Tuesday, February 1, 2011


கிரெடிட் கார்டு ரகசியங்கள் பரிபோகாமலிருக்க…



கிரெடிட் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் அதன் பாதுகாப்பை பற்றிய அச்சம் இல்லாமல் இருக்காது. அதுவும் இணையத்தில் அதை உபயோகிக்கும் சமயத்தில் இணைய திருடர்களிடமிருந்து கார்டின் ரகசிய தகவல்களை பாதுகாக்க மிகவும் சிரமபடுகின்றனர்.


இதனை சமாளிக்கும் பொருட்டு வந்தது தான் ‘Smart Swipe’.. இது கம்ப்யூட்டரின் யு.எஸ்.பி., போர்ட்டில் இணைக்கும் வசதி கொண்டுள்ளது. இணையம் மூலமாக அனைத்து வேலைகளையும் அதாவது அனைத்து வாங்குதல்களையும் இணையம் மூலமாகவே முடித்துகொள்கின்றனர் இக்காலத்து மக்கள். அதற்கு முக்கிய தேவையாக இருப்பது கிரெடிட் கார்ட். இனி கிரெடிட் கார்டின் ரகசிய எண்ணை இணையத்தில் கொடுத்து அதை எவன் எடுப்பானோ என்று அடிவயிற்றில் நெருப்பை கட்டவேண்டிய அவஸ்தை இல்லை.



இதை கம்ப்யூட்டரின் யுஎஸ்பி போர்ட்டில் இணைத்துவிட்டு வழக்கமாக வாங்கும் இன்டர்நெட் ஷாப்பிங் கடைக்கான வெப்சைட்டில் போய் தேவையானதை தேர்ந்தெடுத்துவிட்டு ரகசிய இலக்கை செலுத்த வேண்டிய சமயத்தில் இந்த ‘Smart Swipe’இல் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் கார்டை வைத்து தேய்த்தால் தேவையான தகவல்கள் நேரடியாக அந்த கடையின் தகவலுக்கு சென்றிடும். இதனால் ரகசிய தகவல் பறிபோவது குறைவே. மேலும் கிரெடிட் கார்டின் அனைத்து தகவல்களையும் செலுத்தி நேரமும் வீணாகாமல் இருக்கும். இது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மட்டுமே வேலை செய்யும். இதில் visa, Master card, American express போன்ற இன்னும் பல கார்டுகளை பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment