஏற்ற டிரைவர்களை கண்டு பிடித்து நிறுவுவது கடினம். slimdriver என்ற இந்த மென்பொருள் இந்த வேலையை எளிதாக்குகிறது.

எனது கணிணியில் ஒரு கேம் விளையாட முடியவில்லை பல நாளாக ஏதோ display டிரைவர் இல்லை என வந்தது.எந்த டிரைவர் என அறிய முடியவில்லை.மேலும் கணிணியில் ஒலி வந்தது ஆனால் யாருடனாவது head phone இல் chatல் பேசும் போது அதில் ஒலி வரவில்லை ஆனால் speakerல் வந்தது.இந்த இரு பிரச்சனைகளையும் இந்த slimdriver மூலம் எளிதாக தீர்க்க முடிந்தது. இந்த மென்பொருளின் இலவச பதிப்பே போதுமானது.




இந்த மென்பொருளை நிறுவிய பின் start scan என்பதை கிளிக் செய்தால் உங்கள் கணிணியில் இல்லாத அல்லது அப்டேட் செய்ய வேண்டிய டிரைவர்களை காட்டும்.அதில் உங்களுக்கு தேவையான டிரைவர்களை download update என்பதை கிளிக் செய்து நிறுவி கொள்ளவும்.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்க
DriverUpdate.net -Update Drivers for Windows 7, XP, and Vista

கூகுள் தேடலில் ஆபாச தளங்களை தடுக்க.....


கூகுளில் தேடினால் கிடைக்காதது எதுவுமே இல்லை என அனைவரும் அறிந்ததே.  இணையத்தில் எந்த அளவிற்கு நல்ல விஷயங்கள் உள்ளனவோ அதைவிட இரு மடங்கு கெட்ட விஷயங்களும் உள்ளன. ஆகையால் கூகுளில் கெட்ட விஷயங்களை தேடினாலும் லட்சகணக்கில் ஆபாச இணையதளங்கள் வரும் இதனால் நம் பிள்ளைகளின் கவனங்கள் சிதற வாய்ப்பு உள்ளது. ஆகவே கூகுள் தேடலில் இந்த ஆபாச இணையதளங்கள் வருவதை எப்படி தடுப்பது என காண்போம்.
  • முதலில் இந்த லிங்கில் Google க்ளிக் செய்து கூகுள் Settings பகுதிக்கு செல்லுங்கள்.
  • உங்களுக்கு வரும் விண்டோவில் உள்ள Safe Search Filtering பகுதிக்கு செல்லவும்.
  • அங்கு உள்ள Lock Safe Search என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  •  அதை க்ளிக் செய்தவுடன் உங்களின் ஜிமெயில் Id, Password கேட்கும் அதை கொடுத்து Sign In கொடுத்தால் உங்களுக்கு அடுத்த விண்டோ வரும் அதில் இருக்கும் Lock Safe Search என்ற பட்டனை அழுத்தவும்.
  • அங்கு அவ்வளவு தான் கூகுள் தேடலில் ஆபாச இணையதளங்கள் தடுக்கப்பட்டு விடும். 
  • நீங்கள் திரும்பவும் இந்த Safe Search Lock நீக்க நினைத்தால் அதே செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று Unlock என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் USER ID, PASSWORD கொடுத்தால் திரும்பவும் இந்த லாக் நீங்கிவிடும்.
  • மேலும் உதவிக்கு கூகுள் வழங்கும் கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.




குரோம் நீட்சி - Personal Block List



குறிப்பிட்ட சில நமக்கு தேவையில்லாத தளங்கள் கூகுள் தேடலில் வருவதை தடை செய்யலாம். இந்த நீட்சியை முதலில் உங்களின் உலவியில் நிறுவிடவும் இப்பொழுது கூகுளில் தேயில்லாத தளத்தின் பெயரை கொடுத்து வரும் முடிவில் தற்போது புதியதாக எல்லா முடிவுகளுக்கு கீழேயும் Block என்று ஒரு புதிய வசதி இருக்கும் அதில் க்ளிக் செய்து அந்த தளங்களை நீக்கி விடலாம்.



மெகா வீடியோவில் தொடர்ந்து வீடியோ பார்க்க புதிய சிலந்தி ப்ளேயர் ...

நண்பர்களே பாடல்கள் கேட்க எத்தனை ப்ளேயர்கள் இருந்தாலும் புதிய ப்ளேயர்களை முயன்று பார்ப்பதில் தவறு ஒன்றுமில்லையே.  நான் எப்பொழுதும் கணினியில் பாட்டு கேட்பதாகாக இருந்தால் Winamp Media Player படம் பார்ப்பதாக இருந்தால் VLC Media Player உபயோகிப்பவன்.  அதனால் புதியதாக வந்திருக்கும் Spider Player பாட்டு கேட்பதற்காக முயன்று பார்த்தேன் நன்றாகதான் இருந்தது.  இதில் நிறைய வசதிகள் உள்ளது 

இந்த மென்பொருளின் வசதிகள் தெரிந்து கொள்ள சுட்டி

மென்பொருளை தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருள் ஒரு Freeware ஆகும்.

Professional Version வருகிறது அதற்கு மென்பொருளை தரவிறக்கி ரெஜிஸ்டர் செய்யும் பொழுது இந்த கோடு கொடுத்தால் போதும்.  27U3Z909I95-KK147A893S4K6Y1M0F-780363812  அவ்வளவுதான் முடிந்தது.

இந்த மென்பொருளின் பெயர் Spider ஆகும்

யாஹூ மெயில் பாவனையளர்களுக்கு புதிய எழுத்துருக்கள் அறிமுகம்....


யாஹூ மெயில் பாவனையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. வழமையான எழுத்து வடிவங்களை பயன்படுத்தி சோர்ந்து போன எங்கள் கைகளுக்கும் பார்த்து பார்த்து சோர்ந்து போன கண்களுக்கும் அழகான வித்தியாசமான எழுத்து வடிவங்களை மின்னஞ்ஞலில் இணைக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
Fontself
இவ்வாறு அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துக்களை பெற, உங்கள் யாஹூ மெயிலில் இடது கைப்பக்கம் கீழ் பகுதியில் காணப்படும் My Cool Fonts என்பதை க்ளிக் செய்து அங்கு தோன்றும் படிவத்தில் உங்கள் மின்னஞ்ஞல்களை எழுதி create mail என்பதை க்ளிக் செய்து உங்கள் நண்பர்களை அசத்துங்கள்.
My Cool Fonts எனும் அப்ளிகேசனானது பல எழுத்துருக்களை கொண்டுள்ளது. அங்கு காணப்படும் எந்த ஒரு வடிவமும் உங்களுக்கு பிடிக்கவில்லையாயின் create a new font என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு விருப்பமான வகையில் எழுத்துக்களை வடிவமைத்துக்கொள்ளும் வாய்ப்பும் இந்த அப்ளிகேசனில் காணப்படுகிறது.
yahoo cool fonts
இந்த வசதியானது ஏற்கனவே சில நாடுகளில் யாஹூ பாவனையாளர்களினால் பாவிக்கப்பட்டிருந்தாலும் இப்போது உலகம் பூராகவும் இருக்கும்பாவனையாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

Tuesday, February 15, 2011

ஜிமெயில் கணக்கில் உங்களின் பேஸ்புக்கை கொண்டுவர .....

பேஸ்புக் என்பது நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்துவரும் வரும் இணைய தளம். தனி தளமாக ஒப்பீடு செய்தால் இது கூகுளையே பின்னுக்கு தள்ளிவிடும். கூகுளுக்கு நிறைய கிளை தளங்கள் இருப்பதால் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதெல்லாம் நமக்கெதுக்கு விஷயத்துக்கு வருவோம். நாம் இந்த பேஸ்புக் மற்றும் ஜிமெயிலையும் உபயோகித்தால் இவை இரண்டையும் தனித்தனியாக திறந்து பார்க்க வேண்டும் ஆனால் பேஸ்புக்கை நம்முடைய ஜிமெயில் கணக்கில் இணைத்து விட்டால் பேஸ்புக் தளத்திற்கு வராமலே ஜிமெயிலில் இருந்தே பேஸ்புக் அப்டேட்களை பார்த்து கொள்ளலாம்.
  • பேஸ்புக் தளத்தை திறக்காமலே ஜிமெயிலில் இருந்தே பேஸ்புக் அப்டேட்களை பார்த்து கொள்ளலாம்.
  • உங்கள் அலுவலகத்தில் பேஸ்புக் கணக்கு தடை செய்யப்பட்டிருந்தாலும் இது வேலை செய்யும்.
  • ஜிமெயிலில் இருந்தே நண்பர்களின் பதிவிற்கு கருத்துரைகள் இடலாம். நம் விருப்பங்களையும் தெரிவிக்கலாம்.
  • இந்த வசதிகளை உங்கள் ஜிமெயில் கணக்கிலும் கொண்டு வர முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • Settings - Labs க்ளிக் செய்யவும் உங்களுக்கு வரும் விண்டோவில் Enabled Labs பகுதியில் Enable என்பதை தேர்வு செய்து கீழே உள்ள Save Changes என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  • மேலே செய்த மாற்றத்தை சேமித்தவுடன் அடுத்து Gadget டேபை க்ளிக் செய்யவும். 
  • அங்கு வந்திருக்கும் விண்டோவில் கீழே உள்ள URL காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
http://hosting.gmodules.com/ig/gadgets/file/104971404861070329537/facebook.xml

  • URL பேஸ்ட் செய்தவுடன் அதற்கு அருகே உள்ள Add என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதும் பேஸ்புக் உங்கள் ஜிமெயில் கணக்கில் சேர்ந்துவிடும். 
  • இப்பொழுது நீங்கள் ஜிமெயிலை Refresh செய்யுங்கள். இப்பொழுது ஜிமெயிலின் Chat பகுதிக்கு கீழே பாருங்கள் பேஸ்புக் விட்ஜெட் சேர்ந்து இருக்கும். அதில் உள்ள Expand என்பதை க்ளிக் செய்யுங்கள். 
  • உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் அதில் Allow என்பதை கொடுத்து விட்டு பின்பு உங்கள் பேஸ்புக் ID, Password கொடுத்து உள்ளே நுழைந்து உங்கள் பேஸ்புக் கணக்கை ஜிமெயிலிலே திறந்து பார்க்கலாம்.

Friday, February 11, 2011

இணையத்தொடர்பு [Internet Connection] இல்லாதவேளையிலும் இணையத்தளங்களைப் பார்வையிடுவதற்கு.


நாம் பொதுவாக இணையத் தளங்களைப் பார்வையிடும்போது சில பக்கங்கள் மீண்டும் தேவைப்ப்படுமெனின் அதனை புக்மார்க் [BOOK MARK] செய்துவைப்பதுண்டு. ஆனால் Book Markசெய்யும் பக்கங்களை மீண்டும் பார்ப்பதற்கு இணையத் தொடர்பை ஏற்படுத்தினாலேயே அப் பக்கத்தினுள் நாம் செல்லமுடியும். இதற்காக நாம் அப் பக்கங்களை “Save Page As”என்பதை கொடுத்து சேமித்து[Save]வைப்பதுண்டு.
ஆனால் கல்வித்தளங்கள் அல்லது வேறு முக்கியமெனக் கருதும் வலைத்தளங்களின் பெரும்பாலான பக்கங்கள் அனைத்தும் எமக்கு அடிக்கடி தேவைப்ப்படுமெனின் அவ் வலைத்தளங்களின் எல்லாப் பக்கங்களையும் Save செய்து வைப்பதால் மீண்டும் நாம் அதனைப் பார்வையிடும்போது ஒவ்வொன்றாக Open செய்து பார்க்கவேண்டும். இது நேர விரையத்தையும் எரிச்சலையும் கூட எமக்குத் தரலாம்.




எனவே இதற்கு தீர்வைத் தர பல மென்பொருட்கள் இணையத்தில் காணப்படுகின்றன. நாம் இப்போ அதில் ஒருவகையான HTTRACK  எனும் மென்பொருளின் பயன்பற்றிப் பார்ப்போம்.
இம்மென்பொருளை இணையத்திலிருந்து இலவசமாக கீழ் உள்ள இணைப்பின்மூலம் பதிவிறக்கி கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

இப்போ நிறுவுகை முடிவடைந்ததும் அதனை திறந்துகொள்ளுங்கள். இப்போ கீழ் உள்ளவாறு காணப்படும்.

இதில் “NEXT” என்பதைக் கொடுங்கள். இப்போ கீழ் உள்ள பக்கம் திறக்கும்.


இதில் “New Project Name” என்பதில் உங்களுக்கு விரும்பிய பெயர் ஒன்றினைக் கொடுங்கள். “Base Path”  என்பதில் நீங்கள் எங்கு சேமிக்கப் போறீர்களோ அவ்விடத்திற்குரிய பாதையைக்[Path] காட்டிவிடவும். பின்னர்“NEXT” என்பதைக் கொடுக்கவும். இப்போ கீழ் உள்ள பக்கம் திறக்கும்.


இதில் “ Add URL ” என்பதை கிளிக் பண்ணவும். இப்போ கீ காட்டியவாறு விண்டோ தோன்றும். இதில் “ URL “ என்பதில் உங்களுக்கு வேண்டிய இணையத்தளத்தின் முகவரியை கொடுத்து “ OK “ என்பதைக் கொடுக்கவும்.


 பின்னர் அடுத்துவரும் விண்டோவில் “ NEXT ” என்பதைக் கொடுத்து இறுதியில் “ Finished ” என்பதைக் கொடுக்கவும்.



இப்போ கீழ் உள்ளவாறு இணையத்தளத்தின் அனைத்தும் பதியப்படும். முடிவடைய சற்று நேரமெடுக்கும். இவ்வேளையில் நீங்கள் இணையத்தில் வேறேதும் பற்றி அலசவேண்டியதுதான். பின்னர் செய்கை முடிவுற்றதும் “ Finished ” என்பதைக் கொடுத்து வெளியேறுக.

பின்னர் இணைய இணைப்பு இல்லாதவேளையில் சேமித்து வைத்த Folderஇனுள் சென்று “ .html “  இல் உள்ள  File ஐ  Open செய்து படிக்கவேண்டியதுதான்.
இணையத் தொடர்பு உள்ளவேளை இணையத்தளம் ஒன்றினுள் அலசுவது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும். இது வீடுகளில் இணையவசதி இல்லாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.