Thursday, January 19, 2012

கூகுள் பிளசில் போட்டோக்கள் மீது தமிழில் எழுதும் வசதி- Add Text on Photos

மிகவேகமாக வளர்ந்து வரும் சமூக இணையதளமான கூகுள் பிளசில் ஒரு புதிய வசதியை வெளியிட்டு உள்ளனர்(நேற்று ஆணி அதிகம் இணையம் பக்கமே வர முடியல இதனால் இன்று எழுதுகிறேன்).  அந்த வசதியின் படி கூகுள் பிளசில் போட்டோக்கள் பகிரும் பொழுது அந்த போட்டோக்களில் நாம் விரும்பியதை எழுதலாம். தமிழ் மொழியையும் சப்போர்ட் செய்வது இதன் கூடுதல் சிறப்பாகும். எனக்கு தெரிந்து எந்த சமூக தளத்திலும் இந்த வசதி இல்லை என நினைக்கிறேன். நாம் எழுதும் வாக்கியம் போட்டோக்கள் அளவிற்கு ஏற்ப எழுத்துக்களின் அளவு தானாகவே குறைந்து விடுகிறது.


கூகுள் பிளசில் எப்பொழுதும் போட்டோக்கள் பகிர்வது போல Add Photo கிளிக் செய்து புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். Add Text என்ற ஒரு புதிய வசதி இருக்கும் அதன் மீது கிளிக் செய்யுங்கள்.


அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். அதில் Top, middle, Bottom என மூன்று கட்டங்கள் இருக்கும் எந்த இடத்தில் வாக்கியம் சேர்க்க வேண்டுமோ அந்த கட்டத்தில் உங்களின் வாக்கியத்தை டைப் செய்யவும். கூகுளின் IME பயன்படுத்தி நேரடியாக தமிழில் டைப் செய்யலாம்.

வலது புறத்தில் உள்ள T என்ற லிங்கை கிளிக் செய்து வேண்டிய Font Family தேர்வு செய்து கொள்ளவும். உங்கள் வார்த்தையை கொடுத்தவுடன் கீழே உள்ள Save பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் Share செய்து விடலாம்.

போட்டோவில் தமிழில் வாட்டர்மார்க் சேர்க்க விரும்புவோருக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். வாட்டர் மார்க் சேர்த்த பின் வேண்டுமென்றால் உங்கள் கணினியில் சேமித்து மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ளலாம். 

Sunday, January 15, 2012

விண்டோஸ் கணினிகளில் System Restore Point உருவாக்குவது எப்படி(XP, Windows7)



விண்டோஸ் கணினிகளில் system Restore Point என்ற வசதி உள்ளது. System Restore Point வசதி என்பது உங்கள் கணினிகளில் ஏதேனும் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வதற்கு முன்னோ, Registry சுத்தம் செய்யும் பொழுதோ ஏதோ அசம்பாவிதம் ஏற்ப்பட்டு உங்களில் கணினியில் ஏதேனும் முக்கிய மென்பொருள் கிராஷ் ஆகிவிட்டால் System Restore Point வசதி மூலம் மீண்டும் பழைய நிலைக்கு உங்கள் கணினியை கொண்டு வரலாம். ஆனால் இந்த செயல்களை செய்வதற்கு முன் நீங்கள் System Restore Point உருவாக்கி வைத்திருக்க வேண்டும். சுருக்கமாக சொல்ல போனால் System Restore Point உங்கள் கணினி செட்டிங்க்சை பேக்கப் எடுத்து வைப்பது என கூறலாம்.



Windows7 கணினிகளில் System Restore Point உருவாக்க:
  • முதலில் உங்கள் My computer ஐகான் மீது ரைட் கிளிக் செய்து Properties தேர்வு செய்யவும்.
  • அடுத்து System Production என்பதை கிளிக் செய்யவும்.
  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் Create என்பதை அழுத்தவும்.
  • அடுத்து வரும் விண்டோவில் Description கொடுக்கவும். இன்ஸ்டால் செய்ய போகும் மென்பொருளை பற்றி இருந்தால் ஞாபகம் வைத்து கொள்ள சுலபமாக இருக்கும்.
  • அடுத்து உங்கள் கணினியின் Restore Point உருவாக்கப்படும். 
அவ்வளவு தான் உங்களுடைய System Restore Point உருவாக்கப்பட்டுவிட்டது. இனி நீங்கள் தைரியமாக மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். 
XP கணினிகளில் System Restore Point உருவாக்க:

  • Start - All Programs - Accessories - System Tools சென்று System Restore என்பதை கிளிக் செய்யவும்.
  • அடுத்து Create a System Restore Point என்பதை தேர்வு செய்யவும்.
  • அடுத்து Description கொடுக்கவும்.

  • அடுத்து Create பட்டனை கிளிக் செய்யவும். 

அவ்வளவு தான் Restore Point உருவாகி விடும். 

இனி உங்கள் கணினியில் ஏதேனும் பிரச்சினை என்றால் நீங்கள் உருவாக்கியுள்ள Restore my computer to an earlier time என்பதை கிளிக் செய்து கணினியை திரும்பவும் பழைய நிலைக்கு கொண்டுவரலாம்.

யூடியுபில் 1500க்கும் அதிகமான இந்திய திரைப்படங்களை இலவசமாக காண- 1500+ Indian movies on Youtube


இயந்திரம் போல் ஆகிவிட்ட மனித வாழ்க்கையில் சினிமாக்கள் தான் மிகப்பெரிய பொழுது போக்கு அம்சமாக மாறிவிட்டது. ஏதாவது ஒரு பண்டிகையா அல்லது விசேஷ நாட்களோ வந்தால் எந்த டிவியில் என்னென்ன படம் போடுராங்கன்னு தான் முதலில் பார்ப்போம். அந்த அளவு டிவியும் திரைப்படங்களும் நம்மை அடிமை படுத்தி விட்டது என்று கூட கூறலாம். Youtube பற்றி அனைவரும் அறிந்து இருப்போம் இணையத்தில் வீடியோக்களை கண்டு ரசிக்க கூகுள் நிறுவனம் வழங்கும் சேவையாகும். தற்பொழுது youtube தளத்தில் வீடியோக்கள் மட்டுமின்றி முழு நீளத் திரைப்படங்களையும் கண்டு ரசிக்கலாம். இந்த youtube தளத்தில் 1500 இந்திய திரைப்படங்களை இலவசமாக காணலாம். ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மராத்தி, குஜராத்தி இப்படி பல மொழிகளில் திரைப்படங்கள் காணப்படுகிறது.

இந்த சேனலில் ஹிந்தி மொழியில் தான் அதிக அளவு திரைப்படங்கள் காணப்படுகிறது. தமிழில் 50க்கும் அதிகமான திரைப்படங்கள் காணப்படுகிறது. இந்த youtube சேனலில் கீழே உள்ள பல்வேறு வகைகளில் திரைப்படங்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • New Releases
  • Action & Adventure
  • Animations & Cartoons
  • Classics
  • Comedy
  • Crime
  • Documentary
  • Drama
  • Family
  • Foreign Film
  • Horror
  • Indian Cinema
  • Mystery Suspense
  • Romance
  • Science Fiction
இந்த Youtube சேனலில் நாளுக்கு நாள் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. 

மொத்த திரைப்படங்களை காண - All Movies
தமிழ் திரைப்படங்களை மட்டும் காண - Tamil Movies Only

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை யூடியூபில் Live Streaming காண



இணையத்தில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்களை வைத்துள்ள தளம் யூடியுப் தளமாகும். யூடியுப் தளம் தற்பொழுது நிகழ்ச்சிகளை லைவ் வீடியோவாக பார்க்கும் வசதியை வழங்குகிறது. மெக்காவில் லைவ் வீடியோ, IPL கிரிக்கெட் போட்டிகளை லைவில் காட்டியது இந்த வரிசையில் வருகிற 16-ந்தேதி மெல்போர்னில் தொடங்க இருக்கும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை Live Streaming யூடியூபில் காணும் வசதியை உருவாக்கி உள்ளது.  கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் என்றாலே ஆட்டத்தில் அனல் பறக்கும் ரசிகர்களையும் வெகுவாக கவரும்.



இதற்க்காக australianopen என்ற புதிய சேனலை யூடியுப் தளம் உருவாக்கி உள்ளது.
  

இந்த சேனலில் சென்றால் நேரடியாக டென்னிஸ் போட்டியை காணலாம்.

இந்த யூடியுப் சேனலுக்கு செல்ல - http://www.youtube.com/australianopen

டிஸ்கி: இந்த போட்டிகள் 16 ஆம் தேதி தான் தொடங்குகிறது ஆதலால் live streaming அன்று தான் பார்க்க முடியும்.

Friday, January 13, 2012

ஆன்லைன் மூலம் ஒரே நேரத்தில் 10 பேருடன் குழும அழைப்பு ( free conference call ) செய்து MP3 கோப்பாக சேமிக்கலாம்.


ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து பேருடன் பேசும் வசதி கொண்ட அலைபேசிகள் தற்போது  இருந்தாலும் ஆன்லைன் மூலம் ஒரே நேரத்தில் 10 பேருடன் Conference call செய்து பேசிய உரையாடலை MP3 கோப்பாக மாற்றி  சேமிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஆன்லைன் மூலம் நாளும் புதிது புதிதாக சேவைகள் வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் இன்று ஒரே நேரத்தில் ஆன்லைன் மூலம் 10-க்கும் மேற்பட்ட நபர்களுடன் நேரடியாக பேசவும் அந்த உரையாடலை சேமித்து வைக்கவும் ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://keeptherecord.com
இத்தளத்திற்கு சென்று Start now என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் நம் பெயரும் இமெயில் முகவரியும் கொடுத்து உள்நுழைய வேண்டும் அடுத்து வரும் திரையில் Room Code என்று ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் இதை உங்கள் நண்பர்களுக்கு தெரிவித்து அவர்களையும் இத்தளத்திற்கு வர செய்து Room code கொடுத்து பேச ஆரம்பிக்கலாம்.கணினி வசதி இல்லாதவர்கள் குறிப்பிட்ட அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு அங்கு Room code கொடுத்து Conference call -ல் இணையலாம். யார் Room உருவாக்குகிறார்களோ  அவர்கள் எப்போது வேண்டுமானாலும் Call Cut செய்து வெளியே வரலாம், Conference call -ல் நாம் எல்லாம் பேசி முடித்தபின் இமெயில் வழியாக அந்த உரையாடலை MP3 கோப்பில் தரவிரக்க இணைப்பும் கொடுக்கிறது  இத்தளம்.  மாணவர்கள்,ஆசிரியர்கள் என Conference call பேசும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

கணிணியில் இயங்கும் மென்பொருள்களை யாரும் பார்க்காமல் மறைக்க

கணிணியை பொதுவான இடங்களில் பயன்படுத்தும் பலரும் சந்திக்கின்ற பிரச்சினை, நாம் திறந்து வைத்திருக்கும் மென்பொருள்களை யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம் வருவது தான். அலுவலகத்தில் பெரும்பாலானோர்க்கு இந்த பயம் இருக்கும். ஏனெனில் வேலைகளுக்கிடையே நம்மவர்கள் பதிவு எழுதுவது, டுவிட்டர் பயன்படுத்துவது, வீடியோ பார்ப்பது போன்ற வேறு செயல்களைச் செய்வது வழக்கமான ஒன்று. திடிரென்று மேனேஜர் அல்லது வேறு ஆட்கள் வந்து விட்டால் அப்படியே அந்த புரோகிராம்களை சாத்தி மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் இணையத்தில் நாம் செய்து கொண்டிருந்த வேலையும் அப்படியே போய் விடும்.

யாராவது வரும் போது சட்டென்று தேவையில்லாத மென்பொருள்களை மறைத்து வைத்து விட்டால் அவர்கள் சென்ற பின்னர் மறுபடியும் திறந்து கொள்கிற மாதிரி வசதியுடைய மென்பொருள்கள் இரண்டைப் பார்ப்போம். இந்த மென்பொருள்களை நாம் சிறிது நேரம் வெளியே செல்லும் போதும் போட்டு விட்டுச் செல்ல்லாம். எந்த மென்பொருளும் யார் கண்களுக்கும் புலப்படாதிருக்கும்; Task Bar இல் கூட உட்கார்ந்திருக்காது. அதே போல சிலர் புத்திசாலியாய் ALT+TAB பட்டன்களை அழுத்துவதன் மூலம் தற்போது திறந்து வைத்திருக்கிற புரோகிராம்களைப் பார்க்கலாம். இதில் அந்த வேலையும் நடக்காது.

1. NCS WinVisible

இந்த மென்பொருளில் ஒரு குறுக்கு விசையை (Shortcut Key) அழுத்துவதன் மூலம் அனைத்து மென்பொருள்களையும் இந்த மென்பொருள் உட்பட ஒரே விநாடியில் மூட முடியும். முன்னரே வேண்டாத புரோகிராம்களைத் ( யாரும் பார்க்க்கூடாத) தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதில் ஒவ்வொரு மென்பொருளாகவும் மறைக்க முடியும்.
இதன் Settings பகுதியில் சென்று Hot keys இல் உங்களுக்குப் பிடித்த குறுக்கு விசையை அமைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த மென்பொருள் எப்போதும் Hidden லேயே இருக்கும்படியும் செய்யலாம். Settings-> General -> Behaviour பகுதியில் இருக்கும் மூன்று அமைப்புகளையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Automatically check new processes,
Remember the processes I checked,
Hide Application and Tray icon

தரவிறக்கச்சுட்டி : Download WinVisible

2. Hide It

எளிமையான நிறுவத் தேவையில்லாத மென்பொருள் இது. டெஸ்க்டாப்பில் இருக்கும் ஐகான்களைக் கூட இது மறைக்கும். Task bar இல் இருக்கும் இதனைத் திறந்து எளிமையாக ஒரே கிளிக்கில் ஒவ்வொரு மென்பொருளாக அல்லது அனைத்து மென்பொருளையும் விநாடியில் மறைக்கலாம்.
இதன் இன்னொரு வசதி என்னவென்றால் தேவையான புரோகிராம்களை மறைத்து விட்டு இந்த மென்பொருளையும் Exit கொடுத்து மூடி விடலாம். பிறகு கொஞ்ச நேரம் கழித்து இந்த மென்பொருளைத் திறந்து மறைந்துள்ள புரோகிராம்களைத் திறந்து கொள்ளலாம்.

தரவிறக்கச்சுட்டி: Download HideIt

இந்த இரண்டு மென்பொருள்களில் எது உங்களுக்குப் பிடிக்கிறதோ அதைப் பயன்படுத்தி அலுவலகத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்கலாம்.

டிவிட்டரில் நம்மைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள உதவும் பயனுள்ள தளம்.


சோசியல் வலைதளங்களில் முதன்மையானதாக வலம் வந்து கொண்டிருக்கும் டிவிட்டரில் நம்மைப்பற்றியும் நாம் இதுவரை கொடுத்திருக்கும் டிவிட் பற்றி வகைகள் பற்றியும் புள்ளிவிபரத்துடன் கூற ஒரு தளம் உள்ளது  இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
டிவிட்டரில் எத்தனை பேர் நம்மை பின் தொடர்கிறார்கள் என்பதில் தொடங்கி நாம் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை என்ன என்பது முதல் அனைத்து  தகவல்களையும் கொடுத்து உதவுகிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://twtrland.com
இத்தளத்திற்கு சென்று Search என்று இருக்கும் கட்டத்திற்குள் நம் டிவிட்டரின் பயனாளர் பெயர் கொடுத்து Enter சொடுக்கினால் போதும் அடுத்து வரும்  திரையில் எத்தனை பேர் நம்மை பின் தொடர்கின்றனர், இதுவரை நாம் எத்தனை டிவிட் செய்திருக்கிறோம்,அதிகமாக டிவிட்டரில் நாம் பயன்படுத்தும் வார்த்தை, இணைப்பு (Link) கொடுத்துஎத்தனை டிவிட் செய்திருக்கிறோம்,  Link இல்லாமல்  எத்தனை டிவிட் செய்திருக்கிறோம், எத்தனை டிவிட் செய்திகளை ரீடுவிட் செய்திருக்கிறோம் போன்ற அனைத்து தகவல்களையும் கொடுக்கின்றனர்.  யாருடைய டிவிட்டர் பயனாளர் பெயரும் கொடுத்து நாம் அவர்களை பின் தொடர்பவர்கள் மற்றும் அவர்கள் செய்த டிவிட் என அனைத்தையும் முழுமையான தெரிந்து கொள்ளலாம், டிவிட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும்  இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Thursday, January 12, 2012

கணினியில் உங்களின் முக்கியமான பாஸ்வேர்ட்களை கவனமாக பாதுகாக்க - KeePass Safe2.18

போட்டிகளும், பொறாமைகளும் நிறைந்த உலகில் ஹாக்கிங் செயல்களில் இருந்து உங்கள் கணக்குகளை பாதுகாக்க மிகவும் கடினமான கடவுச்சொற்களை உங்கள் கணக்குகளுக்கு கொடுத்து இருப்பீர்கள். இது போல ஒவ்வொரு கணக்கிருக்கும் வெவ்வேறான கடவுச்சொற்களை கொடுத்து இருப்பதால் அதை அனைத்தையும் ஞாபகம் வைத்து கொள்வது இயலாத காரியம். ஏதாவது ஒரு கணக்கை ஒரு வாரம் கழித்து ஓபன் செய்தால் ஒரு சிலருக்கு சுத்தமாக அந்த பாஸ்வேர்ட் மறந்து விடும். ஒரே பாஸ்வேர்ட் கொடுத்தாலும் ஹாக்கிங் பிரச்சினை வெவ்வேறு பாஸ்வேர்ட் கொடுத்தாலும் மறந்து விடும் பிரச்சினை என ஒரே பிரச்சினையாக உள்ளதா உங்களுக்காகவே ஒரு பயனுள்ள இலவச மென்பொருள் உள்ளது.


இந்த மென்பொருளில் உங்களின் அனைத்து பாஸ்வேர்ட்களையும் சேமித்து அனைத்திற்கும் சேர்த்து ஒரே மாஸ்டர் பாஸ்வேர்ட் கொடுத்து கொள்ளலாம். அந்த மாஸ்டர் பாஸ்வேர்ட் மட்டும் ஞாபகம் வைத்து கொண்டால் போதும் அனைத்து பாஸ்வேர்ட்களையும் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டியதில்லை.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
  • நம்முடைய பாஸ்வேர்ட்களை மற்றவர்கள் பார்க்க முடியாதவாறு மிகவும் கவனமாக பாதுகாக்கும்.
  • அனைத்து பாஸ்வேர்ட்களுக்கும் பதிலாக ஒரே மாஸ்டர் பாஸ்வேர்டை மட்டும் ஞாபகம் வைத்து கொண்டால் போதும் மற்றவைகளை சுலபமாக அறிந்து கொள்ளலாம். 
  • யாரும் ஹாக் செய்ய முடியாத கடினமான கடவு சொற்க்களை இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம்.
  • குறிப்பிட்ட ஒரு பைலை மாஸ்டர் பாஸ்வேர்டாக தேர்வு செய்யும் வசதி.
  • பாஸ்வேர்ட்களை ஈமெயில்,விண்டோஸ்,இன்டர்நெட் என தனிதனி பிரிவுகளாக சேமித்து கொள்ளும் வசதி.
  • 2MB அளவே உடைய மிகச்சிறந்த ஓபன் சோர்ஸ் மென்பொருளாகும்.
  • Username கொடுத்தால் பாஸ்வேர்ட் தானாகவே வரும் Auto-type வசதி உள்ளது. மற்றும் இந்த மென்பொருளில் இருந்து பாஸ்வேர்டை காப்பி செய்து இணையத்தில் பேஸ்ட் செய்து கொள்ளலாம்.
  • போர்ட்டபிள் மென்பொருள் என்பதால் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
மற்றும் ஏராளமான வசதிகள் உள்ளது. உபயோகித்து பாருங்கள் உங்களுக்கே புரியும் இதன் பயன்கள்.

KeePass உபயோகிப்பது எப்படி:
  • முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்தால் வரும் ZIP பைலை Extract செய்து Keepass என்ற பைலை ஓபன் செய்யுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள New என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் உங்களின் Master Password தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • மாஸ்டர் பாஸ்வேர்ட் தேர்வு செய்ததும் அடுத்து கீழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் உங்களின் பாஸ்வேர்ட் வகையை தேர்வு செய்து கொண்டு Add Entry என்ற பட்டனை அழுத்தி உங்கள் பாஸ்வேர்டை சேமித்து கொள்ளலாம்.
  • இதே முறையில் உங்களையுடைய அனைத்து பாஸ்வேர்ட்களையும் இந்த மென்பொருளில் சேமித்து கொள்ளுங்கள்.
  • மற்றும் இந்த மென்பொருள் மூலம் மிக கடினமான பாஸ்வேர்ட்களை உருவாக்கலாம். இதற்கு Tools - Password generate சென்று கடினமான பாஸ்வேர்ட்களை உருவாக்கி கொள்ளலாம்.
  • இதன் மூலம் உருவாக்கும் பாச்வேர்ட்கள் தானாகவே இந்த மென்பொருளில் சேமிக்கப்படும்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய- KeePass2.18