நம் வலைப்பூவிற்கு அல்லது டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நமக்கென்று விரும்பிய டிசைனில் பேக்ரவுண்ட் எளிதாக உருவாக்கி வைத்துக் கொள்ளலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஆன்லைன் மூலம் பலதரப்பட்ட சேவைகள் கிடைத்து வரும் நிலையில் பலபேருக்கு அறியப்பட்டதாத ஒரு சேவைதன் இந்த Pattern டிசைன் வடிவமைப்பு, பல தளங்களில் இருந்து தான் பேக்ரவுண்ட் எடுக்க வேண்டும் என்பதில்லை நம் விருப்பப்படி Pattern உருவாக்க உதவுகிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://editpattern.com
இத்தளத்திற்கு சென்று வலது பக்கம் இருக்கும் பிக்சல் அள்வில் நமக்கு எந்த அளவு வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துகொண்டு, இடது பக்கம் இருக்கும் Pencil என்ற பொத்தானை சொடுக்கி வரைய வேண்டிய கட்டத்திற்குள் வரைய ஆரம்பிக்க வேண்டியது தான். வரைய வரைய நம் பார்த்துக்கொண்டிருக்கும் இணையதள பக்கமும் இந்த Pattern -க்கு தகுந்தாற் போல் மாற்றம் ஏற்படும், தவறுதலாக வரைந்தால் மாற்றம் செய்ய Eraser என்பதை சொடுக்கி எளிதாக நீக்கிவிடலாம், நமக்கு பிடித்த டிசைன் நம் தளத்தின் பேக்ரவுண்டில் வந்தால் எப்படி இருக்கும் என்பதை உருவாக்கும் போதே தெரிந்து கொள்ள உதவும்.Pattern உருவாக்கி முடித்ததும் Get Image என்பதை சொடுக்கி நம் கணினியில் PNG அல்லது ICO ( ஐகான்) ஆக சேமிக்கலாம். Pattern மூலம் அழகான டிசைன் உருவாக்க விரும்புபவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment