ஒரு சிறு உதவி அடுத்தவர் நமக்கு செய்தாலும் உடனடியாக நாம் யோசித்து முடிப்பதற்குள் நம் வாயில் இருந்து வரும் வார்த்தை “Thanks “, நன்றி என்ற வார்த்தையை எப்படி எல்லாம் சொல்லலாம் என்று சொல்லி நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
செயல்கள் எல்லாம் முடிந்த பின் சொல்லும் வார்த்தை நன்றியாக இருந்தாலும் சில பேர் சாதாரனமாக நன்றி என்று சொல்லாமல் அதை ஒரு கடிதத்தில் எழுதி கொடுத்து நம் மனதை விட்டு நீங்காத இடம் பிடித்துவிடுகின்றனர், எப்படி எல்லாம் நன்றி சொல்லலாம் என்று நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://thankuz.com
இத்தளத்திற்கு சென்று Signup என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையலாம் அதன் பின் Explore என்பதை சொடுக்கி பல்வேறு நன்றி கடித்தங்களை பார்க்கலாம், ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறை சார்ந்தும் இருக்கிறது, வேலைக்கு நன்றி சொல்வதில் தொடங்கி ஆபத்தில் உதவி செய்வதவர்களுக்கு நன்றி சொல்வது
வரை எப்படி எல்லாம் நன்றி சொல்லலாம் என்பதை பட்டியலிட்டு காட்டுகிறது. நம் பெயர் மற்றும் சில விபரங்களை கொடுத்து எளிதாக நாம் நன்றி சொல்லலாம் அந்த நன்றியை அப்படியே URL மூலம் சொல்ல வேண்டியவர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம். நன்றி என்பதை எப்படி எல்லாம் சொல்லலாம் என்று தேடுபவர்களுக்கு இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:
Post a Comment