Tuesday, January 10, 2012

ஜிமெயிலில் Attachment லோகோவை மாற்ற

ஜிமெயில் மட்டுமின்றி அனைத்து ஈமெயில் சேவைகளிலும் மெயிலில் attachment வந்திருந்தால் ஒரு பின்  போன்ற லோகோ தெரிவதை பார்த்து இருப்பீர்கள். அட்டாச்மென்ட்டில் எந்த பைல் வந்திருந்தாலும் அனைத்திற்கும் இந்தே ஒரே மாதிரியான லோகோ காட்டுவதால் மெயிலை திறந்து பார்க்காமல் உள்ளே என்ன வகையான பைல் உள்ளது என்பதை கண்டறிய முடியாது. இதனை மாற்றி எந்த பைல் அட்டாச்மென்ட்டில் உள்ளதோ அந்த பைலின் லோகவை தெரிய வைப்பது எப்படி என கீழே பாருங்கள். கீழே உள்ள புகைப்படங்களை பாருங்கள் இதற்க்கு உள்ள வித்தியாசம் தெரியும்.

மாற்றுவதற்கு முன் 


மாற்றிய பிறகு 

ஜிமெயிலில் Attachment லோகோவை மாற்ற:

குரோம் நீட்சி என்பதால் குரோம் இது போன்று அட்டாச்மென்ட் லோகோவை மாற்ற குரோம் பிரவுசர் உபயோகப்படுத்த வேண்டும். முதலில் குரோம் பிரவுசரில் இந்த லிங்கில் சென்று மேலே உள்ள Added to Chrome என்பதை கொடுக்கவும். சிறிய விண்டோ வரும் அதில் Install என்பதை கொடுக்கவும்.


மிக சிறிய நீட்சி என்பதால் உடனே உங்கள் பிரவுசரில் இனைந்து விடும். இப்பொழுது உங்கள் ஜிமெயிலில் வந்துள்ள அட்டாச்மென்ட் ஈமெயில்களை பாருங்கள் லோகோ மாறி இருக்கும். இனி மெயில்களை திறக்காமலே உள்ளே என்ன வகையான பைல் அட்டாச்மென்ட் செய்யப்பட்டுள்ளது என காணலாம்.

ஜிமெயில் Search Box ல் has:attachment என கொடுத்தால் அனைத்து அட்டாச்மென்ட் மெயில்களையும் காணலாம்.

No comments:

Post a Comment