Saturday, February 5, 2011


நம் இணைய உலாவியில் பாதிப்பு இருக்கிறதா என்று எளிதாக

கண்டுபிடிக்கலாம்.



நாம் பயன்படுத்தும் இணைய உலாவியை தாக்கி நம் கணினியில்
இருக்கும் தகவல்களை கொள்ளை அடிப்பது தற்போது வேகமாக
பரவிவருகிறது இதற்கு தீர்வாக ஆன்லைன் மூலம் நம் இணைய
உலாவியை எளிதாக சோதித்து பாதிப்பு ஏதும் இருக்கிறதா என்று
எளிதாக அறியலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
Interner Explorer , Firefox, Opera போன்ற இணைய உலாவிகளில்
ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆன்லைன் மூலம்
சோதித்து சில நிமிடங்களில் தெரிந்து கொள்ள நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://bcheck.scanit.be/bcheck/
கணினியில் வங்கி கணக்கின் கடவுச்சொல் முதல் இமெயில்
கணக்குகள் வரை அனைத்தையும் திருடும் கும்பல் தற்போது
கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் இணைய உலாவிகள்,
சிறிய அளவில் சாதாரனமான Script மூலம் கூட தகவல்களை
திருடுகின்றனர், சில நேரங்களில் நம் உலாவியில் இது போன்ற
ஸ்கிரிப்ட் இருப்பது கூட நமக்கு தெரியாது, இந்தப்பிரச்சினைக்கு
தீர்வாக மேலே குறிப்ப தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல்
காட்டியபடி Start the test என்ற பொத்தானை அழுத்தி நம்
உலாவியை சோதிக்கலாம் சில நிமிடங்களில் நம் உலாவி
பாதிக்கப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்ற தகவல்களையும்
கொடுக்கிறது, அனைத்து தரப்பு மக்களும் உலாவியை அடிக்கடி
சோதித்துகொள்வதால் வரும் பாதிப்புகளை தவிர்க்கலாம்,
கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment