ஹாக்கர்ஸ்” இந்தப் பெயரைக் கேட்டாலே நம்ம கணணிகளுக்கெல்லாம் சும்மா அதிருமில்ல!!! முழிச்சிட்டிருக்கும்போதே முழியைத்தோண்டி எடுத்துக்கொண்டுபோகும் வகையறாக்கள்தான் இந்த ஹாக்கர்கள்,
நமது கணனியில் நாம் சொல்லாமலேயே தன்னிச்சையாக கொடுங்கோலாட்சிபுரியும் வைரஸ்களை உருவாக்கும் கர்த்தாக்கள் இவர்கள்தான், ஆனாலும் இவர்களால்த்தான் அந்த வைரஸ்களை அழிக்கவும் தீர்வுகள் வழங்கப்படுகின்றது, ஒரே சமயத்தில் ஆக்கவும் அழிக்கவும் செய்யும் கணணியுக கடவுள்கள்தான் இவர்கள், அறிவியலைப்பயன்படுத்தி மிக அழகாகத் திருடும் இவர்களை கண்டு பல பெரிய பெரிய வல்லரசுகளே பயந்து நடுங்குகின்றன,
அண்மையில் கூட ஈரானிய ஹாக்கர்கள் அமெரிக்க வேவுவிமானத்தை ஹாக்செய்தமை யாவருக்கும் தெரிந்திருக்கலாம்,அதுபோல கூகிளையும், பேஸ்புக்கையும் துண்டைக்காணோம் துணியைக்காணோம் எனக் கதறவைக்கும் சீனக் ஹாக்கர்களைப்பற்றியும் அறிந்திருப்பீர்கள், மேலும் பல ஹாக்கர்கள், நாசா, மைக்ரோசாப்ட், சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போன்றவற்றை ஹாக் செய்த சாகசத்தையும் படித்திருப்பீர்கள், அத்தகைய ஹாக்கர்களில் உலகம் முழுவதும் எமகிங்கரர்களாகத் திகழும் 5 ஹாக்கர்கள் பற்றிய தகவலை சிரட்டை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றது
01.எரிக் கோர்டன் கோர்லி
சிறுவனாக இருக்கும்போதே DcCSS எனப்படும் கோடிங் முறையை ஹாக்செய்து வினியோகம் செய்தவர் என அறியப்படுகின்றது
02. ஃப்ரெட் கோஹென்
அமெரிக்காவில் உள்ள சிறந்த கணணி விஞ்ஞானிகளில் ஒருவர், மேலும் கணணி வைரஸ்களுக்கான மிகச்சிறந்த பாதுகாப்பு நுட்பங்களைக் கண்டுபிடித்தவர்
03.ராபர்ட் ராப்பன் மோரிஸ்
இண்டர்நெற்றின் முதல் கணனி வைரஸான மோரிஸ் வார்மை உருவாக்கிய பெருமைக்குரியவர்
04.விளாடிமிர் லெவின்
ஐக்கிய அமெரிக்காவின் சிட்டிபாங்கைக் ஹாக் செய்து வெற்றிகரமாக 10.7 மில்லியன் டாலர்களை பரிமாற்றம் செய்தவர்
05.கெவின் மிற்நிக்
அமெரிக்காவின் மிக முக்கியமான கணணி குற்றவாளிகளில் ஒருவர், முதலில் சிறு சிறு குற்றங்களே புரிந்தாலும், கைதுசெய்யப்படும் நேரத்தில் குற்றவாளிகள் பட்டியலில் முன்னிலையில் இருந்தார்
No comments:
Post a Comment