யாஹூ மெயில் பாவனையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. வழமையான எழுத்து வடிவங்களை பயன்படுத்தி சோர்ந்து போன எங்கள் கைகளுக்கும் பார்த்து பார்த்து சோர்ந்து போன கண்களுக்கும் அழகான வித்தியாசமான எழுத்து வடிவங்களை மின்னஞ்ஞலில் இணைக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
இவ்வாறு அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துக்களை பெற, உங்கள் யாஹூ மெயிலில் இடது கைப்பக்கம் கீழ் பகுதியில் காணப்படும் My Cool Fonts என்பதை க்ளிக் செய்து அங்கு தோன்றும் படிவத்தில் உங்கள் மின்னஞ்ஞல்களை எழுதி create mail என்பதை க்ளிக் செய்து உங்கள் நண்பர்களை அசத்துங்கள்.
My Cool Fonts எனும் அப்ளிகேசனானது பல எழுத்துருக்களை கொண்டுள்ளது. அங்கு காணப்படும் எந்த ஒரு வடிவமும் உங்களுக்கு பிடிக்கவில்லையாயின் create a new font என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு விருப்பமான வகையில் எழுத்துக்களை வடிவமைத்துக்கொள்ளும் வாய்ப்பும் இந்த அப்ளிகேசனில் காணப்படுகிறது.
இந்த வசதியானது ஏற்கனவே சில நாடுகளில் யாஹூ பாவனையாளர்களினால் பாவிக்கப்பட்டிருந்தாலும் இப்போது உலகம் பூராகவும் இருக்கும்பாவனையாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment