Sunday, February 6, 2011

ஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library


கணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில்

முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால்
உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு முக்கியமான
கோப்புகளையும் பாடல் மற்றும் வீடியோவையும் கொண்டு
இலவச Filelibrary ஒன்று உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
கூகுளில் சென்று தேடினாலும் சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த
கோப்பு கிடைக்காது இந்தப்பிரச்சினையை தீர்ப்பதற்காகவும்
ஆன்லைன் மூலம் நம்மிடம் இருக்கும் கோப்புகளை பிறருக்கு
பகிர்ந்து கொள்ளவும் உதவ ஒரு இலவச தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://fliiby.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எதைப்பற்றி
தகவல்கள் வேண்டுமோ அதை கொடுத்து டாக்குமெண்ட் அல்லது
ஆடியோ,வீடியோ அல்லது Zip போன்ற எந்த கோப்பு வகைகளில்
தேடவேண்டுமோ அதைக்கொடுத்து Search என்ற பொத்தானை
அழுத்த வேண்டும் உடன் வரும் திரையில் நாம் தேடிய
டாக்குமெண்ட் பல கிடைக்கிறது. மாணவர்களுக்கும் பிஸினஸ்
செய்யும் நண்பர்களுக்கும் முக்கிய டாக்குமெண்ட் மற்றும்
பிராஜெக்ட் ரிப்போர்ட் பற்றிய தகவல்களை இந்ததளத்தில்
பல கிடைக்கிறது.இது மட்டுமின்றி பிளாஷ் அனிமேசன்
கோப்புகளை கூட நாம் தேடி தரவிரக்கலாம். அனைத்து
துறையினருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment